Monday, October 26, 2009

வேலன்:-வலைப்பதிவில் பிடிஎப் பைலை இணைக்க





நாம் வலைப்பதிவில் எழுதுகின்றோம். ஆனால் அதில் பிடிஎப்
பைலைஇணைத்தால் நமது வாசகர்களுக்கு மேலும்
அதிக தகவல்களை தரலாம்.சரி பிடிஎப் பைலை எப்படி
பதிவில் இணைப்பது என பார்க்கலாம்.
முதலில் உங்களிடம் உள்ள பைலை பிடிஎப் பைலாக
மாற்றிக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த தளம் செல்ல இங்குகிளிக் செய்யவும்.
உங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.

உங்கள் இ-மெயில் முகவரி கொடுத்து அதில் உறுப்பின
ராகுங்கள்.அடுத்து அதில் உள்ள Publish கிளிக் செய்தபின்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில்


உள்ள Publishing மற்றும் Options Privacy-ல் தேவையான
தை கிளிக் செய்யுங்கள்.அடுத்து Publish கிளிக்செய்து
உங்கள் பிடிஎப் பைல் உள்ள் டிரைவைதேர்ந்தெடுத்து
பைலை பதிவேற்றுங்கள்.


பைலை பதிவேற்றியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஒப்பன் ஆகும். அதில் உங்கள் பிடிஎப் பைலின் category-யை
தேர்வு செய்யு்ங்கள்.


தேவையான விவரங்கள் கொடுத்து சேவ் செய்து
வெளியேறுங்கள்.அடுத்து நீங்கள் பதிவேற்றம் செய்த
புத்தகத்தினை பார்க்கலாம்.



இதன் வலப்புறம் உள்ள ஸ்கோரல் பார் தள்ளுவதன் மூலம்
முழுப்புத்தகத்தையும் நாம் படிக்கலாம். இப்போது வலது
மூலையில் உள்ள EMBED கிளிக் செய்தால் நீங்கள் பதிவேற்றம்
செய்த புத்தகத்தின் EMBED கிடைக்கும். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.


அதில் உள்ள Copy கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது
உங்கள் பிளாக்கின் இடுகையிடல் திறந்து அதில் உள்ள
HTML ஐத் திருத்து கிளிக் செய்து நீங்கள் காப்பி செய்ததை
இங்கு பேஸ்ட் செய்யுங்கள். சேமித்து வெளியேறுங்கள்.

இப்போது உங்கள் பிடிஎப் பைலானது உங்கள் பதிவில்
இருப்பதை காணலாம்.இதைப்போலவே நான் மர்பி விதிகள்
1000 என்கின்ற பதிவை இணைத்துள்ளேன்.
இந்த தளம் பற்றி இன்னும் ஒன்று சொல்லவிரும்புகின்றேன்.
இந்த தளத்தில் தமிழ் உள்படஏராளமான புத்தகங்கள் உள்ளது.

உங்களுக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவினை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



இன்றைய PSD பைலுக்கான டிசைன்:-


டிசைன் செய்தபின் வந்துள்ளபடம் கீழே:-



இந்த டிசைனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


வலைப்பதிவில் பிடிஎப் பைலை இணைக்க இதுவரை
கற்றுக்கொண்டவர்கள்:-
web counter

17 comments:

  1. ஆமாம் . மாப்ள சொன்னது போல நல்ல தகவல் தான்.
    வேலனின் சிறப்பும் அதுவே தான்.

    ReplyDelete
  2. யூர்கன் க்ருகியர் கூறியது...
    நல்ல தகவல் .//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. கக்கு - மாணிக்கம் கூறியது...
    ஆமாம் . மாப்ள சொன்னது போல நல்ல தகவல் தான்.
    வேலனின் சிறப்பும் அதுவே தான்ஃ

    ஆமாம்...மாப்ளைக்கு சொன்னதுபோல தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்,:
    வேலன்.

    ReplyDelete
  4. தூள். ஒவ்வொரு முறையும் புதுப்புது தொழில்நுட்பத் தகவல்களுடன் கலக்குங்க வேலன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நண்பரே அந்த மர்பி விதி 1000 என்ற தமிழ் புத்தகத்தின் இனைப்பு தாருங்களேன்

    ReplyDelete
  6. Dear Velan Sir,

    Good information for bloggers. Your way of explain also very nice.

    Keep it up.

    Best wishes
    Muthu Kumar.N

    ReplyDelete
  7. ரோஸ்விக் கூறியது...
    தூள். ஒவ்வொரு முறையும் புதுப்புது தொழில்நுட்பத் தகவல்களுடன் கலக்குங்க வேலன். வாழ்த்துக்கள்.//

    என்னை இப்போதாவது உங்களுக்கு நினைவுக்கு வந்ததே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரோஸ்விக் அவர்களே...(பெயர் வித்தயாசமாக உள்ளதே...?)

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. sri கூறியது...
    நண்பரே அந்த மர்பி விதி 1000 என்ற தமிழ் புத்தகத்தின் இனைப்பு தாருங்களேன்//

    எனது முந்தைய பதிவில் தாங்கள் பார்க்கவில்லையா...உங்களுக்காக இதன்http://velang.blogspot.com/2009/10/1000.htmlலிங்க்கொடுத்துள்ளேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    Dear Velan Sir,

    Good information for bloggers. Your way of explain also very nice.

    Keep it up.

    Best wishes
    Muthu Kumar.N//

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார்...தங்களின் ஊக்கமே என்னை உற்சாகப்படுத்துகின்றது...

    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. நல்ல தகவல் நன்றி. word format pdf மற்ற முடியுமா?

    ReplyDelete
  11. மலர் கூறியது...
    நல்ல தகவல் நன்றி. word format pdf மற்ற முடியுமா?//

    இந்த முகவரி தளம் சென்று பார்க்கவும்.
    http://velang.blogspot.com/2009/02/pdf.html

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. dear sir, just can you tell me how to add page viewer counter in to my blogspot

    ReplyDelete
  13. Kaipulla கூறியது...
    dear sir, just can you tell me how to add page viewer counter in to my blogspot//
    வருகைக்கு நன்றி ...உங்கள் கேள்விக்கான பதிலை
    தனியே பதிவிடுகின்றேன் நண்பரே...
    தங்களுக்கு உடனே தேவையென்றால் உங்கள் இ-மெயில் முகவரியை அனுப்பவும்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்

    ReplyDelete
  14. நீங்க சொன்ன வழியில் pdf file தளத்தில் ஏற்றி விட்டேன்..நன்றி அண்ணா...மேலும் ஒரு சந்தேகம்..save images and copy செய்ய இயலாதவாறு set செய்வது எப்படி என்று சொல்லங்களண்ணா.. M.RAJESH
    My Blog:www.maayaulagam4u.blogspot.com MY Email id: rajeshnedveera@gmail.com

    ReplyDelete
  15. சில நேரங்களில் pdf file-ஐ upload செய்யும்பொழுது அதிலுள்ள எழுத்துக்கள் அலங்கோலமாய் வருக்றதே ஏன் என்று சொல்லுங்கண்ணா.... maayaulagam-4u.blogspot

    id:nedveera80@gmail.com

    ReplyDelete
  16. சில நேரங்களில் pdf file-ஐ upload செய்யும்பொழுது அதிலுள்ள எழுத்துக்கள் அலங்கோலமாய் வருக்றதே ஏன் என்று சொல்லுங்கண்ணா.... maayaulagam-4u.blogspot

    id:nedveera80@gmail.com

    ReplyDelete