Tuesday, June 15, 2010

வேலன்:-கூகுள் குரோம் -புக்மார்க்கை சேமிக்க


 கூகுள் குரோம் ப்ரவுசர் உபயோகிக்கும் நண்பர்களே-ஒரு நிமிடம்..! நீங்கள் சில சமயங்களில் கம்யூட்டரில் ஓ.எஸ் மாற்றினாலும் சரி -கூகுள்குரோம்ப்ரவுசரை( ரீ-இன்ஸ்டால்)மாற்றினாலும் சரி-கூகுள் குரோமில் உள்ள புக்மார்க்குகள் அழிந்து போகும். அவவாறான சமயங்களில் நீங்கள் புக்மார்க்குகளை தனியே போல்டரிலசேமித்துமீண்டும்பழையபடிகொண்டுவந்துவிடலாம்.
அதைஎவ்வாறு கொண்டுவருவது என்று இன்று பாரக்கலாம். முதலில் ப்ரவுசரை திறந்து கொள்ளுங்கள்.வலது மூலையில் உள்ள ஸ்பேனர் போன்ற படத்தின் அருகில் உள்ள சிறிய முக்கோணத்தை கிளிக் செய்யுங்கள். அல்லது கீ - போர்டில் Ctrl+Shift+B என்று கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Bookmark Manager என்பதை தேர்வு செய்யுங்கள். 
கீழ்கண்ட விண்டோ வரும். 

அதில நீங்கள் சேமித்துள்ள புக்மார்க்குகள் அனைத்தும் தெரியும். அதில் உள்ள Organize என்பதின் எதிரில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யுங்கள்.வரும் விண்டோவில் Export BookMarks கிளிக் செய்து நீங்கள் புக்மார்க்கை சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து அதற்கு ஒரு பெயரையும் கொடுத்து சேமித்து்க்கொள்ளுங்கள்.அவ்வளவுதான் உங்கள் புக்மார்க்குகள் தனியே சேமித்துவைத்துவிட்டோம். இப்போது நீங்கள் ஒ.எஸ் மாற்றினாலும் சரி - ப்ரவுசரை மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் சரி..கவலையில்லை. சரி இப்போது மீண்டும் எப்படிஇதில புக்மார்க்குகளை கொண்டுவருவது...அது ஒன்றும் ப்ரச்சனையில்லை.முன்பு செய்தவாறே சென்று இப்போது 
ImportBookmarksஎன்பதைதேர்வுசெய்துநீங்கள்சேமித்துவைத்துள்ள
இடத்தில்இருந்துபுக்மார்க்கைகொண்டுவந்துவிடலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். 
கருத்தினை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்,
வேலன்.

11 comments:

  1. எளிமையான ஆனால் பயனுள்ள பதிவு .நன்றி.

    ReplyDelete
  2. ஓட்டு கருவிப்பட்டையினை ப்ளாக்கில் இணைப்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் வேலன்..என்னுடைய ஈமெயில் முகவரி nagul90@gmail.com...

    ReplyDelete
  3. பயனுள்ள கருத்து

    ReplyDelete
  4. முஹம்மது நியாஜ்June 15, 2010 at 7:04 PM

    அன்புமிகு வேலன் அவர்களுக்கு
    மிக பயனுள்ள தகவல் இது.
    நன்றிகள் என்றுடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete