Monday, June 7, 2010

வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி

சமையல் அறையில் அஞ்சறை பெட்டி என்று ஒன்று இருக்கும். அதில் கடுகு.சீரகம்,மிளகு,வெந்தயம்,மிளகா,உளுத்தம் பருப்பு,மஞ்சள் துர்ள் என எல்லாம் தனிதனி கிண்ணங்களி்ல் இருக்கும். தேவையானதை எடுத்து சமையலின் போது பயன்படுத்திக்கொள்ளுவார்கள். (என்னடா இவன்...திடீரென்று சமையல் குறிப்பு சொல்கின்றான் என எண்ணவேண்டாம்) சமையல் அறைக்கு அஞ்சறை பெட்டி எவ்வளவு முக்கியமோ அதைப்போல கம்யூட்டருக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்அளிக்கும்.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இது இலவச சாப்ட்வேர் ஆகும்.இதை கணிணியில நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்எந்தவீடியோவையும்வேண்டியபார்மெட்டுக்குஎளிதில்
மாற்றிகொள்ளலாம்.ஆடியோவையும்அதுபோலவேண்டிய
பார்மெட்டுக்குமாற்றிக்கொள்ளலாம். போட்டோக்களை ஒரு பார்மெட்டிலிருந்து வேண்டிய பார்மெட்டிற்கு மாற்றிக்
கொள்ளலாம். டிவிடியிலிருந்து வீடியோவாக மாற்றலாம்.
 ஆடியோ பைல்களைஎம்.பி.3 பாடல்களாக மாற்றிக்
கொள்ளலாம்.வீடியோ கட்டர், ஆடியோ கட்டர்,வீடியோ
 ஜாயினர்.ஆடியொ ஜாயினர், வீடியோஆடியோ மிக்ஸிங் 
என இதில் உள்ள பயன்கள் மிகமிக அதிகம்செல்போன்
 மாடலை தெரிவித்தால் அதற்கான வீடியோபதிவை
 இதில மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை
 பாருங்கள்.
Convert music CD to MP3,WMA,OGG,AAC.
Convert video DVD to MP4,3GP,AVI,WMV..
இதி்ல் வாட்டர் மார்க் செய்யும் வசதியும் உள்ளது.வீடியோவை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்ற Add File கிளிக் செய்து டிரைவில் உள்ள வீடியோவை கிளிக்செய்து சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யவும். 
இறுதியாக இதில் உள்ள Start கிளிக் செய்தால் Convert ஆகி நாம் சேமித்த இடத்தில் சேமிப்பாகும். அங்கிருந்து எடுத்து பயனபடுத்திக் கொள்ளலாம்.
பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லியுள்ளேன்.சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். நமது சக வாசக சகோதரர் பாலராஜன்கீதா அவர்கள் சொன்னது:- 


http://www.formatoz.com/
என்ற சுட்டியில் உள்ள formatfactory மென்பொருளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. இல்லை என்றால் இயன்றால் தரவிறக்கி, பயன்படுத்தி அதைப்பற்றி வாசகர்களுக்கு ஒரு இடுகையாக அளியுங்கள்.


இந்த சாப்ட்வேர் பற்றி சொன்ன சகோதரர் பாலராஜன்கீதா அவர்களுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

26 comments:

  1. பயனுள்ள குறிப்பு நண்பரே.

    ReplyDelete
  2. மிக பயனுள்ளதொரு இடுகை.. என்னை போன்ற எல்லோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.. மிக்க நன்றி வேலன் ஐயா.

    ReplyDelete
  3. அருமை வேலன் சார்,

    பயனுள்ள ஒரு மென்பொருள் எல்லோருக்குமே இது பயனுள்ளதாக இருக்கும்....

    நன்றி சார்...

    ReplyDelete
  4. ஐயோ மாப்ள. இவ்வளவு அருமையான இந்த சாப்ட் வேருக்கு
    \அட்சய பாத்திரம்\ இன்னு ல்ல பேரு வைக்கோனோம்?
    பிரமாதம். புதிவர்கள் தங்களை போற்று புகழ்ந்து தள்ளுவார்கள் பாருங்கள்.

    ReplyDelete
  5. எல்லோருக்குமேபயனுள்ள ஒரு மென்பொருள் நன்றி வேலன் சார்

    ReplyDelete
  6. நான் மூன்று வருடங்களாக இந்த மென்பொருளை format factory பயன்படுத்தி வாருகிறேன் ,,மிக அருமையான சாப்ட்வேர்,,ஆனால் இதற்கு சரிநிகரான அல்லது சற்று கூட குறைச்சல் உள்ள் இலவச மென்பொருள்
    ஒன்று உள்ளது பெயர் iWiSoft VC,,இரண்டுக்குமான comparisationம்
    நண்பர் தந்திருந்தார் அதையும் கீழெ
    கொடுதிருக்கிறேன்
    http://img695.imageshack.us/img695/8158/20091123222346.png
    iWiSoft Video Converter download
    செய்ய
    http://www.easy-video-converter.com/
    பயபடுத்தி பார்த்து பலனை சொல்லுங்கள்

    ReplyDelete
  7. ஹாய் நண்பா,

    ஒரு நல்ல பதிவும் நல்ல மென்பொருளும் கூட. நன்றி அழகாக தந்ததுக்கு.ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. நல்ல பயனுள்ள மென்பொருளை வழங்கிய உங்களின் சேவைக்கு மிக்க நன்றி வேலன் சார்.சகோதரி பாலராஜன்கீதாவிற்கும் எனது நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நல்ல பயனுள்ள பதிவு!! தங்களின் சேவைகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். வீடியோ டுடோரியல் செய்வதற்க்கான சிறந்த மென்பொருள் இருந்தால் அறிமுகபடுத்துங்களேன் பேருதவியாய் இருக்கும் அன்பரே!!

    ReplyDelete
  10. பதிவர் வேலன் அவர்களுக்கும், பயன்படுத்தும் வாசகர்களுக்கும் நன்றி.

    என் பெயருடன் இல்லத்தரசியின் பெயரைச் சேர்த்து பாலராஜன்கீதா என்ற பெயரில் இணையத்தைப் பயன்படுத்துகிறேன்.
    :-)

    ReplyDelete
  11. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
    பயனுள்ள குறிப்பு நண்பரே.//

    நன்றி முனைவர் இரா.குணசீலன் அவர்கள...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  12. முஹம்மது மபாஸ் கூறியது...
    மிக பயனுள்ளதொரு இடுகை.. என்னை போன்ற எல்லோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.. மிக்க நன்றி வேலன் ஐயா//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  13. DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
    அருமை வேலன் சார்,

    பயனுள்ள ஒரு மென்பொருள் எல்லோருக்குமே இது பயனுள்ளதாக இருக்கும்....

    நன்றி சார்...//

    நன்றி சிம்பு சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  14. கக்கு - மாணிக்கம் கூறியது...
    ஐயோ மாப்ள. இவ்வளவு அருமையான இந்த சாப்ட் வேருக்கு
    \அட்சய பாத்திரம்\ இன்னு ல்ல பேரு வைக்கோனோம்?
    பிரமாதம். புதிவர்கள் தங்களை போற்று புகழ்ந்து தள்ளுவார்கள் பாருங்கள்.//

    இதைப்போலவே இன்னும் சிறந்த சாப்ட்வேர் கிடைத்தால் அதற்கு என்ன பெயர் வைப்பது? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  15. mahaboob கூறியது...
    எல்லோருக்குமேபயனுள்ள ஒரு மென்பொருள் நன்றி வேலன் சார்//

    நன்றி மஹாபூப் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  16. moulefrite கூறியது...
    நான் மூன்று வருடங்களாக இந்த மென்பொருளை format factory பயன்படுத்தி வாருகிறேன் ,,மிக அருமையான சாப்ட்வேர்,,ஆனால் இதற்கு சரிநிகரான அல்லது சற்று கூட குறைச்சல் உள்ள் இலவச மென்பொருள்
    ஒன்று உள்ளது பெயர் iWiSoft VC,,இரண்டுக்குமான comparisationம்
    நண்பர் தந்திருந்தார் அதையும் கீழெ
    கொடுதிருக்கிறேன்
    http://img695.imageshack.us/img695/8158/20091123222346.png
    iWiSoft Video Converter download
    செய்ய
    http://www.easy-video-converter.com/
    பயபடுத்தி பார்த்து பலனை சொல்லுங்கள்//

    பதிவிறக்கம் செய்துவிட்டேன்.பயனபடுத்திபாரத்து சொல்கின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  17. சுமதி கூறியது...
    ஹாய் நண்பா,

    ஒரு நல்ல பதிவும் நல்ல மென்பொருளும் கூட. நன்றி அழகாக தந்ததுக்கு.ட்ரை பண்ணி பார்க்கிறேன்.//

    நண்பா...எங்கே சில நாட்களாக உங்களை பதிவில் காணவில்லை.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. Mrs.Menagasathia கூறியது...
    நன்றி சகோ!!//

    தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  19. மச்சவல்லவன் கூறியது...
    நல்ல பயனுள்ள மென்பொருளை வழங்கிய உங்களின் சேவைக்கு மிக்க நன்றி வேலன் சார்.சகோதரி பாலராஜன்கீதாவிற்கும் எனது நன்றி. வாழ்த்துகள்.//

    நன்றி மச்சவல்லவன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  20. ப்ரின்ஸ் கூறியது...
    நல்ல பயனுள்ள பதிவு!! தங்களின் சேவைகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். வீடியோ டுடோரியல் செய்வதற்க்கான சிறந்த மென்பொருள் இருந்தால் அறிமுகபடுத்துங்களேன் பேருதவியாய் இருக்கும் அன்பரே!!//
    வீடியோ டூடோரியல் சாப்ட்வேர் இருக்கின்றது நண்பரே..நேரமின்மையால் போட இயலவில்லை.விரைவில் பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  21. பாலராஜன்கீதா கூறியது...
    பதிவர் வேலன் அவர்களுக்கும், பயன்படுத்தும் வாசகர்களுக்கும் நன்றி.

    என் பெயருடன் இல்லத்தரசியின் பெயரைச் சேர்த்து பாலராஜன்கீதா என்ற பெயரில் இணையத்தைப் பயன்படுத்துகிறேன்.
    :-)//

    அட நீங்களும் என்னைப்போலவா...பெயரைப்பார்த்து குழப்பம் அடைந்துவிட்டேன்.தவறினை திருத்திவிட்டேன். தங்கள் வருகைக்கும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  22. வணக்கம் நண்பர்களே,
    என்னுடைய சிஸ்டத்தில் 2-வது ஹாட்டிஸ்க் பொருத்துவதற்க்கு ஜம்ப்பர் செட்டிங்கை எப்படி மாற்ற வேண்டும் என்பதை படத்துடன் விளக்கமாக சொல்லித்தாருங்கள் please . . .

    ReplyDelete
  23. ஹாய் நண்பா,
    ஆமாம் நான் கொஞ்சம் சோம்பேறி ஆயிட்டேன்பா. சில சமயம் கரண்ட் இருப்பதில்லை. அதான் லேட்டாக வருகிறேன்.

    ReplyDelete
  24. god is great கூறியது...
    வணக்கம் நண்பர்களே,
    என்னுடைய சிஸ்டத்தில் 2-வது ஹாட்டிஸ்க் பொருத்துவதற்க்கு ஜம்ப்பர் செட்டிங்கை எப்படி மாற்ற வேண்டும் என்பதை படத்துடன் விளக்கமாக சொல்லித்தாருங்கள் please . . .
    //

    உங்கள் கேள்வி கேள்வி -பதில ்பகுதிக்கு அனுப்பபடுகின்றது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  25. சுமதி கூறியது...
    ஹாய் நண்பா,
    ஆமாம் நான் கொஞ்சம் சோம்பேறி ஆயிட்டேன்பா. சில சமயம் கரண்ட் இருப்பதில்லை. அதான் லேட்டாக வருகிறேன்//

    அங்கேயும் கரண்ட் கட்டா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete