Friday, August 13, 2010

வேலன்-வங்கி -வட்டி-மாத தவணை சுலபமாக கணக்கிட

”கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்”என பிரபலமான வாக்கியம் உண்டு.கடன் வாங்காதவர் யார் இருப்போம். எந்தவகை கடன் ஆனாலும் நாம் முதலில் நாடுவது வங்கி களையே...நமக்கு தேவைபடும் பணத்தை சொன்னால் ஏதோ கணக்கிட்டு மாதம் நீ இவ்வளவு கட்டு என்று சொல்வார்கள். அல்லது நாம் கட்டும்தொகையை சொன்னால் அதற்கு ஏற்ப இவ்வளவு மாதங்கள் நீங்கள் பணம் கட்டவேண்டும் என்று சொல்வார்கள். அவர்கள் கணக்கை எவ்வாறு போடுகின்றார்கள். அந்த கணக்கை நாம் தெரிந்துகொள்ளலாமா? அதற்கான சாப்ட்வேர்தான் இது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் நான்கு பிரிவாக விண்டோவினை பிரித்திருப்பார்கள். முதல் பிரிவில் நாம் வாங்கும் தொகை - வட்டி - கட்டும் தவணைகள் - வங்கி கட்டணம் முதலியவைகளை நாம் நிரப்ப வேண்டும். இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் சுலபமாக தொகைகளை நாம் நிரப்பிக்கொள்ளலாம். நான் ரூபாய் 5 லட்சம்(5,00,000) கடன் தொகை குறித்துள்ளேன். அதற்கு வட்டியாக
   9.5 %  சதவீதமும் வங்கி கட்டணமாக 2% வீதமும் திருப்பிசெலுத்தும் காலம் 10 வருடங்களாகவும் குறித்துள்ளேன். முன்னரே செலுத்தும் தொகையை கணக்கிடுவதற்கும்  இதில வசதி உள்ளது.
எனக்கு மாததவணையாக ரூ6.470-வந்துள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஒவ்வோரு மாதமும் நாம் கட்டும் தொகை அதில் அசல் எவ்வளவு - வட்டி எவ்வளவு- மீதமுள்ள தொகை எவ்வளவு என இதில் சுலபமாக தெரிந்துகொள்ளலாம்.
வருடாந்திர தொகையையும் நாம் இதில் தெரிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கடனுக்காக வங்கியை அணுகுவதற்கு முன்னர் இந்த அட்டவணைமூலம் நாம் சுலபமாக வட்டியையும் திருப்பி செலுத்தும் தொகையையும் கணக்கிட்டுபின்னர் வங்கிசென்றால் அவர்களிடம் பேசுவதற்கு வசதியாக இருக்கும். வங்கியிலும் சரி -இவ்ர் விஷயம் தெரிந்த ஆள் போலும் என சற்று கவனமாக நம்மை கவணிப்பார்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
.

20 comments:

  1. very very useful thankyou thankyou thankyou

    ReplyDelete
  2. Thanks lot...
    KALIMUTHU.V

    ReplyDelete
  3. அன்பின் வேலன்

    தகவலுக்கு நன்றி - பயனுள்ள தகவல்

    நல்வாழ்த்துகள் வேலன்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. என்ன மாப்ள? .....ஏதாவது கந்துவட்டி கம்பெனி இல்லன்னா பேங்க் ஆரம்பிக்க போறீங்களா?

    ReplyDelete
  5. தொடர்ந்து பல பயனுள்ள தகவல்கள் தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சார்.

    ReplyDelete
  6. மிக மிக அவசியமான பயனுள்ள தகவல்! நன்றி!

    ReplyDelete
  7. திரு வேலன்,
    இது மிகவும் பயனுள்ள பதிவு.ஆனால் சுட்டியைப் பயன்படுத்தி தரவிரக்கம் செய்யும்போது மென்பொருள் முழுமையாக கிடைக்கவில்லையே! ஏதும் ஆலோசனையுண்டா?

    ReplyDelete
  8. நல்ல பயனுள்ள பதிவு
    எப்படி உங்களால மட்டும் இப்படி கண்டுபிடிக்க முடியுது

    ReplyDelete
  9. இது மைக்ரோசாப்டின் Excel-லும் ஒரு sheet(உதா-Sheet1) ல் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் சென்றால் கிடைக்கும் விண்டோவில் spread sheet solution னை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றால் loan amortization னை கிளிக்கினால் கிடைக்கும்

    ReplyDelete
  10. manohar கூறியது...
    very very useful thankyou thankyou thankyou//

    நன்றி மனோகர் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. பெயரில்லா கூறியது...
    Thanks lot...
    KALIMUTHU.V//

    நன்றி காளிமுத்து சார்..தங்கள் வருகைக்கும் கருத்துகு்ககும் நன்றி..வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. cheena (சீனா) கூறியது...
    அன்பின் வேலன்

    தகவலுக்கு நன்றி - பயனுள்ள தகவல்

    நல்வாழ்த்துகள் வேலன்

    நட்புடன் சீனா//

    நன்றி சீனா சார்..
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. கக்கு - மாணிக்கம் கூறியது...
    என்ன மாப்ள? .....ஏதாவது கந்துவட்டி கம்பெனி இல்லன்னா பேங்க் ஆரம்பிக்க போறீங்களா?//

    நீங்க பைனான்ஸ் செய்வதாக இருந்தால் இரண்டுமே ஒ.கே...தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  14. Thomas Ruban கூறியது...
    தொடர்ந்து பல பயனுள்ள தகவல்கள் தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சார்.
    //

    நன்றி தாமஸ் ரூபன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்தது்க்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. எஸ்.கே கூறியது...
    மிக மிக அவசியமான பயனுள்ள தகவல்! நன்றி!ஃஃ

    நன்றி எஸ.கே. அவர்களே...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. பெயரில்லா கூறியது...
    திரு வேலன்,
    இது மிகவும் பயனுள்ள பதிவு.ஆனால் சுட்டியைப் பயன்படுத்தி தரவிரக்கம் செய்யும்போது மென்பொருள் முழுமையாக கிடைக்கவில்லையே! ஏதும் ஆலோசனையுண்டா?//

    தங்களைப்ற்றி விவரம் கிடைக்கவில்லை..இந்த சாப்ட்வேரை இதுவரை 161 பேர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.நீங்கள் வேறு ஒரு கம்யுட்டரில் பதிவிறக்கம் செய்துபாருங்கள்.அல்லது இன்டர்நெட் மையத்தில்பதிவிறக்கம் செய்துபாருங்கள். சரியாக வரும்.அல்லது உங்கள் மெயில் முகவரி தாருங்கள். மெயிலில் அனுப்பி வைக்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே்
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  17. Theepan கூறியது...
    நல்ல பயனுள்ள பதிவு
    எப்படி உங்களால மட்டும் இப்படி கண்டுபிடிக்க முடியுதுஃ


    தீபன் சார்..உங்களைவிடவா..நீங்களும்தான் புதிய தகவல்களை பதிவிடுகின்றீர்கள்.தங்கள்வருகைக்கும் கருத்து்க்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  18. Siva கூறியது...
    இது மைக்ரோசாப்டின் Excel-லும் ஒரு sheet(உதா-Sheet1) ல் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் சென்றால் கிடைக்கும் விண்டோவில் spread sheet solution னை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றால் loan amortization னை கிளிக்கினால் கிடைக்கும்//

    அதைவிட இதுசுலபமாக இருக்குஅல்லவா? அதனால்தான் பதிவிட்டுள்ளேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  19. நல்ல பதிவு , மிக்க நன்றி . எனக்கு போட்டோஷாப்பில் ஒரு உதவி தேவை படுகிறது.தயவு செய்து உங்கள் மெயில் ஐ.டி கிடைக்குமா ? அல்லது செல்போன் நம்பர்?

    ReplyDelete