Monday, January 4, 2010

வேலன்:-யு.எஸ்.பி.போர்ட் சாதனங்களை முறையாக நீக்க

<span title=
ஆதிகாலத்தில் -அட கம்யூட்டர் வந்த புதியதில்ங்க.... நாம்
தகவல்களை பரிமாரிக்கொள்ள பிளாப்பியை உபயோகித்து
வந்தோம். 1.44 எம்.பி. கொள்ளளவு கொண்ட பிளாப்பி
சுமார் ரூ.15-லிருந்து ரூ25 வரை விற்றுக்கொண்டிருந்தது.
சி.டி.வாங்க வேண்டுமானால் 70-80 ரூபாய் ஆகும். ரீ-ரைட்
டபிள் சி.டி. 125 ரூபாய் ஆகியது. காலங்கள் மாறியது.
சி.டி.யே இப்போது 8 ரூபாய்க்கும் -டி.வி.டி. ரூபாய் 10-லிருந்
தும் கிடைக்கின்றது. ரீ-ரைட்டபிள் டி.வி.டி. ரூபாய் 45 க்கு
கிடைக்கின்றது. சரி அதையெல்லாம் விடுங்க. பலமுறை
அழித்து - மீண்டும் எழுத இப்போது பரவலாக பென் டிரைவ்
கிடைக்கின்றது. 4  ஜி.பி. கொள்ளளவே சுமார் 450 ரூபாய்க்கு
கிடைக்கின்றது. பிளாப்பி-சி.டி.-டி.வி.டி- என மாறியவர்கள்
இப்போது பென்டிரைவ்க்கு மாறி வருகின்றார்கள்.
கம்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் யு,எஸ்.பி. போர்ட்டை
இப்போது கம்யூட்டருக்கு முன்புறம் பொருத்துமாறு தயாரிக்
கின்றார்கள்.பென்டிரைவ் தவிர டிஜிட்டர் கேமராக்கள்,
ஐ -பாட்கள்,பிரிண்டர்கள் ,பிளேயர்கள் என அனைத்தும்
பிளக் அண்ட் பிளே வகையில் சொருகி பின் எடுதது
செல்லும் வகையில் அமைந்துள்ளது. தேவைப்படும் சமயம்
அதை சொருகி பயன்படுத்தலாம். ஆனால் நினைத்தஉடன்
அதை வெளியே எடுக்க கூடாது. இது சில இழப்புகளை
நமக்கு உருவாக்கும். யு,எஸ்.பி்.போர்டில் எப்போதும்
குறைந்த அளவு மின்சக்தி இருக்கும். இதை எடுத்தேன்
கவிழ்த்தேன் என நாம் எடுக்கும் சமயம் மின்ஒட்டம்
பாதிக்கப்பட்டு கம்யூட்டரில் பரவும். நமது தகவல்கள்
அழிந்து போகும். டிரைவ் கொடுவதோடு அல்லாமல்
நமது இதர சாதனங்களான பிரிண்டர்-கேமரா - பிளேயர்
என அனைத்தும் ஈடு செய்ய இயலாத அளவு பாதிக்கப்படும்.
இது நமக்கு தேவையா...அதனால் வரும்முன்
காப்பதே நல்லது. இனி யு,எஸ்.பி.சாதனங்களை எப்படி
முறையாக கையாளலாம் என பார்க்கலாம்.
யு.எஸ்.பி.போர்டில் நாம் சாதனத்தை இணைத்ததும்
சிஸ்டம் டிரேயின் அடிப்பாகத்தில் நமக்கு நாம்
இணைத்துள்ள சாதனத்தின் ஐ-கான் தெரியும்.
நமது வேலைகள் முடிந்ததும் அந்த ஐ-கான் மீது
கர்சரால் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Stop கிளிக் செய்தபின உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஒப்பன் ஆகும்.
இப்போது ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் உங்கள் சாதனத்தை வெளியே எடுத்துக்
கொள்ளலாம்.இவ்வாறு முறையாக செய்வதினால் நமது
தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் சாதனங்களும் பழுதாகாது.
அடுத்த முறை யு,எஸ்.போர்டில் எந்த சாதனத்தையும்
இணைத்து அதை நீக்கும்போது இந்த தகவலை நினைவில்
வையுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
ரொம்ப சிலுத்துக்காதே...அப்புறம் நான் சிலுத்தால் நீ
தாங்கமாட்டே....

இன்றைய PSD புகைப்படத்தின் டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதுவரை யு,எஸ்.போர்டில் சாதனங்களை முறையாக
 நீக்கியவர்கள்:-
web counter

9 comments:

  1. நல்ல தகவல் நண்ப வேலன்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அண்ணாமலையான் கூறியது...
    தொடரட்டும் பணி.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. Sangkavi கூறியது...
    நல்ல தகவல்.ஃஃ

    தாங்கள் பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. cheena (சீனா) கூறியது...
    நல்ல தகவல் நண்ப வேலன்

    நல்வாழ்த்துகள்ஃஃ

    நன்றி நண்பரே..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. வேலன் சார் அசத்துறீங்க

    ReplyDelete
  6. கவிதை காதலன் கூறியது...
    வேலன் சார் அசத்துறீங்க


    நன்றி கவிதை காதலரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. சித்துMay 2, 2010 at 3:33 PM

    வேலன் சார்,
    அப்படி தான் செய்கிறேன். ஆனால் சில நேரம் safe to remove hardware என்று வராமல் இருக்கிறது.ஏன்?

    ReplyDelete