Wednesday, February 17, 2010

வேலன்:-போட்டோஷாப்பில் நிழலுடன் எழுத்துக்கள் கொண்டுவர


போட்டோஷாப்பில் இன்று  நிழலுடன் எழுத்துக்கள்
கொண்டுவருவது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் நீங்கள்புதிய விண்டோவினை கீழ்கண்ட
அளவில்திறந்துகொள்ளுங்கள்.

  
போட்டோஷாப்பில் டெக்ஸ்ட் டூலை தேர்வு செய்யுங்கள்.
இது போட்டோஷாப் டூல்பாரில் 16 ஆவது டூல்லாக
உள்ளது.T என்கின்ற ஆங்கில எழுத்து போட்டு இருக்கும்.
அதை கிளிக் செய்யுங்கள்.(வரிசையாக டூல்கள் பற்றிய
பாடத்தில் இந்த டூல்பற்றி நாம் விரிவாக பார்க்கலாம்)
ரைட். இப்போது உங்களுக்கு தேவையான எழுத்துருவை
தேர்வு செய்யுங்கள்.எழுத்துகள் மேலே உள்ள பாரில்
தெரியும்.தமிழ் வேண்டுபவர்கள் நான் ஏற்கனவே
கொடுத்துள்ள பாமினியை இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
லதாவிலும் தமிழ் எழுத்துரு வரும்.உங்கள் 
பார்வைக்கு எனது பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும்
தட்டச்சு செய்துள்ளேன். கீழே உள்ள படத்தை 
பாருங்கள்.

 


எழுத்துக்களுக்கு தேவையான வண்ணங்கள் கொடுத்து
கொள்ளுங்கள். ரைட். இப்போது மேலே உள்ள
லேயர் டெப்பிற்கு வாருங்கள்.அதை கிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில்
லேயர் ஸ்டைல் - ஸ்டோக் -கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன்ஆகும்.
 
இதில் சைஸ் -3, பொஸிசன் -அவுட் சைட், என இதில் 
உள்ள அளவுகளையே வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் தட்டச்சு செய்த எழுத்து மாறுவதை
காணலாம். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
ஒ.கே. கொடுங்கள்.
  
 நாம் ஏற்கனவே தட்டச்சு செய்ததற்கும் இப்போதுக்கும்
எழுத்து மாறிஉள்ளதை கவனியுங்கள்.
  
அடுத்து மீண்டும் அதேப்போலவே லேயர் - லேயர்
ஸ்டைல் - கிராடியன்ட் ஓவர்லே தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
  
அதிலும்  Blendmode=Normal, Opacity=40%,Gradiant (இந்த
டூலுக்கு எதிரில் உள்ள அம்புகுறியை கிளிக்
செய்தால் உங்களுக்கு நிறைய மாடல்கள்
கிடைக்கும். அதைப்பற்றி விரிவாக ஒரு 
பாடத்தில் சொல்கின்றேன். தற்சமயம் அதில் உள்ள
டிசைனையே தேர்வு செய்து கொள்ளுங்கள்)Style= Liner,
Angle =90 Scale 100% என அதில் உள்ள அளவுகளையே
கொடுத்து ஓ.கே. கொடுங்கள்.
  
இப்போது மீண்டும் லேயர் - லேயர் ஸ்டைல் -பெவல்
அண்ட் எம்போஸ் ( Bevel and Emboss) கிளிக்செய்யுங்கள்.
  
தேவைப்பட்டால் அளவுகளை மாற்றிக்கொள்ளுங்கள்.
 இல்லையென்றால்அதில் உள்ள அளவுகளை 
அப்படியே ஓ.கே. கொடுங்கள்.
 இப்போது மீண்டும் லெயர் - லெயர்ஸ்டைல்-
டிராப் ஷோடோ கிளிக் செய்யுங்கள்.
  
இதிலும் அதே அளவுகளை ஓ,கே. கொடுங்கள்.
கடைசியாக இதன் டுப்ளிகேட் தேர்வு செய்ய கீழ்
கண்டவாறு தேர்வு செய்யுங்கள்.
  
 ஒ.கே. கொடுங்கள். இப்போது உங்கள் எழுத்துக்கள்
மீதே மற்றும் ஒரு காப்பி அமர்ந்திருக்கும். இப்போது
மூவ் டூல் கொண்டு (டூல்பாரில் இரண்டாவதாக
இருக்கும் டூல்) உங்கள் எழுத்தினை மெல்ல
மவுஸால் கீழே இழுங்கள். எழுத்தின் பிம்பம் கீழே
வருவதை காணலாம்.
  
இப்போது மீண்டும் லேயர் ஸ்டைல் தேர்வு செய்து 
அதில் Opacity யை உங்களுக்கு தேவையான அளவுக்கு
வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த அளவினை
குறைக்க குறைக்க உங்கள் எழுத்தின் நிறம் மங்கி
வருவதை காணலாம்.


  
 தேவையான அளவு வந்ததும் ஒ.கே. கொடுங்கள்.கீழே
உள்ள படத்தை பாருங்கள்.
  
உங்களுக்காக மற்றும் ஒரு எழுத்தில் டிசைன் செய்தது.
உங்களுக்கு எழுத்துக்கள்சரியாக வந்துவிட்டால் 
புகைப்டங்களிலே எழுத்துக்களைகொண்டுவரலாம்
கோலர்லம்பூர் நண்பர் பெயரில் எழுத்துரு:-
 
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
 அதிக படங்களுடன் விளக்கவேண்டியுள்ளதால்
இந்த பக்கம் திறக்க நேரம் ஆவதை பொறுத்துக்
கொள்ளவேண்டுகின்றேன்.
எதேனும் சந்தேகமிருந்தால் கருத்தினில் கேளுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
வரேன் சொன்னாரு....இன்னும் வரக்காணேமே...!
 
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
 டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
 
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

18 comments:

  1. போடோஷப் பற்றி படிக்கவே ஆசையாய் இருக்கும் அதிலும் வேலன் மாப்ஸ் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சா ...
    ஆகா இன்னும் கொஞ்சம் சொல்லுமாறு கேட்க தோன்றும். வழக்கம் போல பிரமாதம்.

    அது ஆறு ......டவுசர், நானு,வேலன் மாப்ஸ் அப்புறம் ...அடங்காதவனா?
    சரிதான் டவுசர் ,டவுசர் போடாம கீதே மாப்ஸ். ஒரூ டவுசர் மாட்டி விடுங்கையா.

    ReplyDelete
  2. சூப்பர்ர்ர் பதிவு!!

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு..

    ReplyDelete
  4. அன்பு மிகு திரு வேலன் அவர்களுக்கு
    புதிய பாடம் மிக அருமை அத்துடன் எனது பெயரை அதில் பதிவு செய்து எனக்கு இன்ப அதிர்ச்சி செய்து விட்டீர்கள் தங்களின் அன்பிற்க்கு எனது நன்றி..
    என்றும் அன்புடன்
    முஹ்ம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  5. ரொம்ப சிம்பிளா சொல்லி இருக்கீங்க. நன்றி.

    ReplyDelete
  6. அருமையான பதிவு,அழகா சொல்லி இருக்கிங்க.நன்றி.

    ReplyDelete
  7. கக்கு - மாணிக்கம் கூறியது...
    போடோஷப் பற்றி படிக்கவே ஆசையாய் இருக்கும் அதிலும் வேலன் மாப்ஸ் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சா ...
    ஆகா இன்னும் கொஞ்சம் சொல்லுமாறு கேட்க தோன்றும். வழக்கம் போல பிரமாதம்.

    அது ஆறு ......டவுசர், நானு,வேலன் மாப்ஸ் அப்புறம் ...அடங்காதவனா?
    சரிதான் டவுசர் ,டவுசர் போடாம கீதே மாப்ஸ். ஒரூ டவுசர் மாட்டி விடுங்கையா//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. Mrs.Menagasathia சொன்னது…
    சூப்பர்ர்ர் பதிவு!!

    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. சிநேகிதி கூறியது...
    மிகவும் அருமையான பதிவு

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்ந்னறி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. mdniyaz கூறியது...
    அன்பு மிகு திரு வேலன் அவர்களுக்கு
    புதிய பாடம் மிக அருமை அத்துடன் எனது பெயரை அதில் பதிவு செய்து எனக்கு இன்ப அதிர்ச்சி செய்து விட்டீர்கள் தங்களின் அன்பிற்க்கு எனது நன்றி..
    என்றும் அன்புடன்
    முஹ்ம்மது நியாஜ்
    கோலாலம்பூர்//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களே....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. Chitra கூறியது...
    ரொம்ப சிம்பிளா சொல்லி இருக்கீங்க. நன்றி.ஃஃ

    தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. ஜெய்லானி கூறியது...
    அருமையான பதிவு,அழகா சொல்லி இருக்கிங்க.நன்றி.ஃ

    நன்றி ஜெய்லானி அவர்களே..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. பதிவுக்கு நன்றிங்க!

    அன்புடன்.மஜீத்.

    ReplyDelete
  14. பெயரில்லா கூறியது...
    பதிவுக்கு நன்றிங்க!

    அன்புடன்.மஜீத்//

    நன்றி மஜீத் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  15. ஆஹா என்னுடைய பெயரையும் இதுபோல் வரவச்சிட்டேன். பயனுள்ள பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. சசிகுமார் கூறியது...
    ஆஹா என்னுடைய பெயரையும் இதுபோல் வரவச்சிட்டேன். பயனுள்ள பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
    நன்றி சசிகுமார் அவர்களே..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  17. பெயரில்லா கூறியது... பதிவுக்கு நன்றிங்க! அன்புடன்.மஜீத்// நன்றி மஜீத் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  18. ஆஹா என்னுடைய பெயரையும் இதுபோல் வரவச்சிட்டேன். பயனுள்ள பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete