Wednesday, April 21, 2010

வேலன்:-இணையம் மூலம் போட்டோ டிசைன் செய்ய

வாழ்த்தலாம் வாங்க பதிவிற்கு வந்து வாழ்த்தி ஓட்டுப்போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..ஏப்ரல் மற்றும் மே மாதம் பிறந்த நாள் -மற்றும் திருமணநாள் கொண்டாட இருக்கும் நண்பர்கள் தங்கள் விவரங்களை கீழ்கண்ட இ-மெயில் முகவரிக்கு தெரிவிக்க வேண்டுகின்றேன்.முகவரி:-vazthalamvanga@gmail.com.
அன்புடன்,
வாழ்க வளமுடன்.
வேலன்.

இன்றைய பதிவில் போட்டோக்கள் விதவிதமான தோற்றங்கள் கொண்டு வருவதை பற்றிப்பார்க்கலாம். இதற்காக தனியே சாப்ட்வேர்கள் ஏதும் தேவையில்லை. இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் டிசைன் செய்ய இங்கு செல்லவும். உங்களுக்கு கீழ்கண்ட தளம் தோன்றும்.அதில்
Canvas Tiles Photo Effect
Film Strip Photo Effect
Motivational Posters
Photo Circles Effect
Pixel Photo Frame
Postage Stamp Photo Effect
Star Dust Photo Effect
Swirl Photo Frame
Wall Painting Photo Effect
Whirl Photo Effect 
போன்ற எபெக்ட் கள் உள்ளது. இதில்  ஏதாவது ஒரு டிசைனை தேர்வு செய்து பின்னர் உங்கள் புகைப்படம் இருக்கும் இடத்தை தேர்வு செய்து Upload கொடுங்கள். சில நிமிடங்கள் காத்திருந்தபின் நீங்கள் தேர்வு செய்த டிசைனில் படம் வருவதை காணலாம்.
நான் Film Strip Photo Effect -ல் இணைத்த புகைப்படம் கீழே:-

மற்றும் ஓரு டிசைன் கீழே:-
இதில் மொத்தம் 42 எபெக்ட்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.எந்த டிசைன் வேண்டுமோ அதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தின் ப்ரிவியு பாருங்கள்.
இதில் உள்ள ப்ரேம் டிசைனில் விதவிதமான பூக்கள் டிசைன்கள் உள்ளது். தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
முதலில ஓரு படம் நாம் தேர்வு செய்தால் போதுமானது். அதன் மூலமே மற்ற எல்லா டிசைன்களையும் நாம் ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம் மேலும் அதில அளவினை மாற்றுவது - திருப்புவது - செய்துகொள்ளலாம். ஒவ்வொரு டிசைனையும் தனியே பதிவிறக்கி சேமித்தும் கொள்ளலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பயன்படுத்திப் பாருங்கள் கருத்தினை கூறுஙகள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ரெண்டுபேரும் போட்டில் ஏறிக்கொண்டால் யார் போட்டை தள்ளி விடுவதாம்...?


இன்றைய PSD டிசைன் படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.

24 comments:

  1. வேற யாரு? இரண்டு பூனைகளையும் உள்ளே வைத்த நீங்கதான் தள்ளி விடணும். :-)

    ReplyDelete
  2. DJ.RR.SIMBU.BBA-SINGAIApril 21, 2010 at 6:27 AM

    வேலன் சார்,

    பிரமாதம்...

    உங்களிடம் இருந்து நிறய கற்று வருகிறேன் சார்....

    இப்போது நண்பரகளின் திருமணங்களுக்கு டிசைன் செய்யுமளவிற்கு வளர்ந்து விட்டேன்..

    நன்றி சார்...

    தொடரட்டும் உங்கள் பணிகள்...

    சின்ன வேண்டுகோள், வீட்டு விசேசங்களுக்கு டிஜிட்டல் பேனர் சுலபமாக டிசைன் செய்ய எதாவது மென்பொருள்கள் இருந்தால் பதிவிடவும்.....

    ReplyDelete
  3. அருமை வேலன் சார்

    ReplyDelete
  4. சர்வர் நிறைய பொருமையை சோதிக்கும். போட்டே பக்கெட்டில் சில திருத்தம் செஞ்சி பாத்த அனுபவத்தில் உலகமே வெறுத்து விட்டது. இதில் எப்படின்னு பார்கலாம்.

    ReplyDelete
  5. மிக அருமையாக சொல்லிதருகிறீர்கள்.

    பாவம் பூனைகுட்டிக்கள் அங்கே நானிருந்தால் இரண்டு பூனைகளையும் தள்ளிவிடுவேன்.

    ReplyDelete
  6. இந்த தகவலை தந்தமைக்கு நன்றி வேலன் சார்.

    ReplyDelete
  7. சார் இன்னைக்கும் ஒரு புது விஷயம் கத்துகிட்டேன். ரெண்டு நாளா ஆபிஸ் பக்கம் வர முடியவில்லை அதனால் தான் உங்களுடைய பதிவிற்கு எதுக்கும் கருத்து போட முடியவில்லை.

    ReplyDelete
  8. நன்றுவும் நன்றியும்

    ReplyDelete
  9. வேலன் சார்,

    அருமையான பதிவு, நல்ல தகவல்.

    வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  10. Chitra கூறியது...
    வேற யாரு? இரண்டு பூனைகளையும் உள்ளே வைத்த நீங்கதான் தள்ளி விடணும். :-)//

    ஆஹா... நைஸா எஸ்கேப் ஆகலாமுனு பார்த்தால் மாட்டிவிட பார்க்கின்றீர்களே சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  11. DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
    வேலன் சார்,

    பிரமாதம்...

    உங்களிடம் இருந்து நிறய கற்று வருகிறேன் சார்....

    இப்போது நண்பரகளின் திருமணங்களுக்கு டிசைன் செய்யுமளவிற்கு வளர்ந்து விட்டேன்..

    நன்றி சார்...

    தொடரட்டும் உங்கள் பணிகள்...

    சின்ன வேண்டுகோள், வீட்டு விசேசங்களுக்கு டிஜிட்டல் பேனர் சுலபமாக டிசைன் செய்ய எதாவது மென்பொருள்கள் இருந்தால் பதிவிடவும்.....//

    நன்றி சிம்பு...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  12. S Maharajan கூறியது...
    அருமை வேலன் சார்//

    நன்றி மகாராஜன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  13. ஜெய்லானி கூறியது...
    சர்வர் நிறைய பொருமையை சோதிக்கும். போட்டே பக்கெட்டில் சில திருத்தம் செஞ்சி பாத்த அனுபவத்தில் உலகமே வெறுத்து விட்டது. இதில் எப்படின்னு பார்கலாம்.//

    இது எப்படி இருக்கு ஜெய்லானி சார்...பயன்படுத்திப்பார்த்து சொல்லுங்கள். வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  14. அன்புடன் மலிக்கா கூறியது...
    மிக அருமையாக சொல்லிதருகிறீர்கள்.

    பாவம் பூனைகுட்டிக்கள் அங்கே நானிருந்தால் இரண்டு பூனைகளையும் தள்ளிவிடுவேன்.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...பூனைகளை தள்ளிவிடுவேன் என்று சொன்னீர்கள். ஆனால் எங்கே என்று சொல்லவேயில்லையே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  15. imran கூறியது...
    இந்த தகவலை தந்தமைக்கு நன்றி வேலன் சார்.//

    நன்றி இம்ரான.. புத்தகப்பையை கழற்றி வைத்துவிட்டு இந்தபக்கமாக கொஞ்சம் திரும்பக்கூடாதா? வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  16. சசிகுமார் கூறியது...
    சார் இன்னைக்கும் ஒரு புது விஷயம் கத்துகிட்டேன். ரெண்டு நாளா ஆபிஸ் பக்கம் வர முடியவில்லை அதனால் தான் உங்களுடைய பதிவிற்கு எதுக்கும் கருத்து போட முடியவில்லை.//

    அதான் ஆளையே காணோமே என்று பார்த்தேன். வருகைக்கு நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  17. ஆ.ஞானசேகரன் கூறியது...
    நன்றுவும் நன்றியும்//

    ஞான சேகரன் சார்...இந்த தளத்தை புக்மார்க் செய்துகொள்ளுங்கள்.பின்னர் உபயோகப்படும். வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. Mrs.Menagasathia கூறியது...
    சூப்ப்ர்ர்...//

    நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  19. சே.குமார் கூறியது...
    அருமை வேலன் சார்//

    நன்றி குமார் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  20. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,

    அருமையான பதிவு, நல்ல தகவல்.

    வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்//
    நன்றி முத்துக்குமார் சார்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன் வேலன்.

    ReplyDelete
  21. karthik கூறியது...
    very nice//

    நன்றி கார்திக் வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  22. வேற யாரு? இரண்டு பூனைகளையும் உள்ளே வைத்த நீங்கதான் தள்ளி விடணும். :-)

    ReplyDelete