Tuesday, November 10, 2020

வேலன்:-இணையவழி பண்பலை மற்றும் வானோலி கேட்க -Replay Radio

இணையவழி பண்பலை மற்றும ;வானோலி நிகழ்ச்சிகளை கேட்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் உள்ள நேரம் ஐகானினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான இணைய வானோலி யூஆர்எல் முகவரியை இணைக்கவும்.சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்திடவும்.
இதில் மூன்று விதமான Guides கொடுத்துள்ளார்கள். அதில் Radio Show.Ratio Stations.Podcast என உள்ளது. அதில் ரேடியோஷோ கிளிக் செய்திட இணைய வழி வானோலி ஒலிபரப்பு நிலையங்கள் தெரியும்.

இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக செய்திட கீழ்கண் டவிண்டோ ஓப்பன் ஆகும்.; அதில் தேவையான செடடிங்ஸ் செய்துகொள்ளலாம்.
 இதில் உள் ள ரேடியோ ஸ்டேஷன் கிளிக ;செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில ;தேவையான வானேலி நிலையத்தினை தேர்வு செய்திடலாம்.
 பண்பலை நிலையத்தினை தேர்வு செய்த உலகத்தில் உள்ள பண்பலை நிலையங்கள் இதில் ;தெரியவரும் தேவையான நிலையத்தினை தேர்வு செய்திடவும்.
தேவையான நிலையத்தினை தேர்வு செய்ததும் உங்களுக்கு வலதுபுறம் விண்டோ  ஓப்பன் ஆகும். அதில் உள்ள  Tune & Schedule கிளிக் செய்திட உங்களுக்கான பாடல் ஆனது ஒலிபரப்பாகும்.

ஒலி பரப்பாகும் பாடலினை நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம் தேவையான சமயம் அதனை ஒலிக்கவிட்டு கேட்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, November 3, 2020

வேலன்:-புகைப்படங்களில் பார்டர் அமைத்திட -Frame Fun

புகைப்படங்களில் நாம் பார்டர் -விதவிதமான ப்ரேம் கொண்டுவர இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய  இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்திடவும்.

புகைப்படத்தில் பார்டர் கொடுக்கவேண்டிய நிறத்தினை தேர்வு செய்திடவும்.
 பார்டரில் நிறம்,பார்டர் சைஸ்,மற்றும் பார்டர் வடிவம் ஆகியவற்றை தேர்வு செய்திட இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திடவும. நீங்கள் செட் செய்த பார்டரினை நீங்கள் ப்ரிவியூ பார்க்கலாம்.
 உங்களுக்கு பிடித்தமான பார்டர்  ப்ரேம் வந்ததும் கணினியில் சேவ் செய்திடவும். 


தனிதனிப் புகைப்படம் அல்லாது மொத்தமாக புகைப்படங்களையும் தேர்வு செய்து பார்டர்-ப்ரேம்  அமைத்திட இந்த மென்பொருள் உதவுகின்றது.பயன்படுத்திட எளிமையான விளக்கத்துடன் கையேடும் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Monday, November 2, 2020

வேலன்:-அனைத்துவகை பார்மெட் புகைப்படங்களையும் எளிதில் பாரவையிட -Honeyview

புகைப்படங்களை எளிதில் பார்வையிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. புகைப்பட பார்மெட் எத்தகைய பார்மெட்டாக இருந்தாலும் இந்த மென்பொருள மூலம் எளிதில் பார்வையிடலாம். இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில உள்ள ஓப்பன் ;இமெஜ் கிளிக் செய்து புகைப்படத்தினையோ புகைப்படங்கள் உள்ள போல்டரினையோ திறந்துகொள்ளவும்.
இதன் கீழே உங்களுக்கு செட்டிங்ஸ் கொடுத்துள்ளார்கள். புகைப்படங்களை திருப்ப பெரியதாக்கி பார்க்க சிறியதாக்கஅடுத்தடுத்த புகைப்படங்கள் பார்க்க என நிறைய டூல்கள் கொடுத்துள்ளார்கள்.
இதன் மேல்புறம் உள்ள டேபில் நீங்கள் புகைப்படங்களை பார்வையிட.ஸ்லைடஷோவாக கொண்டுவர புக் மார்க் செய்திட டெக்ஸ்டாப்பில் பேக்கிரவுண்ட்டாக கொண்டுவர கிளிப்போர்டில் காப்பி செய்திட என நிறைய டேப்புகள் கெர்டுத்துள்ளார்கள். தேவையானதை நீங்கள் பெறலாம்.
இதில் உள்ள போட்டோவியு கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படங்கள் தம்ப்நெயில் வியுவாக தெரியவரும். தேபையான புகைப்படத்தினை தேர்வு யெச்து பார்வையிடலாம். மேலும் இதில் மேல்புறம் உள்ள :ஐகானினை தேர்வு செய்திட புகைப்படங்கள் எடுக்கப்பட்ட தேதி.கேமரா வகை.புகைப்படம் எடுக்கப்பட்ட நேரம்.ஷெடடர் வேகம்.என புகைப்டத்திற்கு தேவையான அனைத்து தகவல்களும் நமக்கு கிடைக்கும். புகைப்படங்களை பிரிண்ட் செய்யும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.