Sunday, November 8, 2009

வேலன்:-சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள்




<span title=





சில சாப்ட்வேர்களை நாம் கணிணியில் இன்ஸ்டால்
செய்வோம். பிறகு அது தேவையில்லையென்று
அதை அன்இன்ஸ்டால் செய்துவிடுவோம். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்யும்போது முறையாக அதை
அன்இன்ஸ்டால் செய்யவேண்டும். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்ய முத்தான மூன்று வழிகளை
இப்போது பார்க்கலாம்.

முதல் வழிமுறை:-
தேவையில்லாத சாப்ட்வேரை முடிவு
செய்துகொள்ளுங்கள். அடுத்து Start கிளிக் செய்து
வரும் - Programs -ல் நமது சாப்ட்வேரை தேர்ந்தேடுங்கள்.
அந்த ப்ரோகிராமுடன்Uninstall என்கின்ற யுட்டிலிட்டி
கொடுத்திருப்பார்கள்.அதை பயன்படுத்தி சாப்ட்வேரை
நீக்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.




இரண்டாவது வழிமுறை:-

Start கிளிக் செய்யுங்கள்.Settings கிளிக் செய்யு்ங்கள்.
வரும் மெனுவில் Control Pannel கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் Add/Remove Programs கிளிக்
செய்து வரும் விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை
தேர்வு செய்து Uninstall கிளிக் செய்யவும். கீழே
உள்ள படத்தை பாருங்கள்.


மூன்றாவது வழிமுறை:-

இதை கவனத்துடன் செய்யவேண்டும். இது மெயின்
பாக்ஸில் பீஸ்போடுவது போன்றது.சரியாக செய்ய
வில்லையென்றால் ஒன்றும் ப்ரச்சினை யில்லை.
பார்த்துக்கலாம். என்ன .மீண்டும் சர்வீஸ் இன்ஜினியரை
கூப்பிட வேண்டும். அவ்வளவு தான்.சரி இனி
ரெஜிஸ்டரில் இருந்து சாப்ட்வேரை நீக்குவது பற்றி
இப்போது பார்க்கலாம்.

முதலில் Start கிளிக் செய்து Runஓப்பன் செய்து
REGEDIT.EXE-ஐ தட்டச்சு செய்யவும். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.

வரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE
கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் உள்ள Software கிளிக் செய்யவும்.

பின் வரும் விண்டோவில் Microsoft கிளிக்
செய்யுங்கள்.

அதில் உள்ள கூட்டல் குறியை நீங்கள் கிளிக்
செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.




வரும் விண்டோவில் முறையே Curent Version
மற்றும் Uninstal தேர்ந்தேடுங்கள். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.



இதில் Uninstal கிளிக் செய்ய உங்கள் கணிணியில் உள்ள
சாப்ட்வேர் லிஸ்ட் அனைத்தும் வரும்.



இதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து
அதை Delete செய்யுங்கள்.


இறுதியில் முறையே வெளியெறுங்கள். அவ்வளவுதான்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-





இன்றைய பதிவிற்கானPSD டிசைன் கீழே:-
டிசைன்செய்தபின் வந்த படம் கீழே:-



இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
துவரை சாப்ட்வேரை முறையாக டெலிட் செய்தவர்கள்:-

18 comments:

  1. ///சரியாக செய்யவில்லையென்றால் ஒன்றும் ப்ரச்சினையில்லை.பார்த்துக்கலாம். என்ன .மீண்டும் சர்வீஸ் இன்ஜினியரை
    கூப்பிட வேண்டும். அவ்வளவு தான்.சரி.///

    ReplyDelete
  2. THANGA MANI கூறியது...
    ///சரியாக செய்யவில்லையென்றால் ஒன்றும் ப்ரச்சினையில்லை.பார்த்துக்கலாம். என்ன .மீண்டும் சர்வீஸ் இன்ஜினியரை
    கூப்பிட வேண்டும். அவ்வளவு தான்.சரி.///
    நமது இணைய நண்பர் போனில் பேசும் போது அடிக்கடி கூறுவார்....
    ஒன்றும் ப்ரச்கினையில்லை...பார்த்துக்கொள்ளலாம்..என்று கூறுவார்..அவர் நினைவாக அந்த வரிகளை சேர்த்துவிட்டேன்...
    வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி நண்பர் தங்கமணி அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. //ஒன்றும் ப்ரச்கினையில்லை...பார்த்துக்கொள்ளலாம்//


    ஆமாமாம்..ஒன்றும் ப்ரச்கினையில்லை...பார்த்துக்கொள்ளலாம் !!

    ReplyDelete
  4. யூர்கன் க்ருகியர் கூறியது...
    //ஒன்றும் ப்ரச்கினையில்லை...பார்த்துக்கொள்ளலாம்//


    ஆமாமாம்..ஒன்றும் ப்ரச்கினையில்லை...பார்த்துக்கொள்ளலாம் !!//

    நீங்க சொன்னா சரியாக இருக்கும் சார்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்,
    வேலன்

    ReplyDelete
  5. வருவான் வடிவேலன் நமது தேவை அறிந்து கொடுக்கும் நண்பன் அவன்.

    ReplyDelete
  6. பெயரில்லா கூறியது...
    வருவான் வடிவேலன் நமது தேவை அறிந்து கொடுக்கும் நண்பன் அவன்.//

    ஆகா...அவரா நீங்கள்...ரைட்ரைட்்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. நல்ல தகவல் தான் வேலன்......ஆனால் "CCleaner" என்ற தொகுப்பை உபயோகப்படுத்தினால் "temp files deleting/softwares uninstaling/registry error correction" போன்ற அனைத்தையும் அது ஒன்றே பார்த்துக்கொள்ளும்......பகிர்ந்தமைக்கு நன்றி!!!!

    ReplyDelete
  8. sir ungal blog daily parkiran.{psd file photoshop}ungal 4shared website-il attach panmnungal.mikavum utaviyaka irukkum.website-il free download pannalsama irunthal soollungal.

    ReplyDelete
  9. Dear Velan Sir,

    Its good info for beginers, Well done.

    Keept it up.

    Best wishes
    Muthu Kumar.N

    ReplyDelete
  10. நித்தியானந்தம் கூறியது...
    நல்ல தகவல் தான் வேலன்......ஆனால் "CCleaner" என்ற தொகுப்பை உபயோகப்படுத்தினால் "temp files deleting/softwares uninstaling/registry error correction" போன்ற அனைத்தையும் அது ஒன்றே பார்த்துக்கொள்ளும்......பகிர்ந்தமைக்கு நன்றி!!!!//

    அனைவரிடமும் c-cleaner இருக்கும் என எதிர்பார்க்கமுடியாது.இது புதியவர்களுக்கானது...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நித்தியானந்தம் அவர்களே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. AKISAMY கூறியது...
    sir ungal blog daily parkiran.{psd file photoshop}ungal 4shared website-il attach panmnungal.mikavum utaviyaka irukkum.website-il free download pannalsama irunthal soollungal.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..விரைவில் உங்கள் ஆசையை நிவர்த்திசெய்கின்றேன்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    Dear Velan Sir,

    Its good info for beginers, Well done.

    Keept it up.

    Best wishes
    Muthu Kumar.Nஃஃ

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. sir,

    It Is very nice.
    keep doing like this.

    Alaaravalli

    ReplyDelete
  14. தங்களது விரிவான பதிவுக்கு நன்றி. எனது கணினியில் உள்ள Quick Time Player ஐ எவ்வளவு முயன்றும் Delete செய்யமுடியவில்லை. அதை எப்படி ஒதுக்குவது எனத்தெரிவிக்கவும்.

    ReplyDelete
  15. ALAARAVALLI கூறியது...
    sir,

    It Is very nice.
    keep doing like this.

    Alaaravalli//
    முதன்முதலாக எனது பதிவிற்கு வந்துள்ளீர்கள்.
    தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி அம்மணி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. வே.நடனசபாபதி கூறியது...
    தங்களது விரிவான பதிவுக்கு நன்றி. எனது கணினியில் உள்ள Quick Time Player ஐ எவ்வளவு முயன்றும் Delete செய்யமுடியவில்லை. அதை எப்படி ஒதுக்குவது எனத்தெரிவிக்கவும்//

    மேலே சொன்ன மூன்று வழிகளில் முயற்சி செய்து பார்க்கவும். முடியவில்லையென்றால் விட்டுவிடவும். கணிணிக்கு ஓ.எஸ். செய்யும் சமயம் சரியாகிவிடும்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  17. வணக்கம், தங்கள் சொன்ன முறையைக் கையாண்டு தேவையற்ற சாப்ட்வேரை டெலிட் பண்ணிவிட்டேன். நன்றி பல. அப்படியே ஒரு விண்ணப்பம், நான் windows xp professional உபயோகிக்கிறேன். இதில் சிலநாட்களாக search வேலை செய்வது இல்லை. கிளிக் பண்ணினாலும் எந்த மாற்றமும் இல்லை. என்ன செய்வது ????

    அன்புடன்,
    எஸ்.அன்பு,
    அமீரகத்திலிருந்து...

    ReplyDelete
  18. அன்பு கூறியது...
    வணக்கம், தங்கள் சொன்ன முறையைக் கையாண்டு தேவையற்ற சாப்ட்வேரை டெலிட் பண்ணிவிட்டேன். நன்றி பல. அப்படியே ஒரு விண்ணப்பம், நான் windows xp professional உபயோகிக்கிறேன். இதில் சிலநாட்களாக search வேலை செய்வது இல்லை. கிளிக் பண்ணினாலும் எந்த மாற்றமும் இல்லை. என்ன செய்வது ????

    அன்புடன்,
    எஸ்.அன்பு,
    அமீரகத்திலிருந்து.ஃஃ

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    புதிய யூசர் அக்கெவுண்ட் ஆரம்பித்து பாருங்கள்...
    அல்லது பழைய தேதியில் சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்து பாருங்கள். (சிஸ்டம் ரீ-ஸ்டோர் பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்)
    முயற்சி செய்து பாருங்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete