Monday, March 22, 2010

வேலன்:-புகைப்படத்தில் டிவிடி தயாரிக்க


நம்மிடம் புகைப்படங்கள் நிறைய இருக்கும். ஒவ்வோரு புகைப்படமும் ஒவ்வோரு சூழ்நிலையில் எடுத்திருப்போம். அந்த புகைப்படங்களை பெயரிட்டு பொருத்தமான பாடல்கள் சேர்த்து டிவிடியாக மாற்றி வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அதுபோல் போட்டோ ஸ்டுடியோ வைத்திரு்க்கும் நண்பர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி புகைப்டங்களை டிவிடி ஆல்பமாக மாற்றிக்கொடுக்கலாம்.இந்த சாப்ட்வேர் 25 எம்.பி.கொள்ளவு.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கி நமது கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் புகைப்படம் இருக்கும் டிரைவை தேர்வுசெய்ததும் மேல்புறம் அனைத்து புகைப்படங்களும் தெரியவரும்.

இப்போது கீழ்புறம் புதிய ஆல்பம் ஒன்றை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.

புதிய ஆல்பத்திற்கு பொருத்தமான பெயர் வைத்து ஒ.கே.தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இப்போது Album Photo என்பதனை தேர்வு செய்து உங்கள் புகைப்படங்களை Addசெய்து கொள்ளவும். 
புகைப்படங்களை தேர்வு செய்துவிட்டோம். இப்பொது அதற்கு தேவையான பாடல்களை சேர்க்க வேண்டாமா..? Transition & Music கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.இதில் உள்ள ADD கிளிக் செய்து உங்கள் விருப்பமான பாடலை தேர்வு செய்யுங்கள்.
சிலருக்கு பாடல் பிடிக்கும். சிலருக்கு இசை மட்டும் பிடிக்கும். சிலருக்கு பாடலில் சில வரிகள் பிடிக்கும் .உங்கள் விருப்பம் ஏதுவேண்டுமானாலும் இதில் உள்ள டிரிம் கிளிக் செய்து தேவையான பகுதியை மட்டும் தேர்வு செய்யலாம்.
இப்போது வலதுபுறம் ஆல்பம் செட்டிங்ஸ் இருக்கும்.அதில் உள்ள அளவுகளை தேவையான படி செட் செய்துகொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
அதைப்போலவே ஒரு படத்திற்கும் இன்னும் ஒரு படத்திற்கும் இடையில் எபெக்ட் களை சேர்க்கலாம்.அதனையும் நமது விருப்பபடி சேர்க்கலாம். இல்லை அதன் விருப்பத்திற்கு விட்டுவிடலாம்.நமது விருப்பபடி சேர்ப்பதானால் எபெக்ட்டை தேர்வு செய்து இரண்டு படங்களுக் குஇடையில் இழுத்துவந்து விடவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து ஆல்பம் தீம். இதில் வேண்டிய மாடலை தேர்வு செய்யலாம். அதைப்போலவே ஆரம்பிக்கும் போதும் முடியும் போதும் வேண்டிய வார்த்தைகளை இதில சேர்க்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

கடைசியாக ஆல்பம் ப்ரிவியு. இதை கிளிக் செய்து நாம் நம்முடைய படத்தை ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம். மாற்றங்கள் செய்யவேண்டுமானால் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புகைப்படங்கள் ரெடி. இப்போது மீண்டும் மேலே வாருங்கள். இதுவரையில் நாம் 1.Organize Photos தான் பார்த்தோம். இப்போது 2.Choose Menus பார்க்கலாம். அதை கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான மெனுவினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அதைப்போலவே நாம் விரும்பிய புகைப்படத்தையும் பேக்கிரவுண்ட்டாக வைத்துக்கொள்ளலாம்.இனி மூன்றாவதாக உள்ள Burn Disc கிளிக்செய்யுங்கள்.அதில் உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மட்டை கிளிக் செய்யுங்கள்.
இப்போது கீழே செட்டிங்ஸ் இருக்கும். தேவையான செட்டிங்குகளை அமைத்து்க்கொள்ளுங்கள்.
இறுதியாக Burn Now கிளிக் செய்து உங்கள் டிவிடியை தயார் செய்து கொள்ளுங்கள்.இனி நீங்க்ளே உங்கள் புகைப்படங்களில் டிவிடி ஆல்பம் சுலபமாக தயாரிப்பீர்கள் இல்லையா...
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
டிரைன் வழியிலேயே நின்றுவிட்டதே... யாராவது என்ன ஆயிற்று என்று கொஞ்சம் இறங்கித்தான் பாருங்களேன்...!
இன்றைய PSD புகைப்படம் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

அடுத்த பதிவு:-வலைப்பதிவர்களை கண்டுபிடியுங்கள்.

44 comments:

  1. இன்று நான் தான் பஸ்ட், நல்ல பயனுள்ள பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சசிகுமார் கூறியது...
    இன்று நான் தான் பஸ்ட், நல்ல பயனுள்ள பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    நன்றி சசிகுமார்...புதன் கிழமை பதிவில் உங்களுக்கும் ஓர் பங்கு இருக்கின்றது:.வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  3. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
    பயனுள்ள பதிவு நண்பரே.
    நன்றி சார்...புதன்கிழமை பதிவில் உங்களையும் சேர்த்துள்ளேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  4. வழக்கம் போல நல்ல இருக்கு மாப்ள.

    ReplyDelete
  5. அருமையான தகவல் ......... நானும் பல ஆல்பங்களை தயாரிக்க போறேன்...... நன்றி தோழரே ...

    ReplyDelete
  6. வேலன் சார்,
    இது மிகவும் பயனுள்ள பதிவு.சமிபகாலமாக தொடர்ந்து
    பார்த்து வருகிறேன்.
    பெண்டூல் கட் செய்ததும் போட்டோ வரவில்லை.ப்ளீஸ் கொஞ்சம் விளக்க முடியுமா? தேங்க்ஸ்
    குலன்,
    kulan@hotmail.it

    ReplyDelete
  7. மிகவும் அருமையான/உபயோகமான பதிவு

    ReplyDelete
  8. மிகவும் அருமையான/உபயோகமான பதிவு


    kathivakkam NSK

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள மென்பொருள் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்திருந்த மென்பொருள் வழக்கம் போல சூப்பர் பதிவு.

    பதிவுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  10. மிகவும் உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள். நிறைய் போட்டோஸ் உள்ளது. செய்து பார்க்க வேண்டும். போட்டோஷாப்பில் டவுட்ஸ் எங்கே கேட்பது.

    பென் டூலால் கட் செய்து முடித்தவுடன் அந்த படத்தை சுற்றிலும் செலக்ஷன் வரவேயில்லை. என்னால் மூவ் பண்ணவே(மூவ் டூல்பார் கொண்டு) முடியவில்லை. என்ன தவறு செய்தேன் என தெரியவில்லை. தங்களுக்கு தெரிந்தால் எனக்கு கூறுங்கள். தொந்தரவிற்கு மன்னியுங்கள்.

    அன்புடன்

    அஃப்ரின்

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ள பதிவு சகோ!! நிச்சயம் செய்து பார்க்கிறேன் ...

    ReplyDelete
  12. மிகவும் உபயோகப்படக்கூடிய பதிவு நன்றி

    ReplyDelete
  13. தலைப்பில் "டிவிடி தாயாரிக்க"
    என்று இருக்கிறது.. மாற்றிவிடவும்..

    ReplyDelete
  14. நான் நீரோ (Niro)மூலம் படங்களை dvd ஆக்குகிறேன். இது நீரோவை விட வசதி கூடியதாக இருக்குமா?
    இதில் தமிழ் தலைப்புக்கள் இலகுவாக இடும் வசதியுண்டா? என அறிய ஆவல்.

    ReplyDelete
  15. தேவையான தகவல் அருமை ..

    ReplyDelete
  16. கக்கு - மாணிக்கம் கூறியது...
    வழக்கம் போல நல்ல இருக்கு மாப்ள//

    நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  17. Engineering கூறியது...
    அருமையான தகவல் ......... நானும் பல ஆல்பங்களை தயாரிக்க போறேன்...... நன்றி தோழரே ..ஃ//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. kulan கூறியது...
    வேலன் சார்,
    இது மிகவும் பயனுள்ள பதிவு.சமிபகாலமாக தொடர்ந்து
    பார்த்து வருகிறேன்.
    பெண்டூல் கட் செய்ததும் போட்டோ வரவில்லை.ப்ளீஸ் கொஞ்சம் விளக்க முடியுமா? தேங்க்ஸ்
    குலன்,
    kulan@hotmail.it//
    எனது இந்த பதிவை சென்று பார்க்கவும்.தங்களுக்கு விடை கிடைக்கும் என எண்ணுகின்றேன்.
    http://velang.blogspot.com/2009/06/12pen-tool.html நன்றி...வாழ்க வளமுட்ன.வேலன்.

    ReplyDelete
  19. NSK கூறியது...
    மிகவும் அருமையான/உபயோகமான பதிவு//

    நன்றி NSK சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  20. Thomas Ruban கூறியது...
    மிகவும் பயனுள்ள மென்பொருள் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்திருந்த மென்பொருள் வழக்கம் போல சூப்பர் பதிவு.

    பதிவுக்கு நன்றி சார்.//

    நன்றி தாமஸ் ரூபன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  21. afrine கூறியது...
    மிகவும் உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள். நிறைய் போட்டோஸ் உள்ளது. செய்து பார்க்க வேண்டும். போட்டோஷாப்பில் டவுட்ஸ் எங்கே கேட்பது.

    பென் டூலால் கட் செய்து முடித்தவுடன் அந்த படத்தை சுற்றிலும் செலக்ஷன் வரவேயில்லை. என்னால் மூவ் பண்ணவே(மூவ் டூல்பார் கொண்டு) முடியவில்லை. என்ன தவறு செய்தேன் என தெரியவில்லை. தங்களுக்கு தெரிந்தால் எனக்கு கூறுங்கள். தொந்தரவிற்கு மன்னியுங்கள்.

    அன்புடன்

    அஃப்ரின்//

    தொந்தரவு எல்லாம் இல்லை அஃப்ரின் சார்..எனது முந்தைய போட்டோஷாப் பதிவினை படிக்கவும். உங்கள் கேள்விக்கான பதில் இந்த லிங்கில் உள்ளது:-http://velang.blogspot.com/2009/06/12pen-tool.html தங்கள இ-மெயில் முகவரி கொடுக்கவும். சந்தேகம் ஏதும் இருப்பின் தெரிவிக்கின்றேன்.வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  22. Mrs.Menagasathia கூறியது...
    மிகவும் பயனுள்ள பதிவு சகோ!! நிச்சயம் செய்து பார்க்கிறேன் ...

    நன்றி சகோதரி...புதன்கிழமை பதிவில் உங்களுக்கும் பங்கு இருக்கின்றது..வருகைக்கும கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  23. கவிதை காதலன் கூறியது...
    மிகவும் உபயோகப்படக்கூடிய பதிவு நன்றிஃ//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிதைகாதலன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  24. கவிதை காதலன் கூறியது...
    தலைப்பில் "டிவிடி தாயாரிக்க"
    என்று இருக்கிறது.. மாற்றிவிடவும்.//

    அச்சுப்பிழையால் நேர்ந்துவிட்டது.தவறை திருத்திவிட்டேன் நண்பரே..தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  25. யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
    நான் நீரோ (Niro)மூலம் படங்களை dvd ஆக்குகிறேன். இது நீரோவை விட வசதி கூடியதாக இருக்குமா?
    இதில் தமிழ் தலைப்புக்கள் இலகுவாக இடும் வசதியுண்டா? என அறிய ஆவல்.//

    ஆம் நீரோவை விட வசதியாக உள்ளது.தமிழில் தலைப்புகள் வைக்கும ்வசதியும் உள்ளது...தங்கள் வருகைக்கும கரு்தத்துக்கும நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  26. ஸ்ரீ.கிருஷ்ணா கூறியது...
    தேவையான தகவல் அருமை ..//

    நன்றி கிருஷ்ணா சார்...வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete
  27. குறைவான அளவுள்ள சாஃப்ட்வேரில் நிறைவான பலன் --வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  28. பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. ட்ரைன், அந்த இடத்தில நின்னா பரவாயில்லை. அங்கே இருந்து கீழே விழாமல் இருந்தால் போதும்.

    ReplyDelete
  30. மின் அஞ்சல் வழியாக பெறும் வசதியை உருவாக்குங்களேன் வேலன்?

    ReplyDelete
  31. வேலன் அண்ணா,

    நீங்க கொடுத்த லிங்கைப் பார்த்துதான் நான் பெண்டூல் வைத்து கட்பண்ணவே ஆரம்பித்து இருந்தேன். இதற்கு முன் பாலிகான் லாசோ டூல் மூலம்தான் கட் பண்ணுவேன்.

    ஒருபடம் நல்லவிதமாக கட் பண்ணினேன். அதில் உள்ள இன்னோரு படத்தை கட் செய்தேன் அதில் செலக்ஷன் பிளிக் ஆகவில்லை. என்னுடைய ஐடி. afrinebanu@yahoo.com.

    எனக்கு சில சந்தேகம் உள்ளது. கண்டிப்பாக மெயில் பண்ணுங்கள். நீங்கள் நிவர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

    நன்றி வேலன்

    சகோதரி

    அஃப்ரின்

    ReplyDelete
  32. ஜெய்லானி கூறியது...
    குறைவான அளவுள்ள சாஃப்ட்வேரில் நிறைவான பலன் --வாழ்த்துக்கள்!//

    நன்றி ஜெய்லானி சார்...வாழ்கவளமுடன்,வேலன்.

    ReplyDelete
  33. அன்பு கூறியது...
    பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்//

    நன்றி அன்பு சார்...வாழ்த்தியமைக்கு நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  34. Chitra கூறியது...
    ட்ரைன், அந்த இடத்தில நின்னா பரவாயில்லை. அங்கே இருந்து கீழே விழாமல் இருந்தால் போதும்.//

    ஆஹா...நினைக்கவே பயமாக இருக்கின்றது..தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  35. ஜோதிஜி கூறியது...
    மின் அஞ்சல் வழியாக பெறும் வசதியை உருவாக்குங்களேன் வேலன்?ஃ//

    செய்கின்றேன் ஜோதி சார்..வாழ்கவளமுடன்,வேலன்.

    ReplyDelete
  36. afrine கூறியது...
    வேலன் அண்ணா,

    நீங்க கொடுத்த லிங்கைப் பார்த்துதான் நான் பெண்டூல் வைத்து கட்பண்ணவே ஆரம்பித்து இருந்தேன். இதற்கு முன் பாலிகான் லாசோ டூல் மூலம்தான் கட் பண்ணுவேன்.

    ஒருபடம் நல்லவிதமாக கட் பண்ணினேன். அதில் உள்ள இன்னோரு படத்தை கட் செய்தேன் அதில் செலக்ஷன் பிளிக் ஆகவில்லை. என்னுடைய ஐடி. afrinebanu@yahoo.com.

    எனக்கு சில சந்தேகம் உள்ளது. கண்டிப்பாக மெயில் பண்ணுங்கள். நீங்கள் நிவர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

    நன்றி வேலன்

    சகோதரி

    அஃப்ரின்//

    தங்களுக்கு மெயில் அனுப்பிஉள்ளேன் சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  37. கலக்கல் நண்பரே . உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது . தொடர்ந்து இது போன்ற பயனுள்ள பதிவுகளை எதிர்பார்க்கிறேன் . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  38. திரு வேலன் அவர்கட்கு முனைவர் இரா. குணசீலன் - கவிஞர் ரிசான் செரீப் - மற்றும் உங்கள் ஆக்கங்களை மிகவும் விரும்பிப் படிப்பவன் நான்.மிகவும் பணிவாக உங்களுக்குச் சில வரிகள். போட்டோ சொப்பில் - குறித்த நிழற்படமொன்றில் அல்லது வேறேதேனுமொன்றில் போட்டோக்களை வெட்டி ஒட்டும்போது 'பென்' டூலைப் பயன்படுத்தி வெட்டுங்கள். பீதரின் அளவை .5 மாதிரி கொடுத்தால் முதலில் உள்ள போட்டோவுடன் ஒட்டியமாதிரி காணும். வித்தியாசம் விளங்க மாட்டாது. நீங்கள் ஒட்டிய பெண்ணின் போட்டோவின் தலைப்பகுதியைக் கவனிக்கவும். வெட்டிய கோடுகள் நன்கு காண்கின்றன. அடியேனின் பணிவான கருத்து இது.

    ReplyDelete
  39. வணக்கம்.... திரு.வேலன் அவர்களே...

    கீ அங்கே இருப்பதாக சொல்லி இருந்தீர்கள். மீண்டும் நான் நேற்று பதித்த பதிப்பை தேடி பார்த்தேன் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எவ்வள்ளவு தேடியும் ம்ஹூம்...

    அந்த கீயை எனக்கு ஜிமெயிலில் அனுப்பி தர முடியுமா? சிரமத்துக்கு மன்னிக்கவும்.

    என் முகவர் : ravidubai123@gmail.com

    நன்றி
    ரவி, துபாய்

    ReplyDelete
  40. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
    கலக்கல் நண்பரே . உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது . தொடர்ந்து இது போன்ற பயனுள்ள பதிவுகளை எதிர்பார்க்கிறேன் . பகிர்வுக்கு நன்றி ஃ//

    நன்றி பனித்துளி சங்கர் அவர்களே..தங்கள் வருகைக்கும வாழ்த்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  41. கலைமகன் கூறியது...
    திரு வேலன் அவர்கட்கு முனைவர் இரா. குணசீலன் - கவிஞர் ரிசான் செரீப் - மற்றும் உங்கள் ஆக்கங்களை மிகவும் விரும்பிப் படிப்பவன் நான்.மிகவும் பணிவாக உங்களுக்குச் சில வரிகள். போட்டோ சொப்பில் - குறித்த நிழற்படமொன்றில் அல்லது வேறேதேனுமொன்றில் போட்டோக்களை வெட்டி ஒட்டும்போது 'பென்' டூலைப் பயன்படுத்தி வெட்டுங்கள். பீதரின் அளவை .5 மாதிரி கொடுத்தால் முதலில் உள்ள போட்டோவுடன் ஒட்டியமாதிரி காணும். வித்தியாசம் விளங்க மாட்டாது. நீங்கள் ஒட்டிய பெண்ணின் போட்டோவின் தலைப்பகுதியைக் கவனிக்கவும். வெட்டிய கோடுகள் நன்கு காண்கின்றன. அடியேனின் பணிவான கருத்து இது.//

    குறைவான நேரததில் நிறைய படங்கள் ரெடிசெய்ய வேண்டியிருப்பதால் சின்ன சின்ன குறைகள் ஏற்படுகின்றது நண்பரே்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  42. Ravi கூறியது...
    வணக்கம்.... திரு.வேலன் அவர்களே...

    கீ அங்கே இருப்பதாக சொல்லி இருந்தீர்கள். மீண்டும் நான் நேற்று பதித்த பதிப்பை தேடி பார்த்தேன் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எவ்வள்ளவு தேடியும் ம்ஹூம்...

    அந்த கீயை எனக்கு ஜிமெயிலில் அனுப்பி தர முடியுமா? சிரமத்துக்கு மன்னிக்கவும்.

    என் முகவர் : ravidubai123@gmail.com

    நன்றி
    ரவி, துபாய்//

    அனுப்பி வைக்கின்றேன் நண்பரே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்கவளமுடன்,:வேலன்.

    ReplyDelete
  43. ரவி - துபாய்March 29, 2010 at 10:07 AM

    திரு வேலன்...

    நானும் தெடியதில் கீயோடு ஒன்று கிடைத்துவிட்டது.

    மேலும் இதிலே movie dvd maker என்ற ஒரு மென்பொருள் உள்ளது. அது கிடைக்க வழி செய்யலாமா?

    நன்றி

    ReplyDelete