Sunday, June 13, 2010

வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப.


தட்டச்சு செய்பவர்கள் அனைவரும் இந்த அனுபவத்தை பெற்றிருப்பார்கள். மெய்மறந்து தட்டச்சு செய்துவருவோம். அப்பொழுது திடீரேன்று Caps Lock கீ ஆன் ஆகி விடும். நாம் சிறிது தூரம் தட்டச்சு செய்து சென்றபின்னர்தான் பார்ப்போம். மீண்டும் அதை சரி செய்வோம். ஆனால் நாம் தட்டச்சு செய்யும் சமயம் தானே Caps Lock ஆவது நமக்கு தெரிவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த வசதியை நாம் நமது கம்யூட்டரில் செய்து கொள்ளலாம். நாம் Caps Lock,Number Lock.Scroll Lock செய்யும் சமயம் நமக்கு ஒரு சின்ன எச்சரிக்கை ஒலி கேட்கும. அதன்மூலம் நாம் உஷாராகலாம். இனி அதை நம்கம்யூட்டரில எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம். நீங்கள் Start- Control Panel - Accessibility Options தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் மூன்றாவது கட்டத்தில் உள்ள Toggle Keys என்பதில் Use Toggle Keys எதிரில் உள்ள ரேடியோ பட்டனை டிக் செய்து பின்னர் Apply- Ok செய்து வெளியேறுங்கள். இப்போது Caps Lock,Number Lock,Scrool Lock கீ களை அழுத்தும்போது உங்களுக்கு பீப் ஒலி கேட்பதை கவனிக்கலாம். அதன்மூலம் நாம் நமது தவறை திருத்திக்கொள்ளலாம்.பதிவினை பாருங்கள். கருத்தினை சொல்லுங்கள்.

 வாழ்க வளமுடன்,
வேலன்.  

14 comments:

  1. Velan Sir,

    Really you are Great.

    Good thing to new users.

    You can explain about visual warning also when accidently press the caps lock or num lock the time if the user dont have speaker they can feel the visual warning.

    Best wishes
    Muthu Kumar.N

    ReplyDelete
  2. நன்றி!!!!!!! நண்பரே!!!! நன்றி !

    ReplyDelete
  3. பயனுள்ள கருத்து

    ReplyDelete
  4. சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
    http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

    ReplyDelete
  5. கிருஷ்ணா (Krishna) கூறியது...
    அருமையான TIP//

    நன்றி கிருஷ்ணாசார்..தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  6. ஜெய்லானி கூறியது...
    :-)))//

    நன்றி ஜெய்லானி சார்..வாழ்கவளமுடன்,வேலன்.

    ReplyDelete
  7. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    Velan Sir,

    Really you are Great.

    Good thing to new users.

    You can explain about visual warning also when accidently press the caps lock or num lock the time if the user dont have speaker they can feel the visual warning.

    Best wishes
    Muthu Kumar.N//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி சார்...வாழ்கவளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.

    ReplyDelete
  8. hamaragana கூறியது...
    நன்றி!!!!!!! நண்பரே!!!! நன்றி !
    தாங்கள் எனது கருத்துரைக்கு முதன்முதலில் வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன. தங்கள் வருகைக்கு நன்றி அய்யா...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  9. manjoorraja கூறியது...
    பயனுள்ள கருத்து//

    நன்றி மஞ்சூர்ராஜா அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  10. Software Engineer கூறியது...
    சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
    http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!
    தங்கள் வலைதளம் வந்து கருத்தும் போட்டுவிட்டேன்ந்ண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  11. Useful information. Thanks a lot. Keep posting info like this. I greatly appreciate your effort.

    ReplyDelete
  12. விஸ்டா விரும்பிJune 14, 2010 at 10:31 PM

    windows vista-வில் எப்படி ஒலி எழுப்ப வைப்பது...? ஏனென்றால், Start- Control Panel -போய் Accessibility Options-ஐ தேடினால் காணவில்லையே பாஸ். என்ன செய்வது?

    ReplyDelete