Wednesday, August 18, 2010

வேலன்-டெக்ஸ்கால்குலேட்டர்-Deskcalculator


பாக்கெட் கால்குலேட்டர்,டேபிள் கால்குலேட்டர்,சயின்டிபிக் கால்குலேட்டர் என கால்குலேட்டர்கள் கேள்விப்பட்டிருப்போம்.கம்யுட்டரில் உபயோகிக்கும் Deskcalculator பற்றி இன்று பார்க்கலாம்.இதுதான் ஏற்கனவே நமது கம்யுட்டரில் இருக்கின்றதே என நீங்கள் கேட்கலாம். ஆனால் நிறைய வசதிகளுடன் உள்ள 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை நீங்கள் இங்கு கிளிக் செய்து பயன்படுத்திப்பார்க்கும் சமயம் தான இதன் வசதிகளை பார்த்து ஆச்சரியப்பட்டுபோவீர்கள்.நீங்கள் ப்திவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் File. Edit. Converter Options என நான்கு டேப்கள் உள்ளன. கணக்கு புத்தகத்தில் Vertical.Horizontal.None என எதுவேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.Converter -ல் நீங்கள் விரும்பும் வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Help நீங்கள் கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ வரும். அதில் தேவையான மாற்றங்களை - வசதிகளை நீங்கள் செய்துகொ்ள்ளலாம். 
இதில வட்டி கணக்கீடு செய்வதும் Interest Calculation இணைக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விண்டோவினை பாருங்க்ள.
வியாபாரிகளுக்கும் இதில் வசதி இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கும் பொருளின் வாங்கும் விலை - விற்கும் விலை - லாபம் இதில் எளிதில் போட்டுக்கொள்ளலாம்.Operation கிளிக் செய்தால் வியாபரத்திற்கு பயன்படும் இதர கணக்கீடுகளையும் காணலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வியாபாரத்திற்கு தேவைபடும் மற்றும் ஒரு கால்குலெஷன் கீழே-
கரண்சி கன்வர்ட்டரும் இதில இணைக்கப்பட்டுள்ளது. தேவையான நாட்டின் தேவையான மதிப்பை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இது தவிர வேறு என்ன வசதிகள் இதில் இருக்கு என்கின்றீர்களா? நீங்கள் தட்டச்சு செய்ததை நேரடியாகExcel எக்ஸெல்,Word வேர்ட், என மாற்றிக்கொள்வதோடு அல்லாமல் நண்பருக்கு இ-மெயிலும் அனுப்பலாம்.மாணவர்களு்க்கு பயன்படும் Scientific Calculator சயின்டிபிக் கால்குலேட்டரும் இதில் இணைந்துள்ளதால் மாணவர்களுக்கும் இது பெரிதும் பயன்படும்.இதில் உள்ள அனைத்து வசதிகளையும் குறிப்பிடுவதானால் இன்னும் ஒரு பதிவு போடும் அளவிற்கு இதில் சங்கதி உள்ளது. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

13 comments:

  1. மற்றும் ஒரு அழகிய பகிர்வு... நன்றிங்க வேலன்

    ReplyDelete
  2. பிரமாதம் வேலன் சார்,

    என்ன இந்த வாரம் மாணவர்கள் வாரமா... பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை சார்...

    தொடர்ந்து இன்னும் நிரைய எதிர்பார்ப்புகளுடன்....

    இனைந்திருங்கள் இது velang.blogspot.com

    வாழ்த்துக்களும்,பாராட்டுகளுடனும்...
    உங்கள்.மாணவன் ரவிசிலம்பரசன்-சிங்கை

    ReplyDelete
  3. நல்ல தொரு பயனுள்ள பதிவு.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. என்ன மாப்ஸ் ஸ்கூல் எதுவும் ஆரம்பிக்க போறீங்களா?

    ReplyDelete
  5. ஆ.ஞானசேகரன் கூறியது...
    மற்றும் ஒரு அழகிய பகிர்வு... நன்றிங்க வேலன்//

    நன்றி ஞர்னசேகரன் அவர்களே..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. guna கூறியது...
    thankyou thankyou thankyou//

    நன்றி குணா சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. அன்புடன் அருணா கூறியது...
    ஆஹா அருமை!அருமை!//

    நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. மாணவன் கூறியது...
    பிரமாதம் வேலன் சார்,

    என்ன இந்த வாரம் மாணவர்கள் வாரமா... பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை சார்...

    தொடர்ந்து இன்னும் நிரைய எதிர்பார்ப்புகளுடன்....

    இனைந்திருங்கள் இது velang.blogspot.com

    வாழ்த்துக்களும்,பாராட்டுகளுடனும்...
    உங்கள்.மாணவன் ரவிசிலம்பரசன்-சிங்கைஃஃ

    நன்றி நண்பரே...
    தங்கள் வருகைக்கும் கருத்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. Jaleela Kamal கூறியது...
    நல்ல தொரு பயனுள்ள பதிவு.
    வாழ்த்துக்கள்//

    நன்றி சகோதரி..தங்கள் நீண்டநாட்களுக்குபின் வந்துள்ளீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. Chitra கூறியது...
    Thank you very much.//

    நன்றி சகோதரி...
    தங்கள் வருகைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. கக்கு - மாணிக்கம் கூறியது...
    என்ன மாப்ஸ் ஸ்கூல் எதுவும் ஆரம்பிக்க போறீங்களா?//

    வாங்க..நாம இருவரும் சேர்ந்து ஆரம்பிக்கலாம்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete