Thursday, August 5, 2010

வேலன்-அண்ணா பல்கலைகழகத்தின் அகராதி

உலகத்தமிழ் செம்மொழியையொட்டி அண்ணாபல்கலைகழகம் அகராதியை வெளியிட்டுள்ளார்கள்.ஆங்கில சொற்களுக்கு உண்டான தமிழ்சொற்கள் சுமாராக நமக்கு தெரியும்.தமிழிலேயே அதற்குண்டான துாய தமிழ்சொல் நமக்கு தெரியாது.இந்த இணையதளத்தில் அவர்கள்அருமையாக  வெளியிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாது அந்த சொல்லின் ஆங்கில உச்சரிப்பு - அந்த சொல்வரும் குறள், பாடல்கள்.அந்த சொற்கள் சம்பந்தமான பிற சொற்கள் என வெளியிட்டு அசத்திவிட்டார்கள்.அவர்களின் இணையதளம் காண இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
இதில் வேண்டிய வார்த்தைகளை தட்டச்சு செய்யவும். ஆங்கிலம் - தமிழ் என இரண்டு மொழித்தேர்வுகள் உள்ளது.இதன் ஒவ்வொரு பயன்பாடும் கீழே விளக்கப்பட்டுள்ளது.

 இதன் பக்கத்தில் உள்ள கீ-போர்ட் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வேண்டிய வார்த்தையை கீ-போர்ட் மூலம் தட்டச்சு செய்து தேடலாம். நான் Gold(பொன் -தங்கம்)என்கின்ற வார்த்தையை தட்டச்சு செய்துள்ளேன்.வந்த விடை கீழே-
 நமது சொல்லின் தொடர்புடைய சொற்கள் முதற்கொண்டு அந்த சொல்வரும் பாடல்கள்.திருக்குறள்,படங்கள்.என 10 க்கும் மேற்பட்ட வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள வசதிகளை பாருங்கள்.
இதில் பொன் என்கின்ற வார்த்தைக்கு வரும் திருக்குறள் கீழே-
2 லட்சத்திற்கும் மேற்பட்ட சொற்களை இணைத்துள்ளார்கள்.நாமும் புதிய சொற்களையும் நமது கருத்துக்களையும் அவர்களுக்கு அனுப்பிவைக்கலாம். அதற்கான வசதியை இணைத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
எவ்வளவு நாளா ஆசை வைத்திருந்தாருனு தெரியலை....(இரண்டுவிதமா எடுத்துக்கலாம்)
1.சுட சுட முஞசிமேலேயே ஊத்தனும்.
2.அன்பா பாலாபிஷெகம் பண்ணிப்பார்க்கனும்.
Photobucket

16 comments:

  1. Awesome Jolly Video..... Super!

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார்! என்னைப் போன்ற மொழி பெயர்ப்பாளர்களுக்கு இது மிகவும் உதவும்!
    ஆனால் தமிழ் இணையப் பல்கலைகழகம் இது போல் பல்வேறு துறைகளுக்கான கலைச்சொல் அகராதிகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு மிக்க நன்றிங்க... என் வலைதளத்திலும் இதன் சுட்டியை கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன்..

    மிக்க நன்றிங்க வேலன்

    ReplyDelete
  4. ரொம்ப அவசியமானது மாப்ஸ். சமயங்களில் சரியான தமிழ் - ஆங்கில வார்த்தைகள் கிடைக்காமல்
    அல்லாடுவது தெரியும்தானே. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. Chitra கூறியது...
    Awesome Jolly Video..... Super!

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. எஸ்.கே கூறியது...
    மிக்க நன்றி சார்! என்னைப் போன்ற மொழி பெயர்ப்பாளர்களுக்கு இது மிகவும் உதவும்!
    ஆனால் தமிழ் இணையப் பல்கலைகழகம் இது போல் பல்வேறு துறைகளுக்கான கலைச்சொல் அகராதிகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.ஃ

    நன்றி எஸ்.கே. சார்...தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. Mrs.Menagasathia கூறியது...
    jolly photo super!!//

    தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. ஆ.ஞானசேகரன் கூறியது...
    பகிர்வுக்கு மிக்க நன்றிங்க... என் வலைதளத்திலும் இதன் சுட்டியை கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன்..

    மிக்க நன்றிங்க வேலன்ஃஃ

    நன்றி ஞர்னசேகரன் சார்..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. கக்கு - மாணிக்கம் கூறியது...
    ரொம்ப அவசியமானது மாப்ஸ். சமயங்களில் சரியான தமிழ் - ஆங்கில வார்த்தைகள் கிடைக்காமல்
    அல்லாடுவது தெரியும்தானே. நன்றி பகிர்வுக்கு//

    தமிழிலேயே சில சொற்களுக்கு சரியான தமிழ்சொல்லும் - எழுத்துக்களும் கிடைக்காமல் அவதிப்பட்டதுண்டு. தங்கள் வருகைக்கும கருததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. அருமையான தகவல்!நன்றி!!

    ReplyDelete
  11. சேலம் தேவா கூறியது...
    அருமையான தகவல்!நன்றி!!//

    நன்றி தேவா..பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. வேலன்

    தொடர்ந்து நல்ல தகவல்களை வழங்கிவருகிறீர்கள். வாழ்த்துக்கள்!

    கூடவே ஒரு வேண்டுகோளூம் உண்டு. அண்ணா பல்கலை கழகத்தின் அகராதி குறித்த பதிவை பலருக்கு அறிமுகப்படுத்தும் அதே நேரம், அதிலுள்ள தமிழ் சொற்களையும் நீங்கள் உங்கள் பதிவுகளில் பயன்படுத்துவதே நல்லது. அது மற்றோருக்கும் ஒரு வழி காட்டியாக இருக்கும். தமிழ் மொழி சொற்களை உங்கள் வலைத்தளம் வருவோர் கற்கவும் வழிவகுக்கும்.

    செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    நன்றி

    அன்புடன்
    அன்பன்

    ReplyDelete
  13. அந்தப் பக்கத்தை புக் மார்க் செய்து கொண்டேன்.. நன்றி நண்பரே..

    ReplyDelete
  14. நல்ல விமர்சனம் வேலன்.
    ஆனால்அண்ணா பல்கழைக்களகத்தின் சொந்த முயற்ச்சியாக இருந்தால் பாராட்ட படக்கூடியது.
    இது ஏற்கனவே 2009 ஆண்டு ஆரம்பிக்க பட்ட "புதிய அகராதி" இனை காப்பி அடித்து உருவக்க பட்டது.

    http://www.agaraathi.com

    ஒரு எழுத்தை மட்டும் மாற்றி போட்டிக்கு ஒரு அகரதியை தொடங்கும் அளவிற்க்கு அண்ணா பல்கழைக்களகத்தினருக்கு ஏன் இந்த கொலை வெறி.

    இவர்களை வைத்து தமிழில் ஒரு பேஸ் புக் திரைப்படம் தயாரிக்கலாம் போல‌

    http://www.youtube.com/watch?v=ZHkYEC-UfTo

    ReplyDelete
  15. எப்படி இது போன்று போட்டோவை உருவாகுவது?

    ReplyDelete