Tuesday, May 5, 2020

வேலன்:-இணையம் மூலம் அனைத்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க -Yupptv.

இணைய தொடர்பு மூலம் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரலையாக பார்வையிட இந்த இணையதளம் பயன்படுகின்றது. இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும்.
இதன் வலதுமேல்புறம் Languages என்பதனை கிளிக் செய்திடவும்.இதில் நிறைய  மொழிகள் கொடுத்துள்ளார்கள்.நமக்கு  தேவையான மொழியை தேர்வுசெய்து சேவ் செய்யவும்.


வரும் விண்டோவில் நீங்கள் தேர்வு செய்த மொழியின் அனைத்து சேனல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதில் செய்திகள்.திரைப்படங்கள்.விளையாட்டுக்கள்.பாடல்கள் என பிரிவுகள் இருக்கும் தேவையான பிரிவினை தேர்வு செய்திடவும்.






விரும்பிய சேனலை தேர்வு செய்திட்டபின் இதில் உள்ளப்ளே பட்டனை கிளிக் செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக ஆரம்பிக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.



No comments:

Post a Comment