Monday, July 5, 2010

வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற

இன்றைய பதிவில் நமது புகைப்படத்தை அசையும் படமாக நாமே மாற்றுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.முதலில் தேவையான படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் கண் இமைகளை மூடி திறப்பது போன்று மூன்று படங்களை தேர்வு செய்துள்ளேன்.
              
இப்போது நீங்கள் Adope Image Ready என்பதனை திறந்துகொள்ளுங்கள். போட்டோஷாப்புடன இணைந்துவரும் சாப்ட்வேர் இது.அதில் Window என்பதின் கீழ் உள்ள Animation கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழ்புறத்தில் ஒரு நீளமான பாக்ஸ் தோன்றும்.இப்போது நீங்கள் இந்த மூன்று கண்கள் புகைப்படத்தை  திறந்துகொள்ளுங்கள்.கண் image size எந்த அளவில் உள்ளதோ அதே image sizeஅளவில் புதிய விண்டோவையும் திறந்துகொள்ளுங்கள்.இப்போது உங்களுக்கு 4 விண்டோக்கள் கிடைக்கும். அதில் மூன்றில் கண் படங்களும் ஒன்றில் எந்த படமும் இல்லாமல் இருக்கும்.  கீழ்கண்ட விண்டோ வினை பாருங்கள். 
இப்போது கண் முற்றிலும் முடிஉள்ள படத்தை மூவ்டூல் மூலம் இழுத்து வந்து புதிய விண்டோவில் விடவும் இப்போது கீழே அனிமேஷன் பாக்ஸில் உங்களுக்கு கண்படம் தெரியும்.
இப்போது பழைய கண்விண்டோவை டெலிட் செய்துவிடுங்கள். இதைப்போலவே மூன்று கண்களையும் புதிய விண்டோவில் இழுத்துவந்து விட்டு பழைய விண்டோக்களை டெலிட் செய்துவிடுங்கள். கடைசியாக உங்களுக்கு ஒரே ஒரு விண்டோ தான் இருக்கும். இப்போது அந்த அனிமேஷன் பாரில் வலது மூலையில் உள்ள சிறிய முக்கோணத்தை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Make Frame from layers என்பதனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் முதலில் உள்ள வெள்ளை நிற பாக்ஸை டெலிட் செய்துவிட வேண்டும் அதற்குமுதலில் உள்ள வெள்ளை நிற பாக்ஸை தேர்வு செய்து கீழே உள்ள சிறிய குப்பை தொட்டி போன்ற படத்தை கிளிக் செய்யுங்கள். Deletes Selected Frames என்கின்ற மெசேஜ் வரும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
டெலிட் கொடுத்துவிடுங்கள். இப்போது உங்களுக்கு உங்களுடைய மூன்று கண் படங்கள் மட்டும் தெரியும்.
இப்போது முதல் படத்தின் கீழே பார்த்தீர்களே யானால் Sec போட்டு சிறிய் முக்கோணம் இருக்கும் அதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் ஒவ்வோரு படமும் எவ்வளவு வினாடிகள் தோன்றவேண்டும் என அளவு இருக்கும். நாம் வேண்டிய அளவினை கொடுத்து அதில் உள்ள பிளே பட்டனை அழுத்தி ப்ரிவியு பார்க்கலாம்.வினாடிகளில் வித்தியாசபடுத்த படம் அசையும் நேரம் மாற்றம் அடையும். இறுதியாக நீங்கள் செய்த படத்தை எதாவது ஒரு போல்டரில் Save Optimized செய்துவிடுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அவ்வளவுதாங்க. இப்போது நீங்கள் சேவ் செய்த இடத்தில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களுக்கு உங்கள் படம் அசையும் படமாக இருக்கும். இரண்டு வேவ்வேறு வினாடிகள் கண்சிமிட்டும் படததை நான் கீழே பதிவிட்டுள்ளேன். பாருங்கள்.
Photobucket
மற்றும் ஒரு படம் கீழே-
Photobucket
இரண்டும் ஒரே படம் தான் . கண்சிமிட்டும் நேரங்களில் தான் வித்தியசம் வரும்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.சினிமா படங்களில் இதனை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
விருதுக்கு நன்றி...
திரு.கக்கு மாணிக்கம் அவர்கள் பெஸ்ட் பிளாக்கர் விருதினை அளித்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி.
அவர் விருது வழங்கிய பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.

34 comments:

  1. முஹம்மது நியாஜ், கோலாலம்பூர்July 5, 2010 at 6:49 AM

    அன்பு மிகு வேலன்,
    நீண்ட நாட்களாக எதிர்பாத்த பாடம் இது, பதிவிற்க்கு மிக்க நன்றி,
    வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்கள்.. நன்றி...

    ReplyDelete
  3. அருமையான பயனுள்ள தகவல்....நன்றி

    ReplyDelete
  4. இமேஜ் ரெடியை இதுவரை பயன் படுத்தியதே இல்லை மாப்ஸ்.
    இதுபோன்ற வசதிகள் கூட அதில் இருபது இப்பொதுதான் தெரிகிறது.
    மிகவும் சுவாரசியமான பதிவு மாப்ஸ் :)

    ReplyDelete
  5. அருமையான பயனுள்ள தகவல்..!

    Awardukku vazhththukkal.

    ReplyDelete
  6. அருமையான பயனுள்ள தகவல்....நன்றி

    ReplyDelete
  7. அருமையாக இருக்கிறது,பகிர்ந்தமைக்கு நன்றி.

    அன்புடன் மஜீத்.

    ReplyDelete
  8. இமேஜ் ரெடி பலபேர் பார்பதே இல்லை. பதிவிட்டதுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  9. அருமையான தகவல்களுக்கும் தொடர்ந்து செய்து வரும் சேவைக்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete
  10. அழகான பதிவு நண்பரே..
    விருதுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. நண்பர் வேலன் அவர்களுக்கு,

    வணக்கம். விருதுக்கு வாழ்த்துக்கள். தகுதியானவருக்கு தகுதி உள்ளவர் கொடுத்த விருது பாராட்டத்தக்கது..

    இன்றைய பதிவு நல்ல பதிவு. பல நாட்களாக இந்த பிரிவில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. இவ்வாறு Animate செய்யும் போது Pictureகளின் Quality குறைந்து விடுகிறது. அந்த படங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தீர்வு கூறுங்கள். உங்கள் மின்னஞசல் முகவரியை தாருங்கள்.

    அன்புடன்
    தமிழார்வன்.

    ReplyDelete
  12. Best Blogger , வேலன் சாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  13. முஹம்மது நியாஜ், கோலாலம்பூர் கூறியது...
    அன்பு மிகு வேலன்,
    நீண்ட நாட்களாக எதிர்பாத்த பாடம் இது, பதிவிற்க்கு மிக்க நன்றி,
    வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்//

    நன்றி முஹம்மது சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  14. தோழி கூறியது...
    பயனுள்ள தகவல்கள்.. நன்றி.//

    வாங்க நண்பா...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. rk guru கூறியது...
    அருமையான பயனுள்ள தகவல்....நன்றி//

    நன்றி குரு சார்...வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. கக்கு - மாணிக்கம் கூறியது...
    இமேஜ் ரெடியை இதுவரை பயன் படுத்தியதே இல்லை மாப்ஸ்.
    இதுபோன்ற வசதிகள் கூட அதில் இருபது இப்பொதுதான் தெரிகிறது.
    மிகவும் சுவாரசியமான பதிவு மாப்ஸ் :)//

    நன்றி மாம்ஸ்..தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வாழ்கவளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  17. சே.குமார் கூறியது...
    அருமையான பயனுள்ள தகவல்..!

    Awardukku vazhththukkal.//

    நன்றி குமார் சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. Mahesh கூறியது...
    அருமையான பயனுள்ள தகவல்....நன்றி//

    நன்றி மகேஷ் சார்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  19. பெயரில்லா கூறியது...
    அருமையாக இருக்கிறது,பகிர்ந்தமைக்கு நன்றி.

    அன்புடன் மஜீத்//

    நன்றி மஜீத் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  20. ஜெய்லானி கூறியது...
    இமேஜ் ரெடி பலபேர் பார்பதே இல்லை. பதிவிட்டதுக்கு நன்றி பாஸ்//

    உண்மைதான் சார்...அதிகம் பேர் அதை அறிந்திருக்கவில்லை..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி“
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  21. மனோ சாமிநாதன் கூறியது...
    அருமையான தகவல்களுக்கும் தொடர்ந்து செய்து வரும் சேவைக்கும் மிக்க நன்றி!!ஃ//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  22. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
    அழகான பதிவு நண்பரே..
    விருதுக்கு வாழ்த்துக்கள்..//

    நன்றி குணசீலன் சார்...
    தங்கள் வருகைக்கும்-வாழ்த்துக்கும்- கருத்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  23. steepan கூறியது...
    super sir//

    நன்றி ஸ்டீபன் சார்..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  24. ஆ.ஞானசேகரன் கூறியது...
    goods....//

    நன்றி ஞானசேகரன் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  25. தமிழார்வன் கூறியது...
    நண்பர் வேலன் அவர்களுக்கு,

    வணக்கம். விருதுக்கு வாழ்த்துக்கள். தகுதியானவருக்கு தகுதி உள்ளவர் கொடுத்த விருது பாராட்டத்தக்கது..

    இன்றைய பதிவு நல்ல பதிவு. பல நாட்களாக இந்த பிரிவில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. இவ்வாறு Animate செய்யும் போது Pictureகளின் Quality குறைந்து விடுகிறது. அந்த படங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தீர்வு கூறுங்கள். உங்கள் மின்னஞசல் முகவரியை தாருங்கள்.

    அன்புடன்
    தமிழார்வன்//

    தங்கள் வருகைக்கும் கரு்ததுக்கும் நன்றி நண்பரே..தங்கள் இ-மெயில் முகவரி தாருங்கள். நான் பதில் அனுப்பி வைக்கின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  26. Chitra கூறியது...
    Best Blogger , வேலன் சாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்//

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  27. அருமையான பயனுள்ள தகவல் ..super
    thanks a lot

    ReplyDelete
  28. அருமையான பயனுள்ள தகவல்

    ReplyDelete
  29. அருமை!
    விருது பெற்ற உங்களுக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துகள்!
    தொடரட்டும் நண்பரே ..
    உங்கள் புகழ் மேலும் உயர
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  30. கருத்தும் வாழ்த்தும் வழங்கிய அனைவருக்கும் நன்றி..ஏற்கனவே நான் இந்த பதிவின் கருத்துக்கு நன்றி கூறிய பதிவு பிளாக்கில் ஏனோ வரவில்லை.இனிமேலும் வரலாம். எனவே வந்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  31. ஐயா இடுகை மிக அருமை...

    போட்டோ சாப்பில் ஒரே நேரத்தில் 3 ,4 லேயர்கள் இருக்கிறது. அதில் ஒரு லேயரை மட்டும் ஜூம் செய்வது எப்படி?

    ReplyDelete
  32. நண்பரே உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை. போஃட்டோஷாப் அல்லாது வேறு மென்பொருள்களில் இந்த மாதிரி போஃட்டோ சம்பந்தமான பதிவுகளை எழுதுங்களேன். கணிணியில் போஃட்டோஷாப் இல்லாதவர்களுக்கு பயன்படுமே!

    ReplyDelete