Sunday, May 2, 2010

வேலன்:-போட்டோக்களில் தேதி மற்றும் பெயர் கொண்டுவர

சில போட்டோக்களில் அந்த புகைப்படம் எடுத்த
 தேதி அல்லது அந்த புகைப்படம் பற்றிய சிறு குறிப்பு 
எழுதிவைத்தால் நன்றாக இருக்கும்.ஆனால் அதற்கு
 போட்டாஷாப் தேவை.ஆனால் போட்டோஷாப்
 உதவியில்லாமல் நமது புகைப்படங்களில் பெயர்
 மற்றும் தேதியை இந்த சாப்ட்வேர் மூலம் கொண்டு
வரலாம்.முதலி்ல் இதனை பதிவிறக்க இங்கு கிளிக் 
செய்யவும்.800 கே.பி. கொள்ளளவு தான் இது. இதனை
 பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும்
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்.ஆகும்.
இதில் இடதுபக்க மூலையில் உங்கள் கணிணியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கும்.அதில் புகைப்படங்கள் உள்ள டிரைவை தேர்வு செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் புகைப்படத்தை தேர்வு செய்தால் வலதுபக்கத்தில் புகைப்படம் தேர்வாகும். இதில் அதன் ஆறு பக்கங்களிலும் ரேடியோ பட்டன் இருக்கும். அதில நீங்கள் எதை கிளிக் செய்கின்றீர்களோ அந்த இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரோ - தேதியோ கொண்டுவரலாம். அதைப்போல் Signature என்பதின் கீழே உள்ள தேதியை தேர்வு செய்தால் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி தானாக வரும். அதுஇல்லாமல் நீங்கள் உங்கள் பெயரையோ அல்லது புகைப்படத்தை பற்றிய குறிப்பையோ குறிப்பிட விரும்பினால் Your Test என்கின்ற ரேடியோ பட்டனை தேர்வு செய்து கீழே உள்ள பாண்ட் மற்றும் அளவு மற்றும் நிறங்களை தேவைக்கு ஏற்றவாறு கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் ப்ரிவியுவும் பார்க்கும் வசதி உள்ளது. மாற்றங்கள் வேண்டுமானால் ப்ரிவியு பார்த்து செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கரு்த்தினை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
விஜய் ஒரு படத்தில் கேட்பார்..மீனுக்கு கால் இருக்கா என்று...அதுபோல் நான் உங்களை கேட்கின்றேன்...மீனுக்கு கண்இருக்கா.இல்லையா என்று.பார்த்துசொல்லுங்கள்.
இன்றைய PSD - டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

27 comments:

  1. வேலன் சார்,

    வழக்கம்போலவே அசத்தல்....

    பயனுள்ள பதிவு...

    பகிர்விற்கு நன்றி சார்...

    ReplyDelete
  2. அருமையான பதிவு
    பகிர்வுக்கு மிக்க நன்றி
    வேலன் சார்.....

    ReplyDelete
  3. மீன் போன்ற கண்கள் (கயல் விழிகள்) இருந்தால் வேடிக்கையாகத்தான் இருக்குமோ?
    :-)

    ReplyDelete
  4. //விஜய் ஒரு படத்தில் கேட்பார்..மீனுக்கு கால் இருக்கா என்று...//


    மீனுக்கு கால் இருக்கோ இல்லையோ .. மொதல்ல விஜய்க்கு மூளை இருக்கான்னு கேளுங்க!!!

    ReplyDelete
  5. வேலன் சார்,

    வழக்கம்போலவே அசத்தல்....

    யனுள்ள பதிவு...

    ReplyDelete
  6. வேலன் சார்,

    கலக்கலான பதிவு. வாழ்த்துகள் உங்கள் அருமையான தகவல்களுக்கு

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  7. இதுபோன்ற தொழில் ரகசியங்களை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பதிவிடுவது உண்மையாகவே பாராட்டவேண்டிய விஷயம்.எனக்கு ஒரு ஆலோசனை தேவை.
    GPRS வசதி உள்ள நோக்கியா மொபைல் போனில் yahoo,gtalk போன்றவற்றின் மூலமாக voice chat செய்யமுடியுமா?முடியும் எனில் எந்த மொபைல்?எந்த மாடல்?என்ன விலை?
    இந்த கேள்விக்கு உதவமுடியுமா?எனது மின்னஞ்சல் tvetsi@gmail.com

    ReplyDelete
  8. அருமையான பதிவு :-))

    ReplyDelete
  9. கண்ணு மீனு கண்ணா பொண்ணு கண்ணா ஒண்ணுமே புரியல
    அசத்தல் பதிவுகள்

    ReplyDelete
  10. பதிவு செய்து கொள்ளச் சொல்கிறதே! லைசன்ஸ் கோட் எண் கேட்கிறதே! இலவசமா? அல்லது விலைக்கு வாங்க வேண்டுமா? பதிவிடும்போதே அதையும் தெளிவுபடுத்தி விட்டால் நல்லது. தரவிறக்கிப் பயன்படுத்தும்போது ஏமாற்றம் இல்லாமல் இருக்கும்.

    ReplyDelete
  11. ரொம்ப அருமையான பதிவு.

    மீன் போட்டோ சூப்பர்

    ReplyDelete
  12. வழக்கம் போல பிரமாதம்தான் மாப்ள.
    வேற என்ன சொல்ல?

    ஆமா நம்ம யூர்கனுக்கு
    விஜய் பையன் மேல இன்னும் காண்டு தீரலையாம்.
    மாப்ஸ் அதான் சுறா ஊத்திகிச்சே அய்யா!

    ReplyDelete
  13. வேலன் அண்ணை, உங்களின் தளத்தில் படித்ததை வச்சுகொண்டு உங்களின் சீடப்பிள்ளை செய்த போட்டோஷாப் வேலை தேறுமா? என ஒருமுறை இந்த தளத்தில பார்த்து சொல்லுங்க.

    ReplyDelete
  14. அடடா தளமுகவரியை போட மறந்திட்டேன்.இது தான் அது. http://vasanthavasal.blogspot.com/2010/05/blog-post_03.html

    ReplyDelete
  15. DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
    வேலன் சார்,

    வழக்கம்போலவே அசத்தல்....

    பயனுள்ள பதிவு...

    பகிர்விற்கு நன்றி சார்.//

    வருகைக்கு நன்றி சிம்பு சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  16. மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு மிக்க நன்றி
    வேலன் சார்..//

    மணி சார்..எங்கே கொஞ்சநாட்களாக உங்களை பதிவின் பக்கம் பார்க்கஇயலவில்லை..தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  17. Chitra கூறியது...
    மீன் போன்ற கண்கள் (கயல் விழிகள்) இருந்தால் வேடிக்கையாகத்தான் இருக்குமோ?
    :-)//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. யூர்கன் க்ருகியர் கூறியது...
    //விஜய் ஒரு படத்தில் கேட்பார்..மீனுக்கு கால் இருக்கா என்று...//


    மீனுக்கு கால் இருக்கோ இல்லையோ .. மொதல்ல விஜய்க்கு மூளை இருக்கான்னு கேளுங்க!!!//

    ஏன் விஜய் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம்...?சுறா படம் பாருங்கள்.எல்லாம் சரியாகிவிடும்.வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  19. S Maharajan கூறியது...
    வேலன் சார்,

    வழக்கம்போலவே அசத்தல்....

    யனுள்ள பதிவு...//

    வருகைக்கும் ஒட்டுபோட்டமைக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  20. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,

    கலக்கலான பதிவு. வாழ்த்துகள் உங்கள் அருமையான தகவல்களுக்கு

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்//

    நன்றி சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த:துக்கும்...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்

    ReplyDelete
  21. venkatesan,siva கூறியது...
    இதுபோன்ற தொழில் ரகசியங்களை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பதிவிடுவது உண்மையாகவே பாராட்டவேண்டிய விஷயம்.எனக்கு ஒரு ஆலோசனை தேவை.
    GPRS வசதி உள்ள நோக்கியா மொபைல் போனில் yahoo,gtalk போன்றவற்றின் மூலமாக voice chat செய்யமுடியுமா?முடியும் எனில் எந்த மொபைல்?எந்த மாடல்?என்ன விலை?
    இந்த கேள்விக்கு உதவமுடியுமா?எனது மின்னஞ்சல் tvetsi@gmail.com//
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..நீங்கள் கேட்டவிவரங்களை மின் - அஞ்சலில் ்அனுப்பி வைக்கின்றேன்.வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  22. ஜெய்லானி கூறியது...
    அருமையான பதிவு :-))
    நன்றி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  23. karthik கூறியது...
    கண்ணு மீனு கண்ணா பொண்ணு கண்ணா ஒண்ணுமே புரியல
    அசத்தல் பதிவுகள்//

    நன்றி கார்த்திக்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  24. thiruthiru கூறியது...
    பதிவு செய்து கொள்ளச் சொல்கிறதே! லைசன்ஸ் கோட் எண் கேட்கிறதே! இலவசமா? அல்லது விலைக்கு வாங்க வேண்டுமா? பதிவிடும்போதே அதையும் தெளிவுபடுத்தி விட்டால் நல்லது. தரவிறக்கிப் பயன்படுத்தும்போது ஏமாற்றம் இல்லாமல் இருக்கும்.//
    சில சாப்ட்வேர்கள் அவ்வாறு எச்சரிக்கை செய்திவரும். ஆனால் முழுமையாக பயன்படுத்தலாம். சில சாப்ட்வேர்கள் நாட்கள் கணக்கிட்டு இலவசமாக அளிப்பார்கள்.உங்களுக்கு இது அவசியம் தேவைப்பட்டால் அவர்களின் முகவரியில் தொடர்புகொண்டு வாங்கிக்கொள்ளவும்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  25. Jaleela கூறியது...
    ரொம்ப அருமையான பதிவு.

    மீன் போட்டோ சூப்பர்//

    தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  26. கக்கு - மாணிக்கம் கூறியது...
    வழக்கம் போல பிரமாதம்தான் மாப்ள.
    வேற என்ன சொல்ல?

    ஆமா நம்ம யூர்கனுக்கு
    விஜய் பையன் மேல இன்னும் காண்டு தீரலையாம்.
    மாப்ஸ் அதான் சுறா ஊத்திகிச்சே அய்யா!
    தங்கள் வருகைக்கு நன்றி மாம்ஸ்.அவரை சுறா படத்துக்கு அழைத்துகொண்டு செல்லுங்கள்.எல்லாம் சரியாகிவிடும்.வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  27. PRAKASH கூறியது...
    வேலன் அண்ணை, உங்களின் தளத்தில் படித்ததை வச்சுகொண்டு உங்களின் சீடப்பிள்ளை செய்த போட்டோஷாப் வேலை தேறுமா? என ஒருமுறை இந்த தளத்தில பார்த்து சொல்லுங்க.//
    PRAKASH கூறியது...
    அடடா தளமுகவரியை போட மறந்திட்டேன்.இது தான் அது. http://vasanthavasal.blogspot.com/2010/05/blog-post_03.html//

    கலக்கிட்டீங்க போங்க...அருமையான விளக்க்ம் வேறு...மிகவும் நன்றாக இருக்கின்றது பிரகாஷ. அதே சமயம் என் பதிவை படித்து பார்த்து தங்கள் புகைப்படம் டிசைன் செய்துள்ளதாக கூறியது என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. தொடரந்து செய்யுங்கள்.வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete