Thursday, December 3, 2009

வேலன்:-இணைய இணைப்பை அளவிட மீட்டர்




எனது 200 ஆவது பதிவிற்கும் மற்றும் பிறந்தநாளுக்கும்
சேர்த்து வாழ்த்துக்களையும்-ஆசிர்வாதங்களையும்-
நேரிலும்-தொலைபேசியிலும்-இ-மெயில் மூலமும்-
பதிவின் மூலமும் சொன்ன அனைத்து நல்ல
உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

இணைய இணைப்பு நாம் பயன்படுத்திவருகின்றோம்.
ஒரு சிலரே unlimited இணைப்பு பயன்படுத்துகின்றனர்.
மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்
படுததினோம் என பயந்துகொண்டே இருக்கின்றோம்.
இந்த சாப்ட்வேர் அந்த குறையை முற்றிலும்
நமக்கு நீக்கிவிடுகின்றது.இதை பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.(1 எம்.பிக்குள்தான இருக்கு)
இனி இதை இன்ஸ்டால் செய்யவும்.
உங்களுக்கு உங்கள் கணிணியின் நேரத்திற்கு அருகில்
சின்ன கம்யூட்டர் ஐ-கானுடன் வந்து அமர்ந்துகொள்ளும்.
இதை ரைட் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்


இதில் முதலில் உள்ளது Settings. இதை கிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள். இருக்கும்.
அடுத்துள்ள கட்டத்தில் Month Start Day வில் நீங்கள் அன்றைய
தேதியை நிரப்பி கொள்ளவும். அடுத்துள்ள கட்டத்தில் Dont track
between these times எதிரில் உள்ள Enable கிளிக் செய்து நேரத்தை
அமைத்துக்கொள்ளவும்.

அடுத்துள்ளது Monthly Settings இதை கிளிக் செய்கையில்
உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் ஒவ்வொரு மாதத்தின் அப்லோடு மற்றும் டவுண்லோடு
அளவுகளை பார்த்துக்கொள்ளலாம். அளவுகளை எம்.பி .
அல்லது ஜி.பி.யில் பார்த்துக்கொள்ளலாம்.
அதேபோல் நீங்கள் இந்த ஐ-கான் மீது வைத்து
லெப்ட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டொ ஓப்பன் ஆகும்.
இதில் அப்போதையஅளவு - இன்றைய அளவு
மற்றும் அந்த மாதத்தியஅளவினை எளிதில் பார்த்துக்
கொள்ளலாம்.உங்கள் செட்டிங்ஸ் ஏற்றவாறு அளவுகள்
வரும். எனவேசெட்டிங்ஸ்ஸை கவனமாக செய்யவும்.
பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



JUST FOR JOLLY PHOTOS:-


இந்த குளிரில் இந்த தண்ணீயிலே குளிக்க சொல்ரீய....
உனக்கே இது ஞாயமாக இருக்கா ?

இந்த பதிவிற்கான PSD டிசைன்- 35 க்கான டிசைன்கீழே:-



டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-


இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


இதுவரை நெட் மீட்டர் உபயோகித்தவர்கள்:

web counter


18 comments:

  1. எனக்கு ரொம்ப பயனுடையதாக இருக்கும். பகிர்வுக்கு நன்றிங்க.

    அன்புடன் மஜீத்

    ReplyDelete
  2. இறக்கிடுவோம் - பாத்துடுவோம்


    நல்வாழ்த்துகள் வேலன்

    ReplyDelete
  3. அன்புடன் அருணா கூறியது...
    சூப்பர்ஃஃ

    நன்றி சகோதரி...பூங்கொத்து கொடுக்கவில்லை...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. பெயரில்லா கூறியது...
    எனக்கு ரொம்ப பயனுடையதாக இருக்கும். பகிர்வுக்கு நன்றிங்க.

    அன்புடன் மஜீத்ஃஃ

    நன்றி மஜித் அவர்களே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. cheena (சீனா) கூறியது...
    இறக்கிடுவோம் - பாத்துடுவோம்


    நல்வாழ்த்துகள் வேலன்


    நன்றி சீனா அவர்களே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. இவ்வளவு இன்றியமையாத கணிணித் தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி paandiyuraanjeya.blogspot.com

    ReplyDelete
  7. வேலன் சார்,

    எல்லோருக்கும் பயன்படும் நல்ல தகவல். வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  8. நண்பர் வேலன் அவர்களே

    தங்களுடைய பதிவுகள் http://www.tamilcomputer.ch இத்தளத்தில் முழுமையாக வெளியாகிறது தங்கள் கோப்பு உட்பட. மன்னிக்கவும்
    தற்பொழுது அசல் எது நகல் எது என்று தெரியாமல் உள்ளது. இதனை தங்கள் கவனத்தில் கொள்க

    ReplyDelete
  9. ///தங்களுடைய பதிவுகள் http://www.tamilcomputer.ch இத்தளத்தில் முழுமையாக வெளியாகிறது தங்கள் கோப்பு உட்பட. மன்னிக்கவும்...///

    அட! ஆமாங்க.

    நான் கூட ஒரு சில பதிவுகளை மற்ற மன்றத்தில் பதிவு இட்டு இருக்கின்றேன். உங்களுக்கு நன்றி தெரிவித்துதான்.

    அன்புடன் மஜீத்.

    ReplyDelete
  10. JKR கூறியது...
    இவ்வளவு இன்றியமையாத கணிணித் தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி paandiyuraanjeya.blogspot.comஃஃ

    நன்றி நண்பர் ஜேகேஆர் அவர்களே...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    வாழ்க வளமுடன:,
    வேலன்.

    ReplyDelete
  11. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,

    எல்லோருக்கும் பயன்படும் நல்ல தகவல். வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்ஃஃ

    நன்றி சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன:,
    வேலன்.

    ReplyDelete
  12. ஆனந்தபாலன் கூறியது...
    நண்பர் வேலன் அவர்களே

    தங்களுடைய பதிவுகள் http://www.tamilcomputer.ch இத்தளத்தில் முழுமையாக வெளியாகிறது தங்கள் கோப்பு உட்பட. மன்னிக்கவும்
    தற்பொழுது அசல் எது நகல் எது என்று தெரியாமல் உள்ளது. இதனை தங்கள் கவனத்தில் கொள்கஃஃ

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..தங்கள் சுட்டிகாட்டிய தளத்திற்கு சென்று பார்த்தேன்.இவரைப்போல் நிறைய பேர் பதிவுகளை எடுக்கின்றார்கள்.அவர்கள் மனசாட்சிப்படி நன்றி தெரிவித்தால் சரி.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. பெயரில்லா கூறியது...
    ///தங்களுடைய பதிவுகள் http://www.tamilcomputer.ch இத்தளத்தில் முழுமையாக வெளியாகிறது தங்கள் கோப்பு உட்பட. மன்னிக்கவும்...///

    அட! ஆமாங்க.

    நான் கூட ஒரு சில பதிவுகளை மற்ற மன்றத்தில் பதிவு இட்டு இருக்கின்றேன். உங்களுக்கு நன்றி தெரிவித்துதான்.

    அன்புடன் மஜீத்ஃ

    நன்றி மஜித். உங்களுடைய லிங்க அனுப்பி வைக்கவும். பார்க்கின்றோம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  14. murali கூறியது...
    Fantastic.

    Muralidharan

    நன்றி முரளி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. http://67.222.145.128/viewtopic.php?f=156&t=33619&sid=053b5d6d7162f821f3da498bec81b196

    http://67.222.145.128/viewtopic.php?f=156&t=33396&sid=053b5d6d7162f821f3da498bec81b196

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20794

    பிற மன்றத்தில் நான் இட்ட உங்கள் பதிவுகள் சில. நன்றி.

    அன்புடன் மஜீத்

    ReplyDelete
  16. பெயரில்லா கூறியது...
    http://67.222.145.128/viewtopic.php?f=156&t=33619&sid=053b5d6d7162f821f3da498bec81b196

    http://67.222.145.128/viewtopic.php?f=156&t=33396&sid=053b5d6d7162f821f3da498bec81b196

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20794

    பிற மன்றத்தில் நான் இட்ட உங்கள் பதிவுகள் சில. நன்றி.

    அன்புடன் மஜீத்//

    நண்பர் மஜித் அவர்களுக்கு,

    நான் எதிர்பார்க்கவே யில்லை..தாங்கள் தமிழ்மன்றத்தில் கட்டுரைகள் வெளியிட்டமைக்கு...நான் வலைப்பூ எழுதுவதற்கு முன் தங்கள் மன்றத்தில் படிந்துவந்துள்ளேன். தவறுதலாக புக்மார்க் மறந்துவிட்டதால் என்னால் மீண்டும் தொடரமுடியவில்லை.தங்கள் தயவால் மீண்டும் மன்றத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இனி மன்றத்தை தொடர்கின்றேன்.
    தங்கள் உதவிக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete