Friday, July 31, 2020

வேலன்:-புகைப்படங்களை அனிமேஷன்படங்களாக மாற்றிட -Honey Cam

டெக்ஸ்டாப்பில் நாம் காணும் வீடியொ பைல்களை அனிமேஷன் பைல்களாக மாற்றவும்.புகைப்படங்களை அனிமேஷன் படமாக மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்கள் கணினியில் உள்ள வீடியோவினை பதிவு செய்திட இந்த விண்டோ பயன்படுகின்றது. தேவையான வீடியோவினை ஒடவிடவும். தேவையான ப்ரேம் தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள ரெக்கார்ட் பட்டனை கிளிக் செய்யவும். ரேக்கார்ட் முடிந்ததும் ஸ்டாப் பட்டனை கிளிக் செய்யவும்.

புகைப்படங்களில் நீங்கள் அனிமேஷன் கொண்டுவர புகைப்படங்களை தேர்வு செய்திடுங்கள்.

 நீங்கள் தேர்வு செய்த புகைப்படங்கள் வலதுபுற விண்:டோவில் வந்துவிடும் பின்னர் நீங்கள் புகைப்படத்தின ;பெயரை தேர்வு செய்திட அதன்ப்ரிவியூ உங்களுக்கு கீழே தெரியும்.
 இதில் உள்ள எடிட் கிளிக செய்து வேண்டி ஆப்ஷன்கள் நீங்கள்கொண்டுவரலாம்.
 ஒவ்வொரு ப்ரேமும் எவ்வளவு நேரம் ஓடவேண்டும் என்பதனை தேர்வு செய்திடலாம்.
 நீங்கள் புகைப்படத்தின் இமெஜ் அளவினையும் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினையும் தேர்வு செய்திடலாம்.
 இறுதியாக நீங்கள் ப்ரிவியூவினை பார்வையிடலாம். நீங்கள் சேமிக்கவிரும்பும் இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புகைப்படங்கள் அனிமேஷன் படமாக மாறி உள்ளதை காணலாம். இதனை மற்றவர்களுக்கு நீங்கள் அனுப்பலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Thursday, July 30, 2020

வேலன்:-விரும்பிய பாடல்வரிகள். இசைதொகுப்பினை ரிங்டோனாக கொண்டுவர:-Bigasoft ringtone maker.

நாம் பயன்படுத்தும் செல்போன்களில் ரிங்டோனாக விரும்பிய பாடல்கள் மற்றும் இசையினை நாம் விருப்பப்படி கொண்டுவரலாம். இதனை கொண்டு வர இந்த ரிங்டோன் மேக்கர் பயன்படுகின்றது. இதனை இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம ;செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் தேவையான பாடலினை தேர்வு செய்யவும். பின்னர் அதனை இதில் உள்ள ப்ளேயரில் ஒலிக்கவிடவும். நீங்கள் விரும்பிய இடம் வந்ததும் இடம் பெரும் துவக்க நொடியையும் ;பாடல் முடியும் இறுதி நொடியையும் குறித்துகொள்ளவும்.
பின்னர் நீங்கள்இதனை சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்திடவும. பின் இதில் உள்ள Generator என்பதனை கிளிக் செய்திட உங்களுக்கான பாடல்வரிகள்.இசைகள் நீங்கள் சேமித்த இடத்தில் சேமிப்பாகும். பின்னர் அதனை எடுத்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Wednesday, July 29, 2020

வேலன்:-வீடியோக்களை தேவையான இடத்தில் வெட்டிஎடுக்க -Vid Cutter.

சில வீடியோக்கள் பார்க்கும் சமயம் நமக்கு பிடித்த பாடல்கள்.பிடித்த வரிகள்.பிடித்த சண்டைக்காட்சிகள்.பிடித்த இடங்கள் என காட்சிகள் இடம்பெறும். அவ்வாறு இடம் பெறும் வீடியோ காட்சிகளை ஆடியோவுடன் சேர்த்து வெட்டி எடுத்து தனி வீடியோவாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு பிடித்தமான வீடியோ பைலினை தேர்வு செய்திடவும்.
வீடியோவினை ஓடவிடவும். தேவையான காட்சி வீடியோவில்வந்ததும் இதில்உள்ள ஸ்டார்ட் கிளிப் என்பதனை கிளிக்செய்யவும். பிறகு தேவையான காட்சி நிறைவு பெற்றதும் இதில் உள்ள என்ட் கிளிப் என்பதனை கிளிக் செய்திடவும்.

 உங்களுக்கான வீடியோ வலதுமூலையில் சேமிப்பாவதை காண்பீர்கள். இதில் கீழே நீங்கள் ;பார்க்கும் வீடியோவின் தம்ப்நெயில வியூவினையும் நிங்கள் காணலாம். ஸ்லைடரை நகர்த்தியும் நீங்கள் காட்சிகளை பார்வையிடலாம்.
 தேவையான காட்சிகள் உங்கள் கிளிப் இன்டெக்ஸ்ஸில் இருப்பதை காணலாம்.
இறுதியாக நீங்கள் சேவ் மீடியா கிளிக் செய்து நீங்கள் சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்யவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான வீடியோவானது இருப்பதை காணலாம்.
வீடியோக்களை நீங்கள் ஒன்றாக சேமித்தும் தேவையில்லாததினை நீக்கியும் பயன்படுத்தலாம். மேலும் இதில் நாம் தேர்வு செய்யும் வீடியோவினை ஓடும் நேரமும் நாம் தேர்வு செய்ய்லாம். பயன்படுத்த சுலபமாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, July 28, 2020

வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.

கணினி பயன்படுத்துகையில் நாம் முகநூல் எவ்வளவநேரம் பயன்படுத்தினோம்,கணினியில் எவ்வளவு நேரம் விளையாடினோம்,இணையம் எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம்,கணினி எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம் என அறிந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து ஒப்பன் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக்செய்திடவும். இப்போது இதில் உள்ள பேஸ்புக்,விளையாட்டு,இன்டர்நெட்மற்றும் கணினி பயன்பாடு அனைத்து ரீடிங்கும் ஒட ஆரம்பிக்கும்.
 இதில் உள்ள ரிப்போர்ட் கிளிக் செய்திட உங்களுக்கு விண்:டோ ஓப்பன் ஆகும். அதில் Internet Social Use.Games Use.Internet Use.Computer Use.Software Use.Website Use.Details என டேப்புகள்கொடுத்துள்ளார்கள். 
இதில் தேவையானதை நாம் தேர்வு செய்தால் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் நாம் எந்த மென்பொருளை எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம் என அறிந்துகொள்ளலாம்.மேலும் கணினியில் பயன்படுத்திய அனைத்துவிவரங்களும் நாம் அறிக்கையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நாம் அலுவலக பயன்பாட்டிலும் சரி.வீட்டு பயன்பாட்டிலும் சரி...கணினியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினார்கள் என எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, July 24, 2020

வேலன்:-முகநூல் (பேஸ்புக்)வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Facebook Downloader.

முகநூல் (பேஸ்புக்) பயன்படுத்தாதவர்கள் இப்போது குறைவு. நிறைய பேஸ்புக் புகைப்படங்கள். வீடியொக்கள் இப்:போது வருகின்றது. சில வகை வீடியோக்களை நாம் பார்த்து ரசிப்பதுடன் அதனை சேமித்துவைக்கவும் விரும்புவோம் அவ்வாறு வீடீயோக்களை சுலபமாக சேமித்துவைக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இந்த இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக்செய்திடவும். இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு; கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.

இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் ;செய்து நீங்கள் வீடியோவினை அதே தரத்தில பதிவிறக்கம் செய்ய போகின்ற்ீர்களா - அல்லது வேறு பார்மெட்டில் பதிவிறக்கம் செய்யப்போகின்றீர்களா என்பதனை தேர்வு செய்திடவும்.
பின்னர் நீங்கள் பேஸ்புக்வீடியோவின் யூஆர்எல் முகவரியை காப்பிசெய்து பின்னர் இதில் பேஸ்ட் செய்திடவும்.

சிலவினாடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான வீடியோவானது நீங்கள் சேமித்த இடத்தில் சேமித்த பார்மெட்டில் இருப்பததை காணலாம். நமக்கு இதனால் கணிசமான நேரம் மிச்சமாகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Thursday, July 23, 2020

வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர் -Apowersoft PDF Converter

பிடிஎப் பைல்களை வேறு பார்மெட்டுக்கு மாற்றவும்,வேறு பார்மெட் பைல்களை பிடிஎப்பாக மாற்றவும்.பிடிஎப் பைல்களை ஒன்றிணைக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்க்ம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 தேவையான பிடிஎப் பைலினை தேர்வு செய்து உங்களுக்கு எந்த பார்மெட்டில் தேவையோ -வேர்ட்.எக்ஸெல்,பவர்பாயிண்ட்.ஜெபெக் என தேவையான பார்மெட்டினை தேர்வு செய்து பின்னர் சேமிக்கும் இடத்தினையும் தேர்வு செய்திடவும்.இறுதியாக ஸ்டார்ட் கன்வர்டிங் கிளிக் செய்திடவும். உங்களுக்கான பைலானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் இருப்பதனை காணலாம். அதுபோல டாக்குமெண்ட்.புகைப்படங்களை நீங்கள் பிடிஎப்ஆக மாற்றவிரும்பினால் மேற்கண்டவாறு தேர்வு செய்து கன்வர்டிங் கொடுத்தால் உங்கள் பைலானது பிடிஎப்பாக மாறிவிடும்.
 அதுபோல ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை ஒரே பைலாக மாற்றவும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவையான பிடிஎப் பைல்களை தேர்வு செய்திடவும.பின்னர் இதில் உள்ள ஸ்டார்ட கன்வர்டிங் கிளிக்செய்தால் உங்கள் பைலானது மாற ஆரம்பிக்கும்.

நீங்கள் கன்வர்டிங் கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் ஒகே கொடுத்து பின்னர் நீங்கள் சேமிக்க விரும்பிய இடததில் சென்று பார்த்தால் உங்களுக்கான பைலானது இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Wednesday, July 22, 2020

வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.

தவறுதலாக டெலிட் செய்த பைல்களையும் பழைய பைல்களையும் ஹார்ட்டிஸ்கிலிருந்து மீட்டுஎடுக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நமக்கு தேவையான புகைப்படங்களையோ.வீடியோக்களையோ.ஜிப் பைல்களையோ.டாக்குமெண்ட்டுகளையோ.ஜிமெயில் பைல்களையோ,ஆடியோ பைல்களையோ என எதுவேண்டுமோ அதனை மீட்டுஎடுக்கலாம். அல்லது குறிப்பிடட பைல்மட்டும் வேண்டுமானாலும் அதனை தேர்வு செய்து  மீட்டுஎடுக்கலாம். தேவையானதை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள அடுத்து பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் கணினியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கப்படும். நீங்கள்பென்டிரைவிலிருந்து மீட்டுஎடுக்கவேண்டுமானால் பென்டிரைவினை கணினியில் இணைத்து அதன் டிரைவினை தேர்வு செய்திடவும்.

 தேவையானதை தேர்வு செய்தபின்னர் அடுத்துள்ளதை கிளிக் செய்யவும். உங்கள் டிரைவானது ஸ்கேன் செய்யப்பட்டு பைல்கள் டவுண்லோடு ஆகும்.
ஸ்கேன் செய்து முடித்ததும் உங்களுக்கு ஸ்கேன் கம்ளிட்டட் என்கின்ற தகவல் கிடைக்கும்.
 நீங்கள் மீட்டுஎடுக்கப்பட்ட பைல்களின் விவரம் உங்களுக்கு கிடைக்கும். அதன் ப்ரிவியூவினையும் நீங்கள் காணலாம்.
இறுதியாக தேவையானதை தேர்வு; செய்து பின்னர் இதில் உள்ள ரெக்கவர் பட்டனை கிளிக் ;செய்தால் உங்களுக்கான ரெக்கவர்பைல்கள் நீங்கள் விரும்பும் இடத்தில் சேமிப்பாகும். அங்கிருந்து எடுத்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Monday, July 20, 2020

வேலன்:-இணைய யூஆர்எல் முகவரிகளை எளிதில் அறிந்துகொள்ள-Internal Link Analiyzer Tool

சில இணையதளங்களில் இணைய இணைப்பை லிங்க் ஆக இணைத்திருப்பார்கள். அந்த இணையதளம் செல்ல லிங்க்கை நாம் கிளிக் செய்து அந்த இணையதளம் செல்லவேண்டும்.அவ்வாறு லிங்க்காக இணைக்கப்பட்டிருக்கும் லிங்க்குகளை நாம் எளிதாக கண்டறியாலாம். அதற்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இதன் இணையதளம் செல்ல உங்களுக்கான இந்த பக்கம் திறக்கும். அதில் நீங்கள் காணவேண்டிய இணையதள லிங்கின் யூஆர்எல் முகவரியை இணைக்கவும்.




சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் அந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து யூஆர்எல முகவரிகளையும் நீங்கள் எளிதில் காணலாம்.

இதில தேவையானலிங்க் நேரடியாக கிளிக் செய்தோ காப்பி செய்தோ பயன்படுத்தலாம். இதனால் நமக்கு நேரம் மிச்சமாவதுடன் வேலை சுலபமாகும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, July 17, 2020

வேலன்:-புகைப்படங்கள் மற்றும் டாக்குமெண்ட்டுக்களைமற்றவர்கள் பார்வையிலிருந்து மறைக்க -Pixeloid

புகைப்படங்கள் மற்றும் டெக்ஸ்ட் பைல்களை மற்றவர்களுக்கு கொடுக்கவும் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 தேவையான புகைப்படமோ அல்லது டெக்ஸ்ட் பைலினையோ தேர்வு செய்யவும். கடவுச்சொல் தேவையானால் கொடுக்கலாம்.
 புகைப்படமோ -டெக்ஸ்ட் பைலினையோ தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 வரும் பைலினை நீங்கள் விரும்பும் நபருக்கு கொடுக்கலாம். மற்றவர்கள் பார்த்தாலும் புள்ளிகளாகதான் தெரியும். மீண்டும் புகைப்படம்  அல்லது டெக்ஸ்ட் பைலினை பழையபடி கொண்டு வர இந்த மென்பொருளை ஒப்பன் செய்திடவும்.
 கன்வர்ட் பிக்ஸ்லாயிட்  என்பதனை கிளிக் செய்திட உங்களுக்கான கடவுச்சொல்லினை உள்ளீடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான புகைப்படம் திறக்கும்.
முக்கியமான டாக்குமெண்ட்டுகள் புகைப்படங்களை நாம் விரும்பும் மாறு மாற்றி மற்றவர்கள் பார்வையிலிருந்து காப்பற்றலாம். பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Wednesday, July 15, 2020

வேலன்:-போட்டோஷாப்பிற்கு மாற்றாக போட்டோலைன் -photoline

நீங்கள் போட்டோஷாப்பில் செய்யும் வேலைகள் அனைத்தையும் இந்த மென்பொருள் மூலம் செய்திடலாம். அளவு குறைவாகவும். குறைந்த இடத்தினையும் பிடிக்கும் இந்த ;மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதன்வலதுபுறம் போட்டோஷாப்பில் வருவது போன்ற டூல்கள் கொடுத:துள்ளார்கள். தேவையானதை கிளிக் செய்து பயன்படுத்தலாம்.




லேயர்கள் கொண்டுவருதல்,வேண்டிய பார்மம் கொண்டுவருதல். அளவினை குறைத்தல்.பின்புலம் மாற்றுதல்,ப்ரைட்நஸ் கொண்டுவருதல் என அனைத்துபணிகளும் செய்திடலாம்.
இதனை பயன்படுத்துவதற்கான டுடொரியல் கொடுத்துள்ளார்கள்.


இதுதவிர ஆன்லைனிலும் நீங்கள் ;இதற்கான விளங்கங்கள் பெறலாம்.குறைந்த கொள்ளளவு,அதே தரம் கொண்ட இந்த மென்பொருளை போட்டோஷாப்பிற்கு பதிலாக நீங்கள் பயன்படுத்தி அதே பலன்களை பெறலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, July 14, 2020

வேலன்:-பதிவிறக்கம் செய்கையில் ப்ரிவியூ பார்க்க -U Torrent Web.

இணையதளத்தில் டோரன்ட் பைல்கள் மூலம் பதிவிறக்கம் செய்கையில் வீடியோக்களின் தரத்தினை நாம் முழுவதும்பதிவிறக்கம் செய்து முடித்ததும் தான் காணமுடியும். ஆடியோ சரியில்லாமல் இருந்தாலோ -வீடியோவின் தரம் குறைவாக இருந்தாலோ பதிவிறக்கம் செய்தது வீணாகிவிடும். நேரம் பணம் அனைத்தும் வீணாகிவிடும். இந்த குறையை போக்க யு டோரன்ட் புதிய வசதியை அறிமுகப்படுத்திஉள்ளது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.  

 இதனை பதிவிறக்கம் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும். உங்கள் டோனரன்ட் பைலினை தேர்வு செய்யவும்.
உங்களுக்கான டோரன்ட் தேர்வு செய்ததும் உங்களுக்கான வீடியோவானது ப்ரிவியூ தெரிய வரும்.
 படத்தின் ப்ரிவியூ பார்த்து விடியோவின் தரத்தினையும் ஆடியோவினையும் கண்டு படத்தினை மேற்கொண்டு பதிவிறக்கம் செய்வதோ வேண்டாமோ என நாம் முடிவு செய்துகொள்ளலாம்.
 இதில் நீங்கள் எவ்வ்ளவு பைல்கள் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு வீடியோபைல்களையும் ப்ரிவியூபார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்து முடித்ததும் நீங்கள் சேமித்த இடத்தில் சென்று வீடியோவினை கண்டுகளிக்கலாம். பயன்படத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Monday, July 13, 2020

வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.

நவீன் தொழில்நுட்பத்தில் புதுபுது கண்டுபிடிப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன...அவற்றிற்கான தூய தமிழ்சொல் நிறைய பேருக்கு தெரிவதில்லை. இங்கே நாம்பயன்படுத்தும் சில அப்ளிகேஷன்களின் தமிழ்யெரை கீழே கொடுத்துள்ளேன்.

1. WhatsApp      -      புலனம்

2. youtube          -      வலையொளி

3. Instagram      -      படவரி

4. WeChat          -        அளாவி

5.Messanger    -        பற்றியம்

6.Twtter              -        கீச்சகம்

7.Telegram        -        தொலைவரி

8. skype            -          காயலை

9.Bluetooth      -          ஊடலை

10.WiFi            -          அருகலை

11.Hotspot        -          பகிரலை

12.Broadband  -        ஆலலை

13.Online          -        இயங்கலை

14.Offline            -        முடக்கலை

15.Thumbdrive  -        விரலி

16.Hard disk      -        வன்தட்டு

17.GPS                -        தடங்காட்டி

18.cctv                -        மறைகாணி

19.OCR              -        எழுத்துணரி

20 LED              -        ஒளிர்விமுனை

21.3D                  -        முத்திரட்சி

22.2D                -        இருதிரட்சி

23.Projector      -        ஒளிவீச்சி

24.printer          -        அச்சுப்பொறி

25.scanner        -        வருடி

26.smart phone  -      திறன்பேசி

27.Simcard          -      செறிவட்டை

28.Charger          -        மின்னூக்கி

29.Digital            -        எண்மின்

30.Cyber            -          மின்வெளி

31.Router          -        திசைவி

32.Selfie            -        தம் படம் - சுயஉரு - சுயப்பு

33 Thumbnail              சிறுபடம்

34.Meme          -        போன்மி

35.Print Screen -          திரைப் பிடிப்பு

36.Inkjet            -          மைவீச்சு

37.Laser            -          சீரொளி

முடிந்தவரை தமிழ்சொல்லினை பயன்படுத்துங்கள்.தமிழை வளர்த்துவிடுங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.
 

Friday, July 10, 2020

வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.

புகைப்படங்கள்.ஆடியோ.வீடியோ.டாக்குமெண்டுக்கள் என அனைத்தையும் பார்வையிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 1 எம்.பி.க்குள் கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்திட உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள இமேஜ் செட் கிளிக் ;செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.தேவையானதை தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்திடும் போல்டரில் உள்ள புகைப்படங்கள் தம்ப்நெயில் வியூவில் உங்களுக்கு கீழே தெரியவரும்.
 புகைப்படங்கள் பற்றிய விவரம் அறிந்துகொள்ள இதில உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
 இமேஜ் பைல்கள் அது எந்த பார்மெட்டில் இருந்தாலும் இதில் சுலபமாக திறந்துபார்க்கலாம். மேலும் இது வீடியோ.ஆடியோ.டாகுமெண்ட பைல்களையும் எளிதில் பார்வையிட பயன்படுகின்றது.
புகைப்படங்களை நாம் ஸ்லைட்ஷோவாக பார்க்கும் வசதி உள்ளது. அதுபோல வீடியோ பைல்களையும் ஆடியோ பைல்களையும் பார்வையிடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் தனிதனி மென்பொருட்கள் வைத்தில்லாமல் ஒரே அப்ளிகேஷனில் எல்லா வகை பைல்களையும் நாம் பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Thursday, July 9, 2020

வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.

1. பிரதான நகரங்களின் தற்போதைய நேரத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயின் "time in " என்ற விதத்தில் டைப் செய்து தேடிக் கொள்ள முடியும். உதாரணம்: "time: London" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் கொழும்பின் தற்போதைய நேரத்தை அறிந்து கொள்ள முடியும்





2. கூகுள் கல்கூலேடர் மூலம் அடிப்படை கணித முறைகளை செய்து கொள்ளுவதுடன் பை, கொஸ், தான், ரூட் போன்ற கடினமான கணிப்புகளையும்  செய்து கொள்ள முடியும். உதாரணம் ; 10 + 20 என்று டைப் செய்து தேடவும், கூகிள் கல்குலேட்டர் திரையில் தோன்றும். அதன் மூலம் எல்லா வகையான கணிப்புகளையும் செய்து கொள்ள முடியும்



3.அலகு மாற்றி மூலம் நாணய மாற்று விகிதங்களையும் தூர, நிறை அளவுகளையும் மாற்றி பெற்றுக் கொள்ள முடியும்.  உதாரணம்:  "1 USD in LKR" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் நாணய மாற்று விகிதத்தை பெற்றுக் கொள்ளலாம் "1 km in inches" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் தூர அளவுகளை மாற்றி பெற்று கொள்ள முடியும் மேலும் திரையில் தோன்றும் அழகு மாற்றியின் மூலமும் அலகுகளை மாற்றி பெறலாம்



4.ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ள தகவல்களை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் "site" என்ற சொல்லை பயன்படுத்தி தேட  முடியும். உதாரணமாக "site: ebay.com" என்று தேடுவதன் மூலம் ebay இணைய தளத்திலுள்ள விடயங்களை முன்னிலையாக பெற்றுக் கொள்ள முடியும்.

5. மொழி மாற்றி மூலம் பிற மொழியில் உள்ள சொற்களை தேவையான மொழிக்கு மாற்றி பெற்று கொள்ள முடியும். "translate in " என்ற விதத்தில் பயன்படுத்த முடியும்.
உதாரணம்:  "translate Tamil Computer in tamil" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் '' என பெற்று கொள்ள முடியும்  "translate கணினி in hindi" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் 'प्रणाली' என பெற்று கொள்ள முடியும்


6. பைல் எக்ஸ்ட்டேன்சங்களை பாவிப்பதன் மூலம் உரிய பைல் வகைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: "zahira filetype:pdf" என்று டைப் செய்வதாம் மூலம் zahira என்ற பெயரில் உள்ள pdf வகையான பைல்களை பெற்று  கொள்ள முடியும். filetype:doc என்று பாவித்தால் word documents களை தேடிப் பெற்றுக் கொள்ள முடியும்.


7. விமானத்தின் இலக்கங்களை டைப் செய்து தேடுவதன் மூலம் அது புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம், இடம் போன்ற தகவல்களையும் அதன் தற்போதைய நிலையையும் அறிந்து கொள்ள முடியும்  உதாரணம்: UL217

8. முக்கிய நகரங்களில் திரையிடப்படும் திரைப்படங்கள் பற்றிய தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.  இது அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் போன்ற நாடுகளிலேயே சிறப்பான தகவல்களை தற்போது வழங்குகிறது. நகரங்களின் zip code மூலம் இத்தகவல்களை பற்றுக் கொள்ளலாம். உதாரணம்: 'movies: W11 2BQ' என்று டைப் செய்து தேடுவதன் மூலம் லண்டனில் திரையிடப்படும் திரைப்படங்கள் பற்றிய தகவல்களை அறிந்து  கொள்ள முடியும்.

9. கால நிலை பற்றிய தகவல்களையும் கூகுள் தேடல் மூலம் இலகுவாக அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது. உதாரணம்: "forecast: Colombo" அல்லது "weather: Colombo" என டைப் செய்து தேடுவதன் மூலம் கொழும்பு நகரத்தின் ஒரு வாரத்துக்கான கால நிலை எதிர்வு கூறலைப் பெற்றுக் கொள்ள முடியும்.

10. சாதாரணமாக தேடல்களின் போது தேடலை ஒத்த கருத்தில் உள்ள ஆனால் நமக்கு தேவையற்ற விஷயங்களும் பட்டியல் படுத்தப்படலாம். இதனை தவிர்த்துக் கொள்ள '-' என்ற குறியீட்டை பயன் படுத்தலாம்.  உதாரணம்; 'apple -iphone' என டைப் செய்வதன் மூலம் iPhone தவிர்ந்த ஆப்பிள் சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

11. குறிப்பிட்ட நகரத்தின் ஜனத்தொகை, வேலைவாய்ப்பு, பிறப்பு, இறப்பு போன்ற பொதுவான தகவல்களை பெற்றுக் கொள்ளவும் முடியும்.  உதாரணம்: 'polulation: India' என டைப் செய்து தேடுவதன் மூலம் இந்தியாவின் ஜனத்தொகை பற்றிய தகவலை பெற்று கொள்ள முடியும்




12. ஒரே மாதிரியான இணையத் தளங்களை தேடி பெற்றுக் கொள்ள 'related' என்ற சொல்லை பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு இந்தியாவில்  உள்ள செய்தி தளங்களை பெற்றுக் கொள்ள விரும்பின் 'related: dailymirror.india' என டைப் செய்து தேடி பாருங்கள்.

13. FedEx, USPS, UPS.Professional.Bluedart.போன்ற பார்சல் பரிமாற்ற சேவை வழங்குனர்களினூடாக பொருட்களை அனுப்பும் போது அல்லது பெற்றுக்கொள்ளும்போது  அவர்கள் வழங்கும் இலக்கத்தினை கூகுளில் டைப் செய்து தேடுவதன் மூலம் பார்சல் நிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

14.சில சொற்களுக்கான வரைவிலக்கணங்களை அறிந்து கொள்ள "Define" என்ற சொல்லினை பயன்படுத்த முடியும். 
உதாரணம்: "Define: management" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் முகாமைத்துவம் சென்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தைப் பெற்றுக்  கொள்ள முடியும்

15. இரண்டு நகரங்களுக்கிடையிலான தூரம், பயண நேரம் போன்ற தகவல்களை பெற்றுக் கொள்ள " to " என்ற விதத்தில் டைப் செய்து தேடிக் கொள்ள முடியும். உதாரணம்: "Chennai to Calcutta " என டைப் செய்து தேடிப் பாருங்கள்.




16. இரண்டு பிரதான நகரங்களுக்கிடையிலான விமானப் போக்குவரத்து நேர அட்டவணையை பெற்றுக் கொள்ள விரும்பின் " to "  என்றவாறு டைப் செய்து தேடித் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: "Bombat to Dubai" என டைப் செய்து தேடிப் பாருங்கள்




17. கிரிக்கட் போட்டிகள், நேர அட்டவணை, வெற்றி தோல்வி சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்ள " Vs " என்றவாறு டைப்செய்து தேடிப்பெற்றுக் கொள்ள முடியும்.உதாரணம்: "Sri Lanka Vs England"என டைப் செய்து தேடிப் பாருங்கள்.

18. நீங்கள்இருக்கும் இடத்திற்கு அண்மையில் உள்ள விமான நிலையம், ஹோட்டல், மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களை அறிந்து கொள்ள "Closest" என்ற சொல்லை  பயன்படுத்த முடியும் உதாரணம்: "closest: airport", "closest: hotel", "closest: hospital" என டைப் செய்து தேடிப் பாருங்கள்

19. நீங்கள் கூகுள் தளத்தில் தேடியவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றை நீங்கள் தேவையான போது  http://google.com/history என்ற பக்கத்தில் அறிந்து கொள்ள முடியும். உங்கள் தேடல்களை பதிவு செய்துகொண்டு பின்னர் தேவையான போது  மீட்டு பார்க்கும் வசதியை பெற்றுக் கொள்ள நீங்கள் உங்கள் கூகுள் அக்கௌண்டில் லொகின் செய்து கொண்டிருத்தல் அவசியம்

20. இறுதியாக  "do a barrel roll" என்று கூகுளில் டைப் செய்து பாருங்கள்.  கூகுள் டெக்ஸ்டாப்ஆனது 360 டிகிரி ஒரு சுற்று சுற்றிவரும்.

பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.