உங்களது ஆதரவில் எனது 125ஆவது பதிவு
நாம் வழக்கமாக பிறந்தநாள் - காதுகுத்தல்
-மஞ்சள்நீராட்டு-நிச்சயதாம்பூலம்-திருமணம்
-சீமந்தம் என அனைத்து விசேஷங்களுக்கும்
புகைப்படங்கள் எடுப்போம். ஆல்பம் போட்டு
வந்தவர்களுக்கு அனைவருக்கும் காண்பிப்போம்.
ஆனால் அந்த புகைப்படங்களையே நாம்
வீடியோ படமாக மாற்றி-அந்த வீடியோ
படத்தை சி.டி.யாக காப்பி செய்து
விருந்தினர்களுக்கும்-நண்பர்களுக்கும்
கொடுக்கலாம். புகைப்படத்தை நாம் கணிணியில்
பார்க்கின்றோம். நமது நண்பர்-உறவினர் வீட்டில்
நாம் கணிணியை எதிர்பார்க்கமுடியாது. நாம்
சி.டி.யாக காப்பி செய்து கொடுத்துவிட்டால்
அவர்கள் அவர்களது வீட்டில் உள்ள சி.டி.பிளேயரிலோ
டி.வி.டி.பிளேயரிலோ போட்டு பார்ப்பார்கள்.
இனி புகைப்படத்தை எப்படி வீடியோ வாக
மாற்றி சி.டி.யில் எப்படி காப்பி செய்யலாம் என
பார்க்கலாம்.இதற்காக நீங்கள் தனியே
சாப்ட்வேர் தேடி போக வேண்டாம். நமது
கணிணியிலேயே இந்த வசதி உள்ளது. அதை
எப்படி உபயோகிப்பது என பார்க்கலாம்.
முதலில் Start-Programmes-Window Movie Maker
கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலப்புறம் பார்த்தீர்களே யானால்
Movie Tasks இருக்கும். அதில் Import Picture
கிளிக் செய்யவும். அதற்கு முன் நீங்கள்
மாற்ற விரும்பும் புகைப்படங்களை ஓரே
போல்டரில் போட்டு வைத்திடவும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0kQY_w4TkViQx-Eqt-avr0lVQ63L3lNn90FPr7VJwQ0oQtMNlOFVFgil_5tZ2VDeBFGkebJcR0IFucGw1C77APxiCdbr6mWqlUCysSwc0k_POyi_d692uKzPnTyDZwl5Qau9mpYCPO1WT/s320/b.jpg)
இப்போது import picture கிளிக்செய்து படங்களை
import செய்ததும் உங்களது படங்கள் அனைத்தும்
Collection Window வில் வந்து அமர்ந்துவிடும்.(நான்
மகாபலிபுரம் படங்கள் அனைத்தையும் தேர்வு
செய்து உள்ளேன்). கீழே படத்தை பாருங்கள்:-
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD9iL4RzsVktcqfccsZpAjw_o0zrnf28cVMfQHn42_b1tJ0Kc-7vU6aBfVCmD2M-UIQF5D3GucecsMpICYm8lS9YMyB01niWZbZT3spe7ErZhAD0pEr4c4O44um8lDrE0_3xBVSY5KjWoT/s280/a.jpg)
இப்போது கீழ்புறம் பார்த்தீர்களேயானல்
Show Time line இருக்கும். அதில் நீங்கள்
படங்கள் ஒவ்வொன்றாக கர்சர் மூலம் இழுத்து
ஒவ்வொரு கட்டத்திலும் விடவும். கீழே படத்தை
பாருங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJMRLDppukzri0Y5mB_a0JkvFZ_u9ZUf3FI3ELbldry6ekLlqKvI-3n44Gr5DmO4JsiJ8YR-AJ43aXGWjE_DwfDoxpDFi4XAdBbNjXwMqJrXz1OqPNYnD5j12ss3SeeUmAzzZL7B7_ZBZE/s280/f.jpg)
நீங்கள் மொத்த படத்தையும் கட்டத்தில் எடுத்து
வைத்துவிட்டீர்கள். இனி அதில் சிறப்பு எபெக்ட்
எப்படி சேர்ப்பது என பார்க்கலாம்.
இப்போது மீண்டும் வலப்புறம் பாருங்கள்.
அதில் Edit Movie - View Video Transition
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0kQY_w4TkViQx-Eqt-avr0lVQ63L3lNn90FPr7VJwQ0oQtMNlOFVFgil_5tZ2VDeBFGkebJcR0IFucGw1C77APxiCdbr6mWqlUCysSwc0k_POyi_d692uKzPnTyDZwl5Qau9mpYCPO1WT/s320/b.jpg)
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ
ஒன்று ஓப்பன் ஆகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhj03bL_BVqZYgYUivpwDDG9zr7MhgRklX5QT5jvqeAK-jwINj5yMYoP82b9FfrRll5OaiqnRInQJBW20RYWEpS_T9HPzTHkqRfV3-aUpZdA756b22f8cQGDdg-UpYZ3NoJ_BdBaLHvHgDn/s280/e.jpg)
இதில் உள்ள Video Transitions ஒவ்வொன்றையும்
ஒவ்வோரு படத்திற்கு இடையில் உள்ள கட்டத்தில்
கர்சர் மூலம் இழுத்து விடவும்.கீழே உள்ள படத்தை
பார்க்கவும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihyBnSJuMrhwaEivUN4ZxekI3hHETke_YuGHt7EL0Pn-kOE1g2803oAKRvHerWKCmJArWHI4nuWTChMdyKG1uW74VjOmLs2CgOQSuHetZSzsOtpicDvZuqZmJQ-kVZIZjdiclyke7kkZ-I/s280/c.jpg)
நீங்கள் செய்த படத்தின் முன்மாதிரியை இடப்பக்கம்
உள்ள விண்டோவில் ப்ரிவியு பார்க்கலாம்.
படம் கீழே உள்ளது பாருங்கள்:-
இப்போது இதற்கு பிண்ணனி இசை சேர்க்க வேண்டும்.
அப்போதுதான் படம் சிறப்பானதாக அமையும்.
எந்த விசேஷத்திற்காக படத்தை அமைக்கின்றீர்களோ
அதற்குண்டான பாடலை சேர்க்கவும். இப்போது
மீண்டும் வலப்புறம் பார்த்தீர்களேயானால்
Capture Video -Import Audio or Music கிளிக் செய்து
உங்கள் கணிணியில் உள்ள பாடலை import
செய்யவும். கீழே உள்ள படத்தை பாருங்கள்:-
இந்த ஆடியோவையும் கர்சர் மூலம் இழத்து
Audio/Music -லைனில் விடவும்.இப்போது
பாடல் ரெடி. இப்போது ப்ரிவியுவின் கீழ் உள்ள
பிளே பட்டனை அழுத்துங்கள். அவ்வளதுதான்
படம் ரெடி. இப்போது மீண்டும் வலப்புறம்
பாருங்கள்.
Finish Movie-Save to my computer கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1JjLzB_l6D1PuBiUE4BbNYGhjDubWJfhRrB8hoGZnjXXuCD5dJNinP_kjv_fDUHXJbvcAWNPTJTAxwAkmKnw14uhwSsUBHICoCqYlNhJt-I4Gldd5dOfjdnG7kv49kL6oKnL294yhCfTj/s280/h.jpg)
இதில் நீங்கள் சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள்.
இதில் நீங்கள் சேமிக்கும் டிரைவ் ஆனது அதிக
கொள்ளலவில் காலிஇடம் இருப்பதாக இருக்கட்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0k-A_HlijXkIZsIBaI1hCIqJu-InAEb-6aS7IB8QppJWBxBN-khZCU0PvVRP4rRjAvRdLwFhFqTYAKQUy9dGaBbmWATs3ANKBYCKhJICfH3qmu4boWsT4xLbk6L33_gI9X2nMkTg9GtKR/s280/i.jpg)
ஓகே கொடுங்கள். அடுத்து Next கிளிக் செய்யுங்கள்.
கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNk6M5u6gFBoEfCLbk-yXVvOS8e17uNcO1FCNqOdXJR4uK9TJYww-KJJmpDFO4ACNyrnGgzOoumAUoSF3tPCkjIUW4ut7iDCPe5da60nmECR9R-l0QNsFDFaOFPg0DV4grv4srFHroKWiI/s280/j.jpg)
Next கிளிக் செய்யவும்.இப்போது கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRUWH6aUy4gpIrYejkzWvntncVs7JbGhj1LjPTc4lr7tV-viz8OEUSnJ0CBCnmku0YlOIuFwC0c_Q2RbcmwHIX3Jt_RcrPB4G5cHNBLCEBUe-Dvl0KPWoTeg0Gwogewyyn21lQXfcBWBb9/s280/k.jpg)
சில மணித்துளிகள் காத்திருக்கவும். இறுதியாக
Finish கிளிக் செய்யவும். படம் ரெடி.
நீங்கள் சேமித்த இடத்தில் படமானது வீடியோ
பைலாக மாறி இருக்கும். அதை நீரோ மூலம்
நீங்கள் சி.டி.(அல்லது) டி.வி.டி.யில் காப்பி செய்து
சி.டி.(அ)டி.வி.டி .பிளேயரில் போட்டு பார்க்கலாம்.
உங்களுக்காக நான் மகாபலிபுரம் புகைப்படததை
வீடியோவாக மாற்றியுள்ளேன். படம் கீழே:-
இந்த வீடியோவைபாருங்கள். இதில் கடைசியாக
பாடலில் வரும் வரி:-
"கடல் வற்றி போனாலும் போகும்"
இந்த வரி வரும் இடத்தில் நான் கடற்கரையையும்
கடலையும் இணைத்துள்ளேன். அதுபோல் நீங்களும்
பாடல் வரிகளுக்கு ஏற்ப படத்தை சேர்த்தால் படம்
மேலும் சிறப்பாக இருக்கும்.
பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.
இதில் டைட்டில் - நடுவில் பெயர் போடுதல் -
படம் இறுதியில் பெயர் போடுதல் பற்றி
நான் பதிவிட வேண்டும்.
இந்த பதிவுக்கு நீங்கள் வரவேற்பு கொடுத்தால்
அடுத்த பதிவில் அதனை பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
படத்தை இதுவரையில் வீடியோவாக
மாற்றியவர்கள்:-
அருமை நண்பரே
ReplyDeleteவாழ்த்துகள்
அடுத்த இடுகைக்கு ஆவலாக உள்ளேன்
அன்புடன்
திகழ்
"என்ன பிலிம் காட்றியா" என்று இனிமே யாரும் சொல்ல மாட்டாங்க.
ReplyDeleteஏன்னா எல்லாருமே இன்றிலிருந்து படம் காட்ட போறாங்க ! ( எல்லாம் உங்களால்தான்:-) )
நல்ல உபயோகமான இடுகை.
125 க்கு வாழ்த்துக்கள் வேலன் சார்
வேலன் சார்,
ReplyDeleteவாழ்த்துகள் உங்கள் 125வது பதிவிற்கு.
அதுவும் புகைப்படத்தை வீ்டியோவாக மாற்ற எளிதான வழியை புதியவர்களுக்காக அழகு தமிழில் எளிய நடையில் சிறப்பாக பதிவிட்டிருக்கிறீர்கள் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
வாழ்த்துக்கள் வேலன் விரைவில் அடுத்த இலக்கை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
ReplyDelete125 பதிவை எட்டியிருக்கும் வேலன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
ReplyDeleteதொடர்ந்து உங்கள் ஆக்கங்களை படித்து வருகிறேன். ஒவ்வொன்றும் வித்தியாசமான பதிவுகள்.
Photoshop ஐ மேலும் விடங்களை சேர்த்து குறிப்பாக Tips and Tricks சேர்த்து மேலும் பெருகூட்டுங்கள்.
மேலும் ஒரு ஆலோசனை Photoshop இற்கு தனியான ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து முழுப்பதிவையும் அங்கும் இட்டால் மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் பணி தொடர இறைவனை மனதார பிரார்த்திக்கிறேன்
இறைவன் நீங்கள் கையிட்டு செய்யும் எல்லாக் காரியங்களையும் வாய்க்கப் பண்ணுவார்
அன்புடன்
கொல்வின்
இலங்கை
//மேலும் ஒரு ஆலோசனை Photoshop இற்கு தனியான ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து முழுப்பதிவையும் அங்கும் இட்டால் மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.//
ReplyDeleteஅது !!!
எங்களின் முழு ஆதரவும் உண்டு என உளமார உறுதி கூறுகிறேன் !
super.best of luck.
ReplyDeleteakisamy
அடங்கி போறவன் இல்ல..
ReplyDeleteஅடிச்சிட்டு போறவன்!!
thank you so much........
ReplyDeleteதிகழ்மிளிர் கூறியது...
ReplyDeleteஅருமை நண்பரே
வாழ்த்துகள்
அடுத்த இடுகைக்கு ஆவலாக உள்ளேன்
அன்புடன்
திகழ்//
பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
யூர்கன் க்ருகியர்..... கூறியது...
ReplyDelete"என்ன பிலிம் காட்றியா" என்று இனிமே யாரும் சொல்ல மாட்டாங்க.
ஏன்னா எல்லாருமே இன்றிலிருந்து படம் காட்ட போறாங்க ! ( எல்லாம் உங்களால்தான்:-) )
நல்ல உபயோகமான இடுகை.
125 க்கு வாழ்த்துக்கள் வேலன் சார்//
நன்றி நண்பரே...இனி நீங்கள் படமே காட்டலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
ReplyDeleteவேலன் சார்,
வாழ்த்துகள் உங்கள் 125வது பதிவிற்கு.
அதுவும் புகைப்படத்தை வீ்டியோவாக மாற்ற எளிதான வழியை புதியவர்களுக்காக அழகு தமிழில் எளிய நடையில் சிறப்பாக பதிவிட்டிருக்கிறீர்கள் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார.//
நன்றி முத்துக்குமார் சார்...தாமதமான கருத்துக்கு மன்னிக்கவும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
வடிவேலன் ஆர். கூறியது...
ReplyDeleteவாழ்த்துக்கள் வேலன் விரைவில் அடுத்த இலக்கை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்//
நன்றி வடிவேலன் சார்.
வாழ்த்தியமைக்கு நனறி்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
colvin கூறியது...
ReplyDelete125 பதிவை எட்டியிருக்கும் வேலன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை படித்து வருகிறேன். ஒவ்வொன்றும் வித்தியாசமான பதிவுகள்.
Photoshop ஐ மேலும் விடங்களை சேர்த்து குறிப்பாக Tips and Tricks சேர்த்து மேலும் பெருகூட்டுங்கள்.
மேலும் ஒரு ஆலோசனை Photoshop இற்கு தனியான ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து முழுப்பதிவையும் அங்கும் இட்டால் மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் பணி தொடர இறைவனை மனதார பிரார்த்திக்கிறேன்
இறைவன் நீங்கள் கையிட்டு செய்யும் எல்லாக் காரியங்களையும் வாய்க்கப் பண்ணுவார்
அன்புடன்
கொல்வின்
இலங்கை//
கடல்கடந்து வந்து வாழ்த்தியிருக்கின்றீர்கள். உங்களை போல் இலங்கையில் நிறைய வலைப்பதிவு வாசகர்கள் எனக்கு உள்ளனர்.
போட்டோஷாப்பில் இன்னும் ஒரு டூலையே முழுவதுமாக நான் முடிக்கவில்லை. தொடர்ந்து டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் வெளியிடுகின்றேன்.
தொடர்ந்து பாடமே வெளியிட்டால் போர் அடித்துவிடும் அல்லவா - அதனால்தான்.
தவிர நீங்கள் சொன்னதுமாதிரி போட்டோஷாப்க்கு என்று தனியே வலைப்பதிவு ஆரம்பிக்கலாம். ஆனால்
புதிதாக வலைபதிவு ஆரம்பிக்கவேண்டும். இப்போது இருக்கும் பின்தொடர்புவர்கள் - இதுவரை பதிவிட்டவை - இதுவரை வந்துள்ள ரேங்க் பட்டியல் அனைத்தும் இழக்க வேண்டிவரும். தங்கள் ஆலோசனைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
யூர்கன் க்ருகியர்..... கூறியது...
ReplyDelete//மேலும் ஒரு ஆலோசனை Photoshop இற்கு தனியான ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து முழுப்பதிவையும் அங்கும் இட்டால் மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.//
அது !!!
எங்களின் முழு ஆதரவும் உண்டு என உளமார உறுதி கூறுகிறேன் //
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
AKISAMY கூறியது...
ReplyDeletesuper.best of luck.
akisamy//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆப்பு கூறியது...
ReplyDeleteஅடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!//
தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Manikandan கூறியது...
ReplyDeletethank you so much....//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வேலன் மிகவும் அபாரம் ஒவ்வொருவரும் இவ்வாறு தமக்கு தெரிந்தவற்றை பிரசுரித்தாலே போதும் அநேகமானோர் தமக்கு தெரிந்தது மற்றவருக்கு தெரிய விரும்பமாட்டார்கள் வாழ்த்துக்கள் தங்கள் சேவைக்கு
ReplyDeleteKAJAN கூறியது...
ReplyDeleteவேலன் மிகவும் அபாரம் ஒவ்வொருவரும் இவ்வாறு தமக்கு தெரிந்தவற்றை பிரசுரித்தாலே போதும் அநேகமானோர் தமக்கு தெரிந்தது மற்றவருக்கு தெரிய விரும்பமாட்டார்கள் வாழ்த்துக்கள் தங்கள் சேவைக்கு//
நன்றி காஜன் அவர்களே...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
அய்யா வேலன்! மிக அருமையாக movie maker ல் படங்களை vidoe ஆக மாற்றூவது எப்படி என்று விளக்கியிருக்கிறீர்கள்.நன்றி.ஆனால் ஒரு சந்தேகம்? படத்திற்கு தகுந்த அளவு மட்டும் வருமாறு பாடல்களை வெட்ட movie maker ல் முடியமா என தெரியப்படுத்தவும்.ஏனென்றால் படங்கள் முடிந்தாலும் பாடல் ஓடிக்கொண்டே இருக்கிறதே!
ReplyDeleteஇனியன் கூறியது...
ReplyDeleteஅய்யா வேலன்! மிக அருமையாக movie maker ல் படங்களை vidoe ஆக மாற்றூவது எப்படி என்று விளக்கியிருக்கிறீர்கள்.நன்றி.ஆனால் ஒரு சந்தேகம்? படத்திற்கு தகுந்த அளவு மட்டும் வருமாறு பாடல்களை வெட்ட movie maker ல் முடியமா என தெரியப்படுத்தவும்.ஏனென்றால் படங்கள் முடிந்தாலும் பாடல் ஓடிக்கொண்டே இருக்கிறதேஃஃ
தாமதத்திற்கு மன்னிக்கவும் இனியன் சார்்...
பாடலை தேவையான அளவிற்கு வெட்டிக்கொள்ளலாம்.
வருகைக்கும் கரு்ததுக்கும் நன்றி நண்பரே
வாழ்க வளமுடன்,
வேலன்.
போட்டோ சொப்பினை தங்களிடம் கற்கும் மாணவன் நான் நீண்டகாலமாக,பார்த்தும்,இதை கற்க நினைக்கும் எனது நண்பர்களுக்கு தங்கள் வலைப்பக்கத்தை பார்த்து பயன்பெறும்படி கூறியுள்ளேன்.மேலும் நான் ஒரு வலைப்பக்கம் தொடங்குவதற்கும் நீங்களே மறைமுக காரணம் நன்றி.எம்மைப் பொறுத்தவரை தாங்கள் ஒரு துரோணர் ஆவீர்.இப்பதிவில் இறுதியில் சிடியாக அடிக்கும் போது wmv போமட்டில் அடிக்கிறது. இதை சில சிடி பிளேயர் வாசிக்காது எனவே மீள கணனிக்கு கொண்டு போய் போட்டு பார்க்க வேண்டி வருகிறது.1) வேறு போமட்டில் வின்டோஸ் மூவி மேக்கர் அடிக்காது என்ன செய்யலாம்?
ReplyDelete2)புளொக்கருக்குரிய ஜிமெஜில் ஜடி, பாஸ்வேட் (ஒபிண்) மாற்ற முடியாதா? செய்யலாம் எனில் ஒரு பதிவிடுக! தங்கள் பாதை தொடரட்டும் அடங்காபற்று மண் சார்பாக ,நன்றி!