Wednesday, September 8, 2010

வேலன்-போட்டோஷாப் - வீடுகளுக்கான பிரஷ் டூல்.

வீட்டை கட்டிப்பார் -கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்லுவார்கள்.இரண்டுமே கடினமான வேலை.ஆனால் நாம் சுலபமாக வீட்டை போட்டோஷாப்பில் கட்டி விடலாம்.ஒரே ஒரு கிளிக் போதும். விதவிதமான வீடுகள் நமக்கு கிடைக்கும். முதலில் 4 எம்.பி. கொண்ட இந்த பிரஷ் டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதன் மூலம் நாம் கொண்டுவந்த வீட்டின் டிசைனை கீழே காணுங்கள்.
இந்த வீட்டின் டிசைனில் கொணடுவந்த புகைப்படம் கீழே-
இனி இதை போட்டோஷாப்பில் எப்படி கொண்டுவருவது என்று பார்க்கலாம்.பிரஷ் டூலை இணைப்பது எப்படி என்று நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். புதியவர்கள் இங்கு சென் று பார்த்துக்கொள்ளவும்.,இப்போது உங்கள் போட்டோஷாப்பில் கீழே உள்ள வாறு பிரஷ்டூல் வந்து அமர்ந்திருக்கும்.

ஒரு புதிய பைலை விண்டோவில் திறந்துகொண்டு இதில் ஏதாவது ஒரு படத்தை கிளிக்செய்யுங்கள். பின்னர் அதை புதிய பைலில் வைத்து கிளிக் செய்தால் படமானது உங்கள் புதிய விணடோவில் அமர்ந்திருக்கும்.கீழே கொடுத்துள்ள விதவிதமான படங்களை காணுங்கள். 


இதில் பிரஷ்டூல் மூலம் புகைப்படத்தை கொண்டுவந்துவிட்டு பிறகு நமக்கு விருப்பமான படத்தை அதில் இணைத்துக்கொள்ளலாம். பின்புறம் கருப்பு -வெள்ளையிலும் படம் கலரிலும் இருந்தால் அட்டகாசமாக இருக்கும்.அதனால் 
foregroundcolor கருப்பு நிறத்திலும் backround color வெள்ளை நிறத்திலும் வருமாறு செட் செய்துகொள்ளுங்கள்.
இதில் உள்ள பிற வீடுகளின் டிசைன்படங்கள் கீழே-








கலரிலும் படத்தை கொண்டுவரலாம். ஆனால் கருப்பு -வெள்ளையில் வரும் அழகு கலரில் வருவதில்லை.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
என்னங்க..சிம்பிளாக வீட்டை கட்டிவிட்டீங்களா...பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்

16 comments:

  1. வழக்கம்போலவே அசத்தலான பதிவு வேலன் சார்....

    ReplyDelete
  2. கலக்கல் பகிர்வு.
    போட்டோவில் இருக்கும் குட்டீஸ் அழகு.
    குட்டீஸையும் கறுப்பு வெள்ளையில் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அல்லவா?

    ReplyDelete
  3. cute girl!!!

    :-) (I think, I know who she is!)

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பரே என் செல்லத்தின் புகைப்படத்தை உலகறிய செய்ததற்கு. மனதிற்கு சந்தோசமாக உள்ளது. நன்றி வேலன் நண்பரே.

    ReplyDelete
  5. //Chitra கூறியது...
    cute girl!!!

    :-) (I think, I know who she is!)//

    அக்கா சந்தேகமே வேண்டாம் இந்த அடியேனின் மகள் தான் அது.

    ReplyDelete
  6. முஹம்மது நியாஜ்September 8, 2010 at 1:56 PM

    திரு வேலன் அவர்களுக்கு
    நீண்ட நாட்களுக்கு பிறகு அசத்தாலான போட்டோ ஷாப் பாடம்.
    செல்லம் அது அனைத்து உள்ளங்களையும் அள்ளும்.
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  7. வணக்கம் வேலன்சார்.வழக்கமான மற்றுமொரு அசத்தலான பதிவு.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. மாணவன் கூறியது...
    வழக்கம்போலவே அசத்தலான பதிவு வேலன் சார்.ஃ

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. சே.குமார் கூறியது...
    கலக்கல் பகிர்வு.
    போட்டோவில் இருக்கும் குட்டீஸ் அழகு.
    குட்டீஸையும் கறுப்பு வெள்ளையில் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அல்லவா?

    நன்றி குமார் சார்..கருப்பு வெள்ளையிலேயே குட்டீஸ் படமும் போட்டிருந்தால் வித்தியாசம் தெரியாது. அதற்குதான் அதனை கலரில் போட்டுள்ளேன். தங்கள் வருகைக்கு்ம் கருத்துக்கும் ந்ன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. Chitra கூறியது...
    cute girl!!!

    :-) (I think, I know who she is!)

    நன்றி சகோதரி..நண்பர் வந்தேமாதரம் சசி அவர்களின் குழந்தை.தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி“
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. சசிகுமார் கூறியது...
    மிக்க நன்றி நண்பரே என் செல்லத்தின் புகைப்படத்தை உலகறிய செய்ததற்கு. மனதிற்கு சந்தோசமாக உள்ளது. நன்றி வேலன் நண்பரே.

    நான்தான் நன்றி சொல்லவேண்டும் சசி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. சசிகுமார் கூறியது...
    //Chitra கூறியது...
    cute girl!!!

    :-) (I think, I know who she is!)//

    அக்கா சந்தேகமே வேண்டாம் இந்த அடியேனின் மகள் தான் அது.

    நன்றி சசி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. முஹம்மது நியாஜ் கூறியது...
    திரு வேலன் அவர்களுக்கு
    நீண்ட நாட்களுக்கு பிறகு அசத்தாலான போட்டோ ஷாப் பாடம்.
    செல்லம் அது அனைத்து உள்ளங்களையும் அள்ளும்.
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்ஃஃ

    நேரம் போதவில்லை நியாஜ் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துகு்ம் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. மச்சவல்லவன் கூறியது...
    வணக்கம் வேலன்சார்.வழக்கமான மற்றுமொரு அசத்தலான பதிவு.
    வாழ்த்துக்கள்...ஃஃ

    நன்றி மச்சவல்லவன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. மிகவும் அசத்தலான பதிவு குட்டிகளும் அருமை

    ReplyDelete
  16. கலக்குறீங்க சார்...! என்ன சொல்ல... வார்த்தை இல்ல..

    ReplyDelete