M.S.OFFICE-ல் லெட்டர் பேட் அடிப்பது எப்படி?
M.S.OFFICE-ல் லெட்டர் பேட் அடிப்பது எப்படி?
மைக்ரோசாப்ட் வேர்டில் டாக்குமென்டுகளை
தட்டச்சு செய்கையில் வரிகள் இடது புறம் செட்
செய்தால் நாம் தட்டச்சு செய்பவை இடப்புறமே
அமையும். அதுபோல் வலதுபுறம் செட்செய்தால்
வலதுபுறமும் நடுவில் அமைய என ஏதுவாக
வேண்டுமானாலும் அலைன்மண்ட் செய்தால்
அது போல் அமையும். அதுபோல் இடப்புறம்
தட்டச்சு செய்து அதை வலப்புறம் நகர்த்தி
வைக்க முடியும். சில வார்த்தைகளை
தட்டச்சு செய்ததும் சில வார்த்தைகளை
வலது புறமாக மாற்ற தேர்ந்தெடுத்த
வார்த்தைக்கு முன் கர்சரை நகர்த்தி
பின்னர் ஸ்பேஸ்பாரை தட்டி வேண்டிய
இடத்திற்கு வார்த்தைகளை நாம்
நகர்த்தி செல்ல வேண்டும்.
டாக்குமெண்டில் பரவாயில்லை .
இதுவே நாம் லெட்டர் பேட் அடிக்க
வேண்டும் என்றால்...? முதலில்
இடப்புறம் நமது முகவரியை தட்டச்சு
செய்து பின் வலப்புற முகவரியை
தட்டச்சு செய்யவேண்டும். இது தட்டச்சு
முறையில் சரியென்றாலும் நாம்
முகவரிகளை தட்டச்சு செய்வதற்குள்
இடக்குழப்பம் ஏற்படுவதுடன் நமக்கு
டென்ஷன் அதிகரிக்கும். முகவரிகள்
சரியான அளவுகளில் அமையாது. இந்த
குழப்பத்தை சரிசெய்ய ஒரு சின்ன
செட்டிங்கை வேர்டில் நாம் செய்துவிட்டால்
நமக்கு முகவரி அருமையாக தட்டச்சு
செய்யவரும். இனி குழப்பமில்லாமல்
முகவரி தட்டச்சு செய்வது எவ்வாறு என
காணலாம்.
முதலில் இடப்புறம் தட்டச்சு செய்ய வேண்டிய
முதல்வரியை தட்டச்சு செய்யவும். அடுத்து
வலதுபுற முலையில் டேப் ஒன்றை உருவாக்கலாம்.
அதற்கு உங்கள் டாக்குமெண்டில் ரூலர் இருக்க
வேண்டும். ரூலர் டாக்குமெண்டில் கொண்டுவர
வியூ மெனு சென்று ரூலர் தேர்வு செய்யவும்.
உங்களுக்கு ரூலருடன் டாக்குமெண்ட் திறக்கும்.
இனி வலது புற ரூலரின் மீது கர்சரை வைத்து
கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
பக்கம் ஓப்பன் ஆகும்.
இதில் கீழ்புறம் உள்ள டேபை கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட மற்றும் ஒரு காலம்
ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் வலது புற
முகவரி டேப்பில் எந்த அங்குலத்தில்-
இடப்புறம் இருந்து எவ்வளவு தொலைவில்
என்பதை குறிப்பிடுங்கள். அடுத்து வரிகளின்
அமைப்பை அது இடப்புறமாகவா - நடுவிலா -
வலப்புறமா, டெசிமெலா, பாரா என தேர்வு
செய்து அதன் எதிரே உள்ள ரேடியோ பட்டனை
தேர்வுசெய்யுங்கள். அடுத்து செட் செய்து
ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.
இனி பழைய இடத்திற்கு வருவோம்.
இடப்புறம் முதல் வரி அடித்தோம் அல்லவா?
அடுத்து முதல்வரியின் முடிவில் கர்சரை
வைத்து இப்போது கீ-போர்டில் உள்ள டேப்
அழுத்துங்கள். இப்போது உங்கள் கர்சரானது
நீங்கள் செட் செய்த டாக்குமென்டின்
எண் எதிரே நிற்கும். நீங்கள் வலப்புற முகவரி
யினை தட்டச்சு செய்திடவும். அடுத்து எண்டர
தட்டினால் இடப்புறம் கர்சர்வந்து நிற்கும்.
அடுத்த வரியை தட்டச்சு செய்து மீண்டும்
டேபை தட்டினால் கர்சரானது வலப்புறம்
சென்று நிற்கும். இதுபோல் உங்கள் முகவரிகளை
தட்டச்சுசெய்யலாம்.
உங்களுக்கு முகவரி தட்டச்சு செய்து முடித்தவுடன்
மீண்டும் டேபை திறந்து செட்டிங்கை கிளியர்
செய்து விடலாம். ஒரு முறை முயற்சி செய்து
பாருங்கள். பலனடையுங்கள்.
இது வேர்டில் புதிதாக தட்டச்சு பயில்பவர்களுக்காக
பதிவிட்டுள்ளேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்கள் கம் யூட்டரில் சமயத்தில் ஏர ர் மெசெஜ் வரும். நமக்கு அது சமயத்தில் என்ன வென்றுபுரியாது. அந்த மாதிரியான நேரத்தில் பிரிண்ட் ஸ்கிரின் பட்டனை அழுத்தி அதை பெயிண்ட்டில் காபி செய்து விடவும். கணிணி வல்லுனர் வரும் சமயம் அது என்ன வென்று அவருக்கு திறந்து காண்பிக்கலாம்.
அருமையா உள்ளது வேலன் , நான் டைப் செய்துபார்த்து முன்பு தோற்றுவிட்டேன்
ReplyDeleteபதிவுக்கு நன்றி
செலவில்லாத லெட்டர் பேட் ..
ReplyDeleteவாழ்த்துகள்
ஜீவா கூறியது...
ReplyDeleteஅருமையா உள்ளது வேலன் , நான் டைப் செய்துபார்த்து முன்பு தோற்றுவிட்டேன்
பதிவுக்கு நன்றி//
தங்கள் கருத்துக்கு நன்றி.. நண்பர் ஜீவா அவர்களே.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வண்ணத்துபூச்சியார் கூறியது...
ReplyDeleteசெலவில்லாத லெட்டர் பேட் ..
வாழ்த்துகள்//
நன்றி நண்பர் வண்ணத்துப்பூச்சியார் அவர்களே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் விளக்கமாய் இருந்தது.
ReplyDeleteவளர்க உங்கள் பணி வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
Muthu Kumar_Singapore கூறியது...
ReplyDeleteஎல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் விளக்கமாய் இருந்தது.
வளர்க உங்கள் பணி வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர் முத்துக்குமார் அவர்களே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
க.வேலன்.
thanks for such a clear explanation
ReplyDeleteprem கூறியது...
ReplyDeletethanks for such a clear explanation//
தங்கள் கருத்துக்கு நன்றி பிரேம் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.