Friday, July 30, 2010

வேலன்-ஆன்லைனில் போன்பில் சுலபமாக கட்ட

இன்றும் பலர் தங்களது BSNL தொலைபேசி கட்டணங்களை போஸ்ட் ஆபிஸிலோ - தொலைபேசி நிலையங்களிலோ கட்டி வருகின்றனர். இப்போது நமது வீட்டில் இருந்தபடியே தொலைபேசி கட்டணங்களை சுலபமாக கட்டலாம்.அதற்கான வழிமுறைகளை இன்று காணலாம.இந்த கடிதம் BSNL வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வந்திருக்கும்.


Dear Customer,
      BSNL Chennai Telephones offers Rs 5/- discount from the bill amount to those who opt for stoppage of hard copy of bill by post.
Soft copy of the bill in PDF format will continue be sent without any extra charges to all registered customers as at present.
 1% discount will also continue to be allowed for making online payment.
 This is only an Eco-Friendly measure to avoid paper bills.
 Those who are specific in opting for stoppage of hard copy and thereby wish to avail Rs5/- discount in the next bill   can login to http://billchn.bsnl.co.in website and click the  option Stop Hard Copy of Bill by Post.
                                                                                                  Assuring you of our best services always,


இதில் இரண்டுவகை லாபங்கள் நமக்கு உள்ளது.பில்லை அவர்கள் இ-மெயில் மூலம் அனுப்பினால் ரூ.5.00 குறைவு. மேலும் நாம் ஆன்-லைனில் கட்டணம் கட்டினால் நமது பில்-தொகையில் 1% நமக்கு குறையும். குறையும் தொகை அடுத்த பில்லில் கழித்து வரும்.1000 ரூபாய் உங்கள் பில்தொகை யாக இருக்கையில் உங்களுக்கு ரூபாய் 10 உடன் ரூ5 சேர்த்து ரூ15 மீதம் ஆகும். மாதத்திற்கு பதினைந்து என்றால் வருடத்திற்கு ரூபாய் 180 கண்ணுக்கு தெரியாமல் நமது சேமிப்பாக மாறும். சரி ஆன்-லைனில் பில் எப்படி கட்டுவது?
நீங்கள் http://billchn.bsnl.co.in தளம் கிளிக் செய்யவும.வரும் விண்டாவில் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேரட் கொடுத்து உள்ளே நுழையவும்.  உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் Landline Bill Online Payment என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு உங்களுடைய பில்தொகையுடன் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேலே உள்ள I wish to pay online என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
I accept என்பதனை கிளிக் செய்யுங்கள்.உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களிடம் உள்ள கார்ட் வகையை தேர்வு செய்யவும். பின் Submit தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உங்களிடம் உள்ள கார்ட்டுக்குரிய வங்கியை கிளிக் செய்து சப்மீட்தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கார்டில் உள்ள பெயர் -எண் - விவரங்களை இதில் தட்டச்சு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதிலும் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேரட் கொடுத்து சப்மிட் செய்யவும்.சில வினாடிகள் காத்திருப்பிற்கு பின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
அதே நேரம் உங்கள் இ-மெயிலுக்கு இரண்டு மெயில்கள் வந்திருக்கும்.ஒன்று வங்கியிலிருந்தும் மற்றொன்று பிஎஸ்என்எல் லிலிருந்தும் வந்திருப்பதை காணலாம்.இனி நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்தே வேலையை முடிக்கலாம் அல்லவா?
நமது இணைய நண்பர்கள் பலர் வேலைக்காக பல நாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் சொந்த பந்தங்களுடன் பேச -பெரும்பாலும் பிஎஸ்என்எல் இணைப்பையே வைத்துள்ளனர்.சொந்த பந்தங்களுக்கு சிரமம் வைக்காமல் வெளிநாட்டிலிருந்தபடியே நமது உறவினர் பில் தொகையை சுலபமாக கட்டவே இதை பதிவிட்டுள்ளேன்.நானும் இதன் மூலமே கட்டணங்களை செலுத்தி வருகின்றேன்.மிக எளிமையாகவும் சுலபமாகவும் உள்ளது. அப்ப நீங்க.....

வாழ்க வளமுடன்,
வேலன்


27 comments:

  1. நன்றி வேலன்.என்னிடம் கிரடிட் கார்ட் இல்லை. நான் இதனை இன்டெர்நெட் பேங்க் மூலம் கட்டி வருகிறேன்.

    மா.மணி

    ReplyDelete
  2. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. நானும் கடந்த ஒரு வருடமாக இந்த வசதியைப் பயன்படுத்தி வருகிறேன்.
    மேலும் LIC இணையதளத்திலும் இதுபோல் நம் விபரங்களையும் நாம் எடுத்திருக்கும் பாலிசிகள் பற்றிய விபரங்களையும் பதிவுசெய்து கொண்டால் ஆன்லைன் பேங்கிங் மூலம் பாலிசிக்குண்டான பிரிமியத்தொகை செலுத்தலாம். நமது ரசீது PDF வடிவில் உடனடியாக அச்செடுத்துக்கொள்ளலாம். மேலும் நமது பாலிசிகள் எவ்வளவு போனஸ் தொகை உள்ளது, பாலிசிகளின்மீது கடன் வாங்கினால் எவ்வளவு தொகை கிடைக்கும், பிரிமியம் கட்டத்தாமதமாகி இருந்தால் அதற்கான வட்டித்தொகை போன்ற விபரங்களும் அறியலாம்.இதில் கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் வசதி மட்டும் இல்லை.

    http://www.tnebnet.org/newlt/menu2.html என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பக்கத்தின் மூலம் நமது இணைப்புக்களின் பில் விபரங்கள் செலுத்திய தேதி,தற்போதைய பில் விபரங்கள் அறியலாம்.
    அவர்களுடைய http://www.tnebnet.org/awp/tneb/
    இணைப்பில் சென்னை மற்றும் கோவை மண்டலங்களைச் சேர்ந்த பயனாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

    ReplyDelete
  3. உள்ளேன் அய்யா..... "கடை" பக்கம் ஆளையே காணோமே! :-(

    ReplyDelete
  4. நானும் LIC க்கு இது போலதான் செய்கிரேன் . ஈஸியா இருக்கு. ஒட்டு மொத்த ஸ்டேட்மெண்டும் பிரிண்டும் கிடைக்குது.

    ReplyDelete
  5. THIS FACILITY AVAILABLE ONLY FOR CHENNAI USERS. OTHER CITY USERS CAN NOT USE THIS FACILITY.

    IF THEY WANTS TO USE THIS visit www.bsnl.co.in

    Enroll your telephone number with consumer ID and use

    ReplyDelete
  6. i'm using this already velan. anyway thanks.

    ReplyDelete
  7. வழக்கம்போலவே பயனுள்ள தகவலை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் வேலன் சார்...

    நன்றி சார்.........

    ReplyDelete
  8. வழக்கம்போலவே பயனுள்ள தகவலை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் வேலன் சார்...

    ReplyDelete
  9. நன்றி வேலன்

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  10. அசத்திவிட்டீர்கள் வேலன் சார்...

    ReplyDelete
  11. Manickam கூறியது...
    நன்றி வேலன்.என்னிடம் கிரடிட் கார்ட் இல்லை. நான் இதனை இன்டெர்நெட் பேங்க் மூலம் கட்டி வருகிறேன்.

    மா.மணி//

    நன்றி மாணிக்கம் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. பிரகாசம் கூறியது...
    தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. நானும் கடந்த ஒரு வருடமாக இந்த வசதியைப் பயன்படுத்தி வருகிறேன்.
    மேலும் LIC இணையதளத்திலும் இதுபோல் நம் விபரங்களையும் நாம் எடுத்திருக்கும் பாலிசிகள் பற்றிய விபரங்களையும் பதிவுசெய்து கொண்டால் ஆன்லைன் பேங்கிங் மூலம் பாலிசிக்குண்டான பிரிமியத்தொகை செலுத்தலாம். நமது ரசீது PDF வடிவில் உடனடியாக அச்செடுத்துக்கொள்ளலாம். மேலும் நமது பாலிசிகள் எவ்வளவு போனஸ் தொகை உள்ளது, பாலிசிகளின்மீது கடன் வாங்கினால் எவ்வளவு தொகை கிடைக்கும், பிரிமியம் கட்டத்தாமதமாகி இருந்தால் அதற்கான வட்டித்தொகை போன்ற விபரங்களும் அறியலாம்.இதில் கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் வசதி மட்டும் இல்லை.

    http://www.tnebnet.org/newlt/menu2.html என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பக்கத்தின் மூலம் நமது இணைப்புக்களின் பில் விபரங்கள் செலுத்திய தேதி,தற்போதைய பில் விபரங்கள் அறியலாம்.
    அவர்களுடைய http://www.tnebnet.org/awp/tneb/
    இணைப்பில் சென்னை மற்றும் கோவை மண்டலங்களைச் சேர்ந்த பயனாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.//

    நீண்ட தகவலுக்கு நன்றி நண்பரே...மின்சார கட்டணம் பொருத்தவரையில் IOB,IB,ICICI போன்ற வங்கிகள் தான் கணக்கு வைத்துள்ளன.SBI,CB போன்ற வங்கிகள் இல்லை..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. Chitra கூறியது...
    உள்ளேன் அய்யா..... "கடை" பக்கம் ஆளையே காணோமே! :-(//

    கடந்த முறை வந்தபோது கடை சாத்தியிருந்தது.அதனால் இன்னும் திறக்கவில்லை என்று வரவில்லை.அவசியம் வருகின்றேன்.தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. ஜெய்லானி கூறியது...
    நானும் LIC க்கு இது போலதான் செய்கிரேன் . ஈஸியா இருக்கு. ஒட்டு மொத்த ஸ்டேட்மெண்டும் பிரிண்டும் கிடைக்குது.//

    நன்றி ஜெய்லானி சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. vasathi கூறியது...
    THIS FACILITY AVAILABLE ONLY FOR CHENNAI USERS. OTHER CITY USERS CAN NOT USE THIS FACILITY.

    IF THEY WANTS TO USE THIS visit www.bsnl.co.in

    Enroll your telephone number with consumer ID and use//

    வருகைக்கும் கருததுக்கும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. Jey கூறியது...
    i'm using this already velan. anyway thanks.//

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. Kousalya கூறியது...
    very useful information. thank u//

    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  18. R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
    வழக்கம்போலவே பயனுள்ள தகவலை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் வேலன் சார்...

    நன்றி சார்.........//

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  19. சே.குமார் கூறியது...
    வழக்கம்போலவே பயனுள்ள தகவலை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் வேலன் சார்..//

    நன்றி குமார் சார்..தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  20. ♠புதுவை சிவா♠ கூறியது...
    நன்றி வேலன்

    வாழ்க வளமுடன்.//

    நன்றி சிவா சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. அன்புடன் அருணா கூறியது...
    பூங்கொத்து//

    பூங்கொத்து வழங்கியமைக்கு நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  22. jabeer கூறியது...
    அசத்திவிட்டீர்கள் வேலன் சார்..//

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  23. அன்பின் வேலன்

    பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள் வேலன்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  24. cheena (சீனா) கூறியது...
    அன்பின் வேலன்

    பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள் வேலன்
    நட்புடன் சீனா//

    நன்றி சீனா சார். தங்கள் வருகைக்ககும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  25. good information in tamil regarding the tneb online payment system i can say.

    ReplyDelete