Wednesday, January 13, 2010

வேலன்:- 225 ஆவது பதிவு - பொங்கல் வாழ்த்து - போட்டோ ஆல்பம்.











அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
இந்த இனிய நாளில் எனது 225 ஆவது பதிவும்
வெளியிடுவதில் மகிழ்ச்சிக் கொள்கின்றேன்.
தொடர்ந்து உங்கள் ஆதரவினை நாடி......
வேலன்.
நம்மிடம் புகைப்படங்கள் நிறைய இருக்கும். பழைய
நினைவுகளை அசைபோட போட்டோக்கள் உதவும்.
அதையே முறையாக ஆல்பமாகதொகுத்து தரவே 
இந்த சாப்ட்வேர்உதவுகின்றது. இதை பதிவிறக்கம் 
செய்ய இங்கு கிளிக்செய்யவும். இது வெறும் 8 எம்.பி.
 கொள்ளளவு தான்.இதை உங்கள் கணிணியில்
 இன்ஸ்டால் செய்யவும்.மெமரி கார்ட், டிஜிட்டல்
 கேமரா, மொபைல்போன், ஸ்கேனர்மற்றும் நமது
 கம்யூட்டரில் உள்ள புகைப்படங்களையும்இந்த
 சாப்ட்வேரில் import செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு புகைப்படங்களை இம்போர்ட்செய்ய முதலில்
பைல் தேர்ந்தேடுத்து அதில் Get Photos என்பதனை கிளிக்
செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.
உங்கள் புகைப்படம் எங்கு உள்ளதே அங்கிருந்து புகைப்
படங்களை இந்த சாப்ட்வேருக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களுடைய புகைப்படங்கள் கீழ்கண்டவாறு வந்து
அமர்ந்துகொள்ளும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
தேவையான புகைப்டங்களை இதில் நேரடியாக சிடியில் 
காப்பி செய்ய முடியும். இதில் பைல் மெனுவில் உள்ள 
பார்ன் சிடி கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
தேவையான புகைப்படங்களை தேர்வு செய்து தேவையான
டிரைவையும் தேர்வு செய்து பர்ன் சிடி கொடுங்கள். சிடி பர்ன்
ஆகிவிடும்.அதைப்போலவே இதிலிருந்து நேரடியாக
இ-மெயில் அனு்ப்பவும் - செல்போனுக்கு புகைப்படங்கள்
மாற்றவும் வசதி உள்ளது. 
பைலுக்கு அடுத்துள்ள எடிட் மெனுகிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் நாம் புகைப்படத்தை வலது புறமோ
இடது புறமோ சுலபமாக திருப்ப முடியும். -
போட்டோவில் உள்ள சிறு சிறு குறைகளை நீக்க
இந்த சாப்ட்வேரில் வசதி உள்ளது. குறை உள்ள
புகைப்படத்தை தேர்வு செய்து இதில் உள்ள 
Auto Smart Fix கிளிக் செய்தால் உங்கள் புகைப்
படத்தில் உளள் குறைகளை நிவர்த்தி செய்துவிடும்.
இதில் உள்ள Fix Photos Window கிளிக் செய்தால்
உங்களுடைய புகைப்படத்திற்கு General,Crop,Red eye,
Auto Level,Auto Contrast,Auto Colour, Sharpen என பல
வசதிகள் கிடைப்பதுடன் இதில் உள்ள புகைப்பட
மாறுதல்களை After/ Before /Original என முன்பார்வை
யிட்டுக்கொள்ளலாம். விருப்பப்பட்டால் ஒ.கே.
கொடுக்கலாம்.
இதில் நாம் புகைப்படத்திற்கு தேதி கொடுத்துக்
கொள்ளலாம். இதன் மூலம் கடந்த வருடம்
அந்த நாளை நினைவு கூரந்து கொள்ளலாம்.
 சரி தவறுதலாக நேரம் அமைந்துவிட்டது.
தேவையான நேரத்தை நாமே அமைத்துக்கொள்ளலாம்.
போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்களுக்கு
இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். அவர்களுக்கு
படம் எடுக்கும் அந்த நாளை இந்த சாப்ட்வேரில் போட்டு
வைத்துவிட்டால் பின்னர் கஸ்டமர்களுக்கு அவர்கள்
படம் எடுத்ததேதி சொன்னால் அந்த தேதியை வைத்து
 மீண்டும் அவர்களுக்கு போட்டோவை பிரிண்ட்
 போட்டு தரலாம்.
சரி நம்மிடம் நிறைய புகைப்படங்கள் உள்ளது.
நண்பர்களுடன் எடுததது - குழந்தைகளுடன் எடுத்தது -
சுற்றுலா சென்ற சமயம் எடுத்தது - என நிறைய 
இருக்கும். அதை பகுதிவாரியாக பிரித்து இதில்
சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
அடுத்து இதில் உள்ள புகைப்படங்களை நாம்
ஸ்லைட் ஷோ வாக மாற்றிக்கொள்ளமுடியும்.
மேலும் பிடிஎப் லைட்ஷோவாக மாற்றவும்
முடியும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இதில் உள்ள Find கிளிக் செய்து புகைப்படத்தை தேதிவாரியாக
தேட முடியும். ஸ்லைட்ஷோ மூலம் நாம் நேரடியாக புகைப்
படத்தை பிரிண்ட் செய்ய சேர்த்துக்கொள்ளலாம்.கீழே
உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஒரே புகைப்படத்தை யோ பல புகைப்படங்களையோ
தேர்வு செய்து வேண்டிய அளவுகளில் பிரிண்ட் எடுக்க
இதில் வசதி உள்ளது. 
இதன் முகப்பு பக்கத்திலேயே நமக்கு Photo well,Organize,
Calender viewஎன வகைவகையாக பார்வையிட வசதி
 உள்ளது. மேலும்புகைப்படத்தை பெரிதாக்கி பார்க்க
 கீழே மூலையில்Slide Bar உள்ளது. அதை நகர்த்துவது
 மூலம் நாம் புகைப்படத்தைபெரிதாக்கி பார்க்கலாம்.
 இந்த சாப்ட்வேர் மூலம் இந்தவிளக்கம்போதும் என 
நினைக்கின்றேன்.மேலும்பதிவின் நீளம் கருதி
 இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.









JUST FOR JOLLY VIDEOS(PONGAL SPECIAL)



இன்றைய PSD டிசைன்க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக்  செய்யவும்...
இதுவரை எனது 225 ஆவது பதிவுக்கு வந்து வாழ்த்திய அன்பு
 உள்ளங்கள்:-
web counter

36 comments:

  1. உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!..,

    ReplyDelete
  2. அன்பு நண்பர் திரு வேலன் அவர்களுக்கு, எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.புதுமைகளை எளிமையாக வழங்கிவரும் வேலன், எல்லோருக்கும் தோழன்.
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  3. :) Al d' Bst !

    juergen

    ReplyDelete
  4. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. தொடர்ந்து உங்களது பல தொழில்நுட்ப இடுகைகளை வாசிப்பதுண்டு.. தொடருங்கள் வாழ்த்துகள்..

    பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன் கூறியது...
    உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!.//

    நன்றி நண்பரே...
    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) கூறியது...
    இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்ஃஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. mdniyaz கூறியது...
    அன்பு நண்பர் திரு வேலன் அவர்களுக்கு, எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.புதுமைகளை எளிமையாக வழங்கிவரும் வேலன், எல்லோருக்கும் தோழன்.
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூ

    நன்றி நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களே...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ந்ன்றி
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. பெயரில்லா கூறியது...
    :) Al d' Bst !

    juergen

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. மாதேவி கூறியது...
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

    நன்றி சகோதரி....பதிவிற்கு முதன்முதலில் வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. கையேடு கூறியது...
    தொடர்ந்து உங்களது பல தொழில்நுட்ப இடுகைகளை வாசிப்பதுண்டு.. தொடருங்கள் வாழ்த்துகள்..

    பொங்கல் வாழ்த்துகள்

    நன்றி நண்பரே...
    தங்கள் பதிவிற்கு முதன்முதலாக கருத்துசொல்ல வந்துள்ளீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    வாழ்க வளமுடன்,
    வேலன்

    ReplyDelete
  12. அன்பின் வேலன்

    எளிய விளக்கங்களுடன் கூடிய அரிய மென்பொருள் - பகிர்ந்தமை நன்று

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் வேலன்

    ReplyDelete
  13. அன்பின் வேலன்

    225வது இடுகைக்கு நல்வாழ்த்துகள் - பாராட்டுகள்

    ReplyDelete
  14. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    என்றும் அன்புடன்
    புதுவை.காம்

    ReplyDelete
  15. இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றிங்க.

    மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

    அன்புடன் மஜீத்

    ReplyDelete
  17. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்.. தலைவா..

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் .மிக எளிமையாக ,புரியும்
    படியாக இருந்தது

    ReplyDelete
  21. இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வேலன் சார் .

    ReplyDelete
  22. பொங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  23. அருமையான விளக்கம் (எனக்கு போட்டோகிராப்பியில் ஆர்வம் அதிகம்) நிச்சயமா பயனுள்ள ஒன்று! உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. cheena (சீனா) கூறியது...
    அன்பின் வேலன்

    எளிய விளக்கங்களுடன் கூடிய அரிய மென்பொருள் - பகிர்ந்தமை நன்று

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் வேலன்
    //

    நன்றி சீனா சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  25. cheena (சீனா) கூறியது...
    அன்பின் வேலன்

    225வது இடுகைக்கு நல்வாழ்த்துகள் - பாராட்டுகள்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  26. நித்தியானந்தம் கூறியது...
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    என்றும் அன்புடன்

    நன்றி நண்பரே...உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேல்ன்.

    ReplyDelete
  27. திகழ் கூறியது...
    இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்ஃஃ

    நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  28. பெயரில்லா கூறியது...
    பகிர்வுக்கு நன்றிங்க.

    மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

    அன்புடன் மஜீத்ஃஃ

    நன்றி மஜீத் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  29. negamam கூறியது...
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    நன்றி நண்பர் நேகமம் அவர்களே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  30. கண்ணா.. கூறியது...
    அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    நன்றி கண்ணா அவர்களே

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  31. அண்ணாமலையான் கூறியது...
    வாழ்த்துக்கள்.. தலைவா.

    நன்றி அண்ணாமலை சார்..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  32. sumarudha கூறியது...
    வாழ்த்துக்கள் .மிக எளிமையாக ,புரியும்
    படியாக இருந்தது

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  33. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வேலன் சார்

    நன்றி ஸ்டார்ஜன் சார்

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  34. gulf-tamilan கூறியது...
    பொங்கல் நல்வாழ்த்துகள்


    நன்றி நண்பரே்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  35. Priya கூறியது...
    அருமையான விளக்கம் (எனக்கு போட்டோகிராப்பியில் ஆர்வம் அதிகம்) நிச்சயமா பயனுள்ள ஒன்று! உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாழ்க வளமுட்ன்,
    வேலன்.

    ReplyDelete
  36. நண்பரே, என்னுடைய ஹர்ட் டிஸ்க் வைரஸ் காரணமாக பார்மெட் செய்தபோது சிஸ்டத்தில் இருந்த சில முக்கிய பைல்களும் பார்மட் ஆகிவிட்டது அதனை திருப்பி கொண்டுவர ஏதேனும் சாப்ட்வேர் இருக்கிறதா?

    ReplyDelete