டெக்ஸ்டாப்பில் நாம் காணும் வீடியொ பைல்களை அனிமேஷன் பைல்களாக மாற்றவும்.புகைப்படங்களை அனிமேஷன் படமாக மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கணினியில் உள்ள வீடியோவினை பதிவு செய்திட இந்த விண்டோ பயன்படுகின்றது. தேவையான வீடியோவினை ஒடவிடவும். தேவையான ப்ரேம் தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள ரெக்கார்ட் பட்டனை கிளிக் செய்யவும். ரேக்கார்ட் முடிந்ததும் ஸ்டாப் பட்டனை கிளிக் செய்யவும்.
புகைப்படங்களில் நீங்கள் அனிமேஷன் கொண்டுவர புகைப்படங்களை தேர்வு செய்திடுங்கள்.
இதில் உள்ள எடிட் கிளிக செய்து வேண்டி ஆப்ஷன்கள் நீங்கள்கொண்டுவரலாம்.
ஒவ்வொரு ப்ரேமும் எவ்வளவு நேரம் ஓடவேண்டும் என்பதனை தேர்வு செய்திடலாம்.
நீங்கள் புகைப்படத்தின் இமெஜ் அளவினையும் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினையும் தேர்வு செய்திடலாம்.
இறுதியாக நீங்கள் ப்ரிவியூவினை பார்வையிடலாம். நீங்கள் சேமிக்கவிரும்பும் இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புகைப்படங்கள் அனிமேஷன் படமாக மாறி உள்ளதை காணலாம். இதனை மற்றவர்களுக்கு நீங்கள் அனுப்பலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.