Monday, April 12, 2010

வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த

போட்டோஷாப்பில் இன்று ஓன்பதாக உள்ள Clone Stamp Tool பற்றி பார்க்கலாம். இது ஒரு புகைப்படத்தில் ஒன்றுடன ஓன்று சேர்ப்பதற்கும் புதிய உருவத்தை உருவாக்குவதற்கும் இருக்கும் உருவத்தை இல்லாமல் செய்வதற்கும் பயன்படும். ஆக்கும் தொழிலையும் அழிக்கும் வேலையையும் அடையாளம் தெரியாமல் செய்யும் டூல் இது.நீங்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.பின்னர் டூல்கள் வரிசையில் ஒன்பதாக உள்ள இந்த டூலை தேர்வு செய்துகொள்ளுங்கள். இப்போது மேலே உங்களுக்கு பிரஷ் மெனு வரும் இதில் தேவையான அளவிற்கு பிரஷ் சைஸ் வைத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
 அழகிய பார்க்கில் பெஞ்ச் ஒன்று உள்ளது. இப்போது இந்த பெஞ்ச் நமக்கு தேவையில்லையென்றால் சுலபமாக எடுத்து விடலாம். இப்போது நீங்கள் Clone Stamp Tool தேர்வு செய்துஉள்ளீர்கள் அல்லவா...கர்சரை இப்போது படத்திற்கு நடுவில் தரையில் கொண்டுவாருங்கள். உங்கள் கர்சரானது சிறிய வட்டத்துடன் உள்ளதா..இப்போழுது தேவையான இடத்தில் கர்சரை வைத்து Alt கீ யை அழுத்துங்கள். உங்கள் கர்சரின் வட்டமானது பெருக்கல் குறியுடன் வரும் .கர்சரை ஒரு கிளிக் செய்யுங்கள். இப்போழுது பெஞ்ச அருகே கர்சரை கொண்டு வாருங்கள். மெதுவாக பெஞ்ச மீது தேயுங்கள். பெஞ்ச் மறைந்து அந்த இடத்தில் உங்களுக்கு இலைகள் வருவதை காணலாம்.பெஞ்ச் அறிகுறியே இல்லாமல் செய்துவிடுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருஙகள்.
பெஞ்ச் இருந்த இடம் தெரியாமல் காலி செய்துவிட்டோமா..இப்போது அதைப்போல் உருவம் உருவாக்குவதை காணலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது இதைப்போல இன்னும் ஒரு பிம்பம் கொண்டுவர முன்பு சொன்னதுபோல் கர்சரால் உருவத்தின் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள்.வேண்டிய இடத்தில் வைத்து கர்சரை கிளிக் செய்தவாறே படத்தில் தேயுங்கள்.படம் அழகாக வரும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதைப்போலவே ஒரு படத்தினுள் மற்றும் ஒரு படத்தையும் கொண்டுவரலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
மிஸ்டர் பீன் படத்தை இதுபோல மாற்றிஉள்ளார்கள். நான் கூடுதல் எபெக்ட்டாக அவருக்கு நெற்றிக்கண் பொருத்தியுள்ளேன்.படத்தினை பாருங்கள்.
இந்த டூல் மூலம் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என அடுத்த பதிவில் காணலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
அடுத்த பதிவு தமிழ் புத்தாண்டு அன்று. அன்று உங்களுக்கு ஒர் இன்ப அதிர்ச்சி இருக்கின்றது. புத்தாண்டு அன்று சந்திப்போம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ம்...கல்யாணத்திற்கு முன்னர்தான் நீ..பாதி நான் பாதி டைலாக் எல்லாம்.இப்போது எல்லாம் எனக்கு உணவை நீ கொடுக்கறதே இல்லை...
இன்றைய PSD புகைப்படம் கீ்ழே:-
Design செய்த பின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக் க இங்கு கிளிக் செய்யவும்.

26 comments:

  1. "அழகிய பார்க்கில் பெஞ்ச் ஒன்று உள்ளது. இப்போது இந்த பெஞ்ச் நமக்கு தேவையில்லையென்றால் சுலபமாக எடுத்து விடலாம். இப்போது நீங்கள் Clone Stamp Tool தேர்வு செய்துஉள்ளீர்கள் அல்லவா"

    சிறப்பான தகவல்
    நன்றி வேலன்

    ReplyDelete
  2. என்னது என் படம் உங்கள் கைவண்ணத்தில்
    மிக்க நன்றி வேலன்

    ரொம்ப சந்தோசமாக இருக்கு
    நன்றி வேலன்

    ReplyDelete
  3. Mr.Bean photo வை பாத்து பயந்து போயிட்டியா?அதற்குள்ள சாப்பாடு பங்கு பிரிப்பதற்கு போயிட்டாங்களா?

    ReplyDelete
  4. மாப்ள, போட்டோ ஷாப்ல எனக்கு ரொம்ப
    பிடிச்ச டூல் இந்த க்ளோனிங் டூல்தான்.

    ஆமாம், உங்களை நீங்களே க்ளோனிங் பண்ணிக்கொள்ள வேண்டுமா?
    உங்க ஊரில் கோவிலில் கழுகுதான் இல்லை, யானை கூடவா இலை?

    ReplyDelete
  5. நல்லா கத்துகிட்டேன் நண்பா, ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை உள்ளது பென் டூலில் முழுவதும் செலக்ட் செய்த பிறகு அந்தபகுதி மட்டும் கருப்பாக மாறிவிடுகிறது. அதை எப்படி தவிர்ப்பது நண்பரே

    ReplyDelete
  6. ஹாய் நண்பா,

    சரி இந்த டூல் எங்கே? எனக்கும் வேனுமே..

    ReplyDelete
  7. வணக்கம் வேலன் அண்ணா, க்ளோம் ஸ்டாம்ப் பற்றிய தங்களது பதிவு மிக அருமையாக உள்ளது. தங்களது பாடத்தை விடாமல் பயின்று வந்து கொண்டிருக்கிறேன். பூவில் அழகா செய்துள்ளீர்கள் போட்டோவை. ஆனால் முகம் இதழில் பதிந்தது போல எப்படி செய்வது. அதாவது Apply image பயன்படுத்துபோது ஒருமாற்றம் வருமில்லையா அந்த மாதிரி எப்படி கொண்டு வருவது அண்ணா.

    தங்கை

    அப்ரின்

    ReplyDelete
  8. அருமையான பதிவு!!

    ReplyDelete
  9. முஹம்மது நியாஜ்April 12, 2010 at 8:41 PM

    திரு வேலன் அவர்களுக்கு
    நான் தேடிக்கொண்டிருந்த் பாடத்தை பயிற்று வித்தமைக்கு மிக்க நன்றி முயற்சிக்கின்றேன்
    என்றும் அனபுடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  10. ஹாய் அரும்பாவூர் கூறியது...
    "அழகிய பார்க்கில் பெஞ்ச் ஒன்று உள்ளது. இப்போது இந்த பெஞ்ச் நமக்கு தேவையில்லையென்றால் சுலபமாக எடுத்து விடலாம். இப்போது நீங்கள் Clone Stamp Tool தேர்வு செய்துஉள்ளீர்கள் அல்லவா"

    சிறப்பான தகவல்
    நன்றி வேலன்//
    நன்றி அரும்பாவூர் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  11. ஹாய் அரும்பாவூர் கூறியது...
    என்னது என் படம் உங்கள் கைவண்ணத்தில்
    மிக்க நன்றி வேலன்

    ரொம்ப சந்தோசமாக இருக்கு
    நன்றி வேலன்//

    நன்றி அரும்பாவூர் அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  12. Chitra கூறியது...
    Mr.Bean photo வை பாத்து பயந்து போயிட்டியா?அதற்குள்ள சாப்பாடு பங்கு பிரிப்பதற்கு போயிட்டாங்களா?//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  13. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மாப்ள, போட்டோ ஷாப்ல எனக்கு ரொம்ப
    பிடிச்ச டூல் இந்த க்ளோனிங் டூல்தான்.

    ஆமாம், உங்களை நீங்களே க்ளோனிங் பண்ணிக்கொள்ள வேண்டுமா?
    உங்க ஊரில் கோவிலில் கழுகுதான் இல்லை, யானை கூடவா இலை?//
    அடுத்த போட்டோஷாப் பதிவில் யானையை போட்டுவிடலாம் மாம்ஸ்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  14. ஜகதீஸ்வரன் கூறியது...
    அருமை!.//

    நன்றி ஜகதீஸ்வரன் சார்..பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என் எண்ணுகின்றேன்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  15. JKR கூறியது...
    நட்பும் தோழமையும் தவிர்த்து, வேறென்ன வேண்டும் வாழ்வில் நல்ல பதிவு நண்பா தோழமையுடன் mullaimukaam.blogspot.co//
    நட்பும் தோழமையும் தவிர்த்து, வேறென்ன வேண்டும் வாழ்வில் - நல்ல வரிகள் நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  16. சசிகுமார் கூறியது...
    நல்லா கத்துகிட்டேன் நண்பா, ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை உள்ளது பென் டூலில் முழுவதும் செலக்ட் செய்த பிறகு அந்தபகுதி மட்டும் கருப்பாக மாறிவிடுகிறது. அதை எப்படி தவிர்ப்பது நண்பரே//

    சின்ன ப்ராப்ளம் தான் நண்பரே...மெயிலில் விளக்கமாக அனுப்பிவைக்கின்றேன். வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  17. sumathi கூறியது...
    ஹாய் நண்பா,

    சரி இந்த டூல் எங்கே? எனக்கும் வேனுமே..
    நண்பரே...டூல் மெனுவிலே உள்ளதே..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. afrine கூறியது...
    வணக்கம் வேலன் அண்ணா, க்ளோம் ஸ்டாம்ப் பற்றிய தங்களது பதிவு மிக அருமையாக உள்ளது. தங்களது பாடத்தை விடாமல் பயின்று வந்து கொண்டிருக்கிறேன். பூவில் அழகா செய்துள்ளீர்கள் போட்டோவை. ஆனால் முகம் இதழில் பதிந்தது போல எப்படி செய்வது. அதாவது Apply image பயன்படுத்துபோது ஒருமாற்றம் வருமில்லையா அந்த மாதிரி எப்படி கொண்டு வருவது அண்ணா.

    தங்கை

    அப்ரின்//

    அடுத்த பதிவில் விளக்கமாக சொல்கின்றேன் சகோதரி..நீங்கள் அனுப்பிய பூவின் புகைப்படத்தை தான் பயன்படுத்திஉள்ளேன்.வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  19. Mrs.Menagasathia கூறியது...
    அருமையான பதிவு!//

    தங்கள வருகைக்கு நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  20. முஹம்மது நியாஜ் கூறியது...
    திரு வேலன் அவர்களுக்கு
    நான் தேடிக்கொண்டிருந்த் பாடத்தை பயிற்று வித்தமைக்கு மிக்க நன்றி முயற்சிக்கின்றேன்
    என்றும் அனபுடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர.//

    நன்ற் நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  21. காலங்கருதி அருமையான பதிவினை எழுதியிருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  22. எல்லோரும் புரியும் படியாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளீர்கள், மேலும் எதிர்பார்கிறேன்.
    நன்றி சார்.

    ReplyDelete
  23. சே.குமார் கூறியது...
    காலங்கருதி அருமையான பதிவினை எழுதியிருக்கின்றீர்கள்//

    தங்கள் வருகைக்கு நன்றி குமார் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  24. www.bogy.in கூறியது...
    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  25. Kiyass கூறியது...
    எல்லோரும் புரியும் படியாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளீர்கள், மேலும் எதிர்பார்கிறேன்.
    நன்றி சார்//

    நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete