Thursday, July 8, 2010

வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர

அனிமேஷனை வீடியோவில் கொண்டுவருவது பற்றி இன்று பார்கக்லாம். அதற்குமுன் ராஜபார்வை படத்தில் கமலஹாசன் அவர்களின் இந்த வீடியோகிளிப்பி்ங்ஸ் பார்க்கவும்
அதைப்போலவே செய்யமுயற்சித்துள்ள படத்தை பாருங்கள்.
velan
இனி இதை எவ்வாறு செய்வது என்று பார்ககலாம். முதலில் உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.அதை பென்சில் டிராயிங்காக மாற்றிக்கொள்ளுங்கள்.(புகைப்படத்தை பென்சில் படமாக மாற்றுவது பற்றி நான் ஏற்கனவே இங்கு பதிவிட்டுள்ளேன்.) 
நீங்கள் பென்சில் படமாக மாற்றிய அந்த புகைப்படத்தையே 10க்கும் மேற்பட்ட டுப்ளிகேட் காப்பி எடுத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

 இப்போது முதல் புகைப்படத்தில் தலையை மட்டும் வைத்துக்கொண்டு மீதி இடங்களை ரப்பர் கொண்டு அழித்துவிடுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

 அடுத்த புகைப்டம் எடுத்துக்கொண்டு தலையும் கழுத்தும் மட்டும் வைத்துக்கொண்டு மீதி இடங்களை அழித்துவிடுங்கள.

 இதைப்போலவே படத்தில் உள்ள உருவங்களில் ஒவ்வொரு இடமாக அழித்துகொண்டு அதை முறையாக வரிசை எண் கொடுத்து சேமித்து வாருங்கள்.
கீழே உள்ள படங்களை பாருங்கள்.

அடுத்த படம்-
அடுத்த படம் கீழே-
அடுத்த படம் கீழே-
இதையே நீங்கள் உல்டாவாகவும் செய்யலாம். முதல் படத்தை எடுததுக்கொண்டு அதில் ஒவ்வோரு இடமாக அழித்துவிட்டு சேமித்து வரலாம்.
ரைட். இப்போது நீங்கள் சேமித்து வைத்துள்ள புகைப்படங்களை ஏற்கனவே நான் பதிவிட்டதை பார்த்து அனிமேஷனாக மாற்றிக்கொள்ளுங்கள்.சேரிலிருந்து நீங்கள் எழுந்திருப்பது போல வீடியோவை எடுத்துகொண்டு அதற்கு முன் இந்த அனிமேஷனை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உருவம் சிறிது சிறிதாக வந்து பின்னர் அதிலிருந்து நீங்கள் எழுந்து வருவதாக படம் அமையும். (முதலில் உள்ள கமலஹாசன் வீடியோவை பார்த்தால் உங்களுக்கு புரியும்).இதை முயற்சித்துப்பார்க்க சற்று பொறுமை அவசியம்.நீங்கள் உங்கள் படம் -குழந்தைகள் -படத்தை இதுபோல முயற்சிசெய்து அனிமேஷன் வீடியோவாக அனுப்பி வையுங்கள். பதிவில் வெளியிடுகின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.பதிவின் நிளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

11 comments:

  1. உங்க தகவல்கள் தமிழ் கம்ப்யூட்டர் என்ற இதழிலும் வருகிறது அல்லவா...வாழ்த்துகள்
    உங்க பதிவுகளை நான் கட்டாயம் பார்பதுண்டு.

    ReplyDelete
  2. நல்ல ஐடியா , இதுக்கு பொருமை தான் முக்கியம் பாஸ்..!!

    ReplyDelete
  3. மாப்ள வேலன் "பிரமாதமாக பதிவிடுகிறார் " என்று வழக்கமாக பின்னூட்டமிட எனக்கு சலிதுப்போயவிட்டது.
    "சிவாஜி பிரமாதமாக நடித்தார்" என்ற கதையாகிவிடும்.
    வேறு என்ன செய்யலாம் ? சொல்லுங்களேன் யாராவது?

    பிரமாதம் மாப்ள.
    இப்போதைக்கு வேறு வழி இல்லை.

    ReplyDelete
  4. முஹம்மது நியாஜ்July 8, 2010 at 9:13 PM

    காலத்திற்கேற்ற சிறந்த பதிப்பு
    வாழக உங்களது பணி
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  5. rk guru கூறியது...
    உங்க தகவல்கள் தமிழ் கம்ப்யூட்டர் என்ற இதழிலும் வருகிறது அல்லவா...வாழ்த்துகள்
    உங்க பதிவுகளை நான் கட்டாயம் பார்பதுண்டு//

    ஆம்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. ஜெய்லானி கூறியது...
    நல்ல ஐடியா , இதுக்கு பொருமை தான் முக்கியம் பாஸ்..!!//

    ஆம் ஜெய்லானி சார்..பொறுமைதான் இதில் முக்கியம்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மாப்ள வேலன் "பிரமாதமாக பதிவிடுகிறார் " என்று வழக்கமாக பின்னூட்டமிட எனக்கு சலிதுப்போயவிட்டது.
    "சிவாஜி பிரமாதமாக நடித்தார்" என்ற கதையாகிவிடும்.
    வேறு என்ன செய்யலாம் ? சொல்லுங்களேன் யாராவது?

    பிரமாதம் மாப்ள.
    இப்போதைக்கு வேறு வழி இல்லை.//

    நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. சசிகுமார் கூறியது...
    good post//

    நன்றி சசிகுமார் சார்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வாழக் வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. Mrs.Menagasathia கூறியது...
    super post!//

    நன்றி சகோதரி..
    தங்கள் வருகைக்கும் கருததுககும் நன்றி
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. முஹம்மது நியாஜ் கூறியது...
    காலத்திற்கேற்ற சிறந்த பதிப்பு
    வாழக உங்களது பணி
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்.//

    நன்றி முஹம்மது நியாஜ் சார்..
    தங்கள் வருகைக்கும கருதது்க்கும் நன்றி
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete