Monday, March 29, 2010

வேலன்:-போட்டோ மேஜிக்

பூக்களை கொண்டு அழகிய மாலைகள் தொடுப்பது அதில் கை தேர்ந்தவர்களால்தான் முடியும். ஆனால் பூங்கொத்தை(பொக்கே) யார் வேண்டுமானாலும் செய்யலாம்.அதைப்போல் போட்டோஷாப் மூலம் அழகிய டிசைன்கள் செய்யலாம். ஆனால் அனுபவம் வேண்டும். இந்த சாப்ட்வேர் நாமே பொக்கே செய்வது மாதிரி.இதில் கொடுத்துள்ள டூல்களை கொண்டு நிமிடத்தில் போட்டோஷாப்பில் செய்வதுபோன்று போட்டோக்களை நாமே ரெடி செய்துவிடலாம். 4 எம்.பி. கொள்ளவு உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம செய்து உங்கள் கணிணியில இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலப்புறம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு கீழ்கண்ட டூல்கள் இருக்கும்.
முதலில் நீங்கள் Back Drop கிளிக் செய்து பேக்கிரவுண்ட் படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அடுத்து நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் புகைப்படததை தேர்வு செய்ததும் அது வலது மூலையில் வந்து அமர்ந்து கொள்ளும். அதை கர்சரால் இழுத்து வந்து உங்களுக்கு தேவையான இடத்தில வைத்துக் கொள்ளவும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
புகைப்படங்கள் வைத்துவிட்டீர்களா...ரைட் இனி டூலில் உள்ள Mask கிளிக் செய்யுங்கள் . உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த டூல் எதற்கு என்றால் படத்தை சுற்றி வேண்டிய டிசைனை நாம் போட்டுக் கொள்வதற்காக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள். நான் மாஸ்க் டிசைன் அனைத்துபடங்களிலும் போட்டுள்ளேன்.
அடுத்து கிளிப் ஆர்ட்..இதிலும் 20 புகைப்படங்கள் உள்ளது. அதில் எது தேவையோ அதை கிளிக் செய்து வேண்டிய இடத்தில் கர்சரால் இழுத்துவந்து விடவும்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
கிளிக் ஆர்ட் டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
அடுத்துள்ளது கார்ட்டூன்.இதில் விதவிதமான கார்ட்டூன் புகைப்படங்கள் உள்ளது. இதில் எந்த படம் தேவையோ அதைகிளிக் செய்து படத்தில கொண்டுவரலாம்.குழந்தை படங்களை இந்த கார்ட்டூன் படம் கொண்டு அசத்தலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்தது அவுட் லைன்.சிலர் வேடிக்கையாக சொல்வார்கள். உன்னை சுற்றி ஒளிவட்டம் இருக்குபார் என்று. இந்த டூல் மூலம் உண்மையான ஒளிவட்டத்தை நாம் கொண்டுவரலாம்.வேண்டிய புகைப்படத்தின் மீது கிளிக் செய்து ஒளி வட்டத்தை தேர்வு செய்ய புகைப்படத்தின் மீது ஒளிவட்டம் வந்துவிடும் .கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதைப்போல் அவர்கள் கற்பனை வாக்கியத்தையும் சேர்க்கலாம்.வேண்டிய டிசைனை தேர்வு செய்து கீழே உள்ள டெக்ஸ்டில் வாக்கியத்தை தட்டச்சு செய்து ஒ.கே. கொடுத்தால் வாக்கிய்ம் வந்துவிடும்.(தமிழினில் கூட வாக்கியம் அமைக்கலாம்)
அனைத்து வேலைகளும் முடிந்தது. கடைசியாக படத்திற்கு ப்ரேம். அமைக்கவேண்டும். வேண்டிய ப்ரேம் தேர்வு செய்து கிளிக் செய்தால் படத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அனைத்து வேலைகளும் செய்து முடித்தபின் இதை வேண்டிய இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.இதில் உள்ள எல்லா டூல்களையும் உபயோகித்து டிசைன் செய்த படம் கீழே:-(இதில் என்ன விஷேஷம் என்றால் பதிவு எழுதும் போது எனது மகன் உடன் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார். நான் சாப்பிட்டு வருவதற்குள் அவரே இந்த படத்தை டிசைன் செய்து வைத்திருந்தார்.நன்றாக இருக்கவே இதையும் பதிவினில் சேர்ந்துவிட்டேன்.) 
பயன்படுத்தி பாருங்கள்.கருத்துக்களை சொல்லுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.அடுத்த பதிவு போட்டோக்களில் கல்யாண ஆல்பம் சுலபமாக தயாரிப்பது பற்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
இங்கிருந்து பார்த்தாதான் கிரிக்கெட் மாட்ச் நன்றாக தெரிகின்றது...
இன்றைய PSD டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இந்த டிசைனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

42 comments:

  1. நண்பரே அசத்தல் சாப்ட்வேர், நான் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து விட்டேன் சூப்பரா இருக்கு. தகவலுக்கு நன்றி சார். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சசிகுமார் கூறியது...
    நண்பரே அசத்தல் சாப்ட்வேர், நான் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து விட்டேன் சூப்பரா இருக்கு. தகவலுக்கு நன்றி சார். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    நன்றி சசிகுமார்.உங்கள் இ-மெயில் முகவரிதரவும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  3. நீங்க இருக்குற தைரியத்துல நான்
    போட்டோ ஷாப் இன்ஸ்டால் செய்துவிட்டேன்.
    இனி உங்க பதிவை பார்த்து எல்லாம் கற்று கொள்ளவேன்.
    நன்றி வேலன் சார்.அப்புறம் வாழ்த்து மடல் செய்வது பற்றி ஏதவாது சொல்லுங்கள் சார் (திருமண,பிறந்தநாள்..)வாழ்த்து மடல்

    ReplyDelete
  4. அட ,பிரமாதமா இருக்கு, நான் உபயோகித்து பார்த்துவிட்டேன். மேலும்,அறிமுகப்படுத்துங்கள்.நன்றி!!!!

    ReplyDelete
  5. அருமையான மென்பொருள் வாழ்த்துக்கள் நன்றி சார்.

    பதிவுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  6. //S Maharajan சொன்னது…

    நீங்க இருக்குற தைரியத்துல நான்
    போட்டோ ஷாப் இன்ஸ்டால் செய்துவிட்டேன்..//

    போட்டோஷாப் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினீங்க?

    ReplyDelete
  7. எங்க வீட்டு கம்ப்யூட்டர் ல சும்மா துங்கிகிட்ருந்த போட்டோ ஷாப் ஐ தட்டி எழுப்பிட்டீங்க
    உங்களால நானும் போட்டோ ஷாப் ல பெரிய ஆளா வருவேன்
    சுவாரசியமான பதிவு பகிர்வுக்கு நன்றி வேலன்.

    ReplyDelete
  8. வணக்கம் வேலன் அண்ணா. உங்கள் மகனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததாக கூறவும்.

    ReplyDelete
  9. கிரிக்கெட் மேட்ச் ல நடக்கும் கோல்மால் தெரியுதா?

    ReplyDelete
  10. சார்,நீங்க தந்த பிரஷ் டூல் abrஆக உள்ளது ,pc
    இல்tpl ஆக உள்ளது.எப்படி
    மாற்றுவது.plz tell me, thanks
    kulan@hotmail.it

    ReplyDelete
  11. S Maharajan கூறியது...
    நீங்க இருக்குற தைரியத்துல நான்
    போட்டோ ஷாப் இன்ஸ்டால் செய்துவிட்டேன்.
    இனி உங்க பதிவை பார்த்து எல்லாம் கற்று கொள்ளவேன்.
    நன்றி வேலன் சார்.அப்புறம் வாழ்த்து மடல் செய்வது பற்றி ஏதவாது சொல்லுங்கள் சார் (திருமண,பிறந்தநாள்..)வாழ்த்து மடல்//

    வரும் பதிவுகள் உங்கள் தேவையை நிறைவேற்றும் நண்பரே..உங்கள் தெளிவான புகைப்படம் அனுப்பவும். போட்டோஷாப் பதிவில் இணைத்துக்கொள்கின்றேன்.வாழ்க வளமுடன்:வேலன்.

    ReplyDelete
  12. Mrs.Menagasathia கூறியது...
    பதிவு அருமை!//

    வருகைக்கும் கருத்துக்கும நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  13. மைதீன் கூறியது...
    அட ,பிரமாதமா இருக்கு, நான் உபயோகித்து பார்த்துவிட்டேன். மேலும்,அறிமுகப்படுத்துங்கள்.நன்றி!!!//

    நன்றி மைதீன் சார்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  14. Thomas Ruban கூறியது...
    அருமையான மென்பொருள் வாழ்த்துக்கள் நன்றி சார்.

    பதிவுக்கு நன்றி சார்.//

    நன்றி தாமஸ் ருபன் சார்..வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  15. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
    பகிர்வுக்கு நன்றி!!//

    நன்றி பனித்துளி சங்கர் சார்...வாழ்க வளமுடன். வேலன்.

    ReplyDelete
  16. shirdi.saidasan@gmail.com கூறியது...
    //S Maharajan சொன்னது…

    நீங்க இருக்குற தைரியத்துல நான்
    போட்டோ ஷாப் இன்ஸ்டால் செய்துவிட்டேன்..//

    போட்டோஷாப் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினீங்க?//

    நன்றி சீரடி சார்...வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete
  17. மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
    எங்க வீட்டு கம்ப்யூட்டர் ல சும்மா துங்கிகிட்ருந்த போட்டோ ஷாப் ஐ தட்டி எழுப்பிட்டீங்க
    உங்களால நானும் போட்டோ ஷாப் ல பெரிய ஆளா வருவேன்
    சுவாரசியமான பதிவு பகிர்வுக்கு நன்றி வேலன்//

    வாழ்த்துக்கள் மணி சார்்..உண்மையில நீங்கள் ஆயிரத்தில ஒருவனாக வர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. PRAKASH கூறியது...
    வணக்கம் வேலன் அண்ணா. உங்கள் மகனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததாக கூறவும்//

    நன்றி பிரகாஷ்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  19. Chitra கூறியது...
    கிரிக்கெட் மேட்ச் ல நடக்கும் கோல்மால் தெரியுதா?//

    அது இல்லாமல் கிரிக்கெட் மேட்சா...? தங்கள வருகைக்கும கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  20. kulan கூறியது...
    சார்,நீங்க தந்த பிரஷ் டூல் abrஆக உள்ளது ,pc
    இல்tpl ஆக உள்ளது.எப்படி
    மாற்றுவது.plz tell me, thanks
    kulan@hotmail.it//

    மெயில் அனுப்பி உள்ளேன் நண்பரே..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  21. shirdi.saidasan@gmail.com
    போட்டோஷாப் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினீங்க?

    that is crack version

    ReplyDelete
  22. அருமையான மென்பொருள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. வணக்கம் வேலன் அண்ணா! photoshop மூலமாக நான் உருவாக்கியுள்ள வாழ்த்து அட்டைகளிலும், photo frame இலும் இசைக்கோர்வைகளை ( உதாரணத்துக்கு மணியோசை, பிறந்தநாள் வாழ்த்து பாடல் ) இணைத்து நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்ப விரும்புகிறேன். இதற்கு ஏதேனும் வழிகள், மென்பொருட்கள் உள்ளனவா?

    ReplyDelete
  24. அற்புதம் வேலன் அண்ணா,

    உங்களுடைய ஒவ்வொரு பதிவினைப் பற்றியும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். உங்களுடைய போட்டோ ஆல்பம் தயாரிக்கும் முறையை.

    லேயர் பற்றிய பாடத்தையும் தொடங்குங்கள் அண்ணா. லேயர்மாஸ்க் எதற்காக உபயோகப்படுத்த வேண்டும்? உங்களுடைய psd பைலில் யூஸ் பண்ணியிருக்கீங்க. அப்புறம் லேயர் வழி காப்பி எதற்கு பயன்படுத்த வேண்டும்? இப்படி நிறைய சந்தேகம். உங்களால் எல்லாம் நிவர்த்தி ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். மிக்க நன்றீ அண்ணா.

    தங்கை

    அப்ரின்

    ReplyDelete
  25. //உங்கள் இ-மெயில் முகவரிதரவும்//

    yamsasi2003@gmail.com

    ReplyDelete
  26. arumai nanRi VElan saar....

    thodarattum ungaL paNi..........

    ReplyDelete
  27. ஹாய்,
    நண்பா, சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் நண்பா. நான் இதயும் ட்ரை பண்ணிட்டேன், அருமை. நான் ஏற்கனெவே உங்களோட எல்லாம் ட்ரை பண்ணியிருக்கேன். வெரி குட். நன்றி பல பல. இருங்க அடுத்ததயும் ட்ரை பண்ணிட்டு வர்ரேன்.

    ReplyDelete
  28. ஹாய்,
    நண்பா, சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் நண்பா. நான் இதயும் ட்ரை பண்ணிட்டேன், அருமை. நான் ஏற்கனெவே உங்களோட எல்லாம் ட்ரை பண்ணியிருக்கேன். வெரி குட். நன்றி பல பல. இருங்க அடுத்ததயும் ட்ரை பண்ணிட்டு வர்ரேன்.

    ReplyDelete
  29. S Maharajan கூறியது...
    shirdi.saidasan@gmail.com
    போட்டோஷாப் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினீங்க?

    that is crack version//

    நன்றி மகாராஜன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  30. karthik கூறியது...
    அருமையான மென்பொருள் வாழ்த்துக்கள்//

    நன்றி கார்த்திக் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  31. PRAKASH கூறியது...
    வணக்கம் வேலன் அண்ணா! photoshop மூலமாக நான் உருவாக்கியுள்ள வாழ்த்து அட்டைகளிலும், photo frame இலும் இசைக்கோர்வைகளை ( உதாரணத்துக்கு மணியோசை, பிறந்தநாள் வாழ்த்து பாடல் ) இணைத்து நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்ப விரும்புகிறேன். இதற்கு ஏதேனும் வழிகள், மென்பொருட்கள் உள்ளனவா?//
    இருக்கு நண்பரே...அதையும் பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  32. afrine கூறியது...
    அற்புதம் வேலன் அண்ணா,

    உங்களுடைய ஒவ்வொரு பதிவினைப் பற்றியும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். உங்களுடைய போட்டோ ஆல்பம் தயாரிக்கும் முறையை.

    லேயர் பற்றிய பாடத்தையும் தொடங்குங்கள் அண்ணா. லேயர்மாஸ்க் எதற்காக உபயோகப்படுத்த வேண்டும்? உங்களுடைய psd பைலில் யூஸ் பண்ணியிருக்கீங்க. அப்புறம் லேயர் வழி காப்பி எதற்கு பயன்படுத்த வேண்டும்? இப்படி நிறைய சந்தேகம். உங்களால் எல்லாம் நிவர்த்தி ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். மிக்க நன்றீ அண்ணா.

    தங்கை

    அப்ரின்//

    நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  33. சசிகுமார் கூறியது...
    //உங்கள் இ-மெயில் முகவரிதரவும்//

    yamsasi2003@gmail.com//

    நன்றி நண்பரே...மெயில் அனுப்பிஉள்ளேன். வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  34. simbu கூறியது...
    arumai nanRi VElan saar....

    thodarattum ungaL paNi.//

    நன்றி சிம்பு சார்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  35. Sumathi. கூறியது...
    ஹாய்,
    நண்பா, சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் நண்பா. நான் இதயும் ட்ரை பண்ணிட்டேன், அருமை. நான் ஏற்கனெவே உங்களோட எல்லாம் ட்ரை பண்ணியிருக்கேன். வெரி குட். நன்றி பல பல. இருங்க அடுத்ததயும் ட்ரை பண்ணிட்டு வர்ரேன்.//

    தங்கள வருகைக்கும கருத்துக்கும் நன்றி நண்பா...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  36. வேலன். கூறியது...
    Sumathi. கூறியது...
    ஹாய்,
    நண்பா, சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் நண்பா. நான் இதயும் ட்ரை பண்ணிட்டேன், அருமை. நான் ஏற்கனெவே உங்களோட எல்லாம் ட்ரை பண்ணியிருக்கேன். வெரி குட். நன்றி பல பல. இருங்க அடுத்ததயும் ட்ரை பண்ணிட்டு வர்ரேன்.//

    தங்கள வருகைக்கும கருத்துக்கும் நன்றி நண்பா...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  37. வெங்கடேஷ்April 3, 2010 at 1:50 PM

    நண்பரே மிகவும் அருமையான சாப்ட்வேர் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி
    தினமும் தங்கள் இணையதளம் வந்து பார்ககாமல் போனால் எதையோ தவறவிட்டு விட்டோமோ என்ற எண்ணம்
    ஏற்படுகிறது அவ்வளவு அருமையாக உள்ளது தாங்கள் தரும் தகவல்கள்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  38. வெங்கடேஷ் கூறியது...
    நண்பரே மிகவும் அருமையான சாப்ட்வேர் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி
    தினமும் தங்கள் இணையதளம் வந்து பார்ககாமல் போனால் எதையோ தவறவிட்டு விட்டோமோ என்ற எண்ணம்
    ஏற்படுகிறது அவ்வளவு அருமையாக உள்ளது தாங்கள் தரும் தகவல்கள்
    நன்றி நண்பரே//
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் வெங்கடேஷ் அவர்களே...தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  39. Velan Anna,

    I have seen today only your blog. I have been reading all your articles since last three hours. N ow i could not tolerate i want to try all those things and unfortunately i was not able to download the softwares through 4Shared.

    Can you give some suggestion how can i get those softwares.

    Thanks and wishing you for your wonderful work.

    M. Prabhu
    m.prabhu0@gmail.com
    Gurgaon

    ReplyDelete
  40. Velan Anna,

    I have seen today only your blog. I have been reading all your articles since last three hours. N ow i want to try all those things and unfortunately i was not able to download the softwares through 4Shared.

    Can you give some suggestion how can i get those softwares.

    Thanks and wishing you for your wonderful work.

    ReplyDelete