Friday, July 24, 2009

வேலன்:-போட்டோஷாப் பாடம்-16








சென்ற பாடத்தில் Foreground & Backround Colour பற்றி

பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இன்று

காணலாம். சென்ற பாடம் படிக்காதவர்கள்

இங்கு கிளிக் செய்யவும்.

சென்ற பாடத்தில் பொதுவாக கலர்

எப்படி கொண்டு வருவது என பார்த்தோம்.

இன்று நமது சட்டைகலர் -பேண்ட்கலர்-

அல்லது பின்புறம் உள்ள கலர் இவைகளை

எப்படி கொண்டு வருவது என பார்க்கலாம்.

எதாவது ஓரு படத்தை ஓப்பன் செய்து

கொள்ளுங்கள்.கலர் கலராக சர்ட் உள்ளதால் நான்

இந்த படத்தை தேர்வு செய்துள்ளேன்.



இப்போது டூல் வரிசையில் உள்ள Backround Tool

தேர்வு செய்யுங்கள்.


இப்போது பேக்ரவுண்ட் டூலின் நடுவில் வைத்து

கர்சரால் கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு

இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.


இப்போது நீங்கள் உங்கள் கர்சரை சட்டையின்

மீது கொண்டு சென்று எந்த இடத்தின் கலர்

வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரை நிறுத்துங்கள்.

உங்கள் கர்சரானது சிறிய கத்திபோல் மாறிவிடும்.

இப்போது கர்சரை கிளிக் செய்யுங்கள். நீங்கள்

தேர்வு செய்யும் நிறத்திற்கு ஏற்ப கலர் பிக்கரில்

சிறிய வட்டம் தோன்றுவதை காணலாம்.



நான் மேற்கண்ட படத்தில் மஞ்சள் நிற சட்டையை

தேர்வு செய்துள்ளேன். கீழே உள்ள படத்தில்

எனது மகனின் சட்டை கலரை தேர்வு செய்து

உள்ளேன்.



இனி ஓகே கொடுங்கள்.இப்போது டூல்களில் உள்ள

பேக்ரவுண்ட் கலரின் நிறம் மாறி யிருப்பதை காண்

பீர்கள்.முன் பாடத்தில் சொன்னவாறு புதிய

விண்டோ ஓப்பன் செய்து shift+F5 அழுத்துங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




தேவையானதை தேர்ந்தேடுங்கள். இப்போது நாம்

Backround Colour -ஐ மட்டும் பார்க்கலாம். Foreground

Colour -ஐ பற்றி பின் வரும் பாடங்களில் படிக்கலாம்.



எனது சட்டையின் நிறத்திற்கு பேக்கிரவுண்ட்

கலர் தேர்வுசெய்த படம் கீழே:-


கலரின் உபயோகங்கள் பின்வரும் பாடங்களில்

வரவிருப்பதால் இதை பற்றி தெரிந்தகொள்ளவே

இந்த பாடம். மேட்சிங் விரும்பும் அன்பர்கள்

அவர்களின் சட்டை-புடவை -ஜாக்கெட் நிறத்திற்கு

ஏற்ப பின்புற கலரை தேர்வுசெய்து அவர்களின்

படத்தை பென் டூல் கொண்டு கட்செய்து

பின்புற நிறத்தில் பொருத்திகொள்ளலாம்.

பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன்

முடித்துக்கொள்கின்றேன்.

அடுத்த போட்டோஷாப் பாடம் திங்கள்

அன்று வரும்.

பதிவுகளை பாருங்கள். பிடிததிருந்தால்

ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்.

வேலன்.


JUST FOR JOLLY PHOTOES


போட்டோஷாப் பாடம் 16 படித்தவர்கள்:-

web counter

15 comments:

  1. நண்பரே உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது உங்கள் தொலைபேசி எண்ணுடன்
    உடனே தமிழ்10 தளத்திற்கு ஓர் மின்-அஞ்சல் அனுப்புங்கள் எம் முகவரி tamil10@ymail.com
    .தாமதிக்காமல் உடனே அனுப்புங்கள்

    தமிழ்10 குழு சார்பாக
    தமிழினி

    ReplyDelete
  2. expecting photoshop lesson. very nice. pls. answer our questions.

    ReplyDelete
  3. தெளிவான விளக்கங்களுடன் நல்லதொரு போடோஷோப் பதிவு.
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. அருமையான விளக்கங்கள்.

    தொடரட்டும் உமது சேவை.

    வாழ்த்துகள் வேலன்.

    ReplyDelete
  5. தமிழினி கூறியது...
    நண்பரே உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது உங்கள் தொலைபேசி எண்ணுடன்
    உடனே தமிழ்10 தளத்திற்கு ஓர் மின்-அஞ்சல் அனுப்புங்கள் எம் முகவரி tamil10@ymail.com
    .தாமதிக்காமல் உடனே அனுப்புங்கள்

    தமிழ்10 குழு சார்பாக
    தமிழினி//

    தகவலுக்கு நன்றி..தங்கள் முகவரிக்கு அஞ்சல் அனுப்பிவிட்டேன்...

    வாழ்க வளமுடன்:,
    வேலன்.

    ReplyDelete
  6. Malu கூறியது...
    expecting photoshop lesson. very nice. pls. answer our questions.


    தங்கள் கேள்விக்கான பதில் முன்பதிவில் கருத்துரையில் பதிவிட்டுள்ளேன். பார்க்கவும்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. யூர்கன் க்ருகியர் கூறியது...
    தெளிவான விளக்கங்களுடன் நல்லதொரு போடோஷோப் பதிவு.
    பகிர்வுக்கு நன்றி


    நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. வண்ணத்துபூச்சியார் கூறியது...
    அருமையான விளக்கங்கள்.

    தொடரட்டும் உமது சேவை.

    வாழ்த்துகள் வேலன்//

    நன்றி சார்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. thank you very much sir. I'll try what you said. Please continue your postings. My wishes to you.

    ReplyDelete
  10. நன்றி வேலன் சார்,

    ஏதோ உங்கள் புண்ணியத்தில் இனிமே கலர்கலராக சட்டை போட்டுக்கலாம்
    அதுவும் இலவசமா....

    நன்றி. வாழ்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  11. Malu கூறியது...
    thank you very much sir. I'll try what you said. Please continue your postings. My wishes to you.//

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    நன்றி வேலன் சார்,

    ஏதோ உங்கள் புண்ணியத்தில் இனிமே கலர்கலராக சட்டை போட்டுக்கலாம்
    அதுவும் இலவசமா....

    நன்றி. வாழ்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்//

    நன்றி நண்பரே...கலர்கலராக சட்டைபோட்டு கலக்குங்கள்...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. இந்தப் பாடம் கத்துகிட்டேனே!நன்றி.

    ReplyDelete
  14. ராஜ நடராஜன் கூறியது...
    இந்தப் பாடம் கத்துகிட்டேனே!நன்றி//

    நன்றி ராஜ நடராஜன் அவர்களே...

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete