Tuesday, October 12, 2010

வேலன்-36 வகை பைல் பார்மெட்களில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை அறிய

வேர்டில் அப்ளிகேஷன்களில உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம். ஆனால் பிடிஎப்,பவர்பாயிண்ட் என பிறபார்மெட் போன்றவற்றில் எண்ணிக்கையை அறிவது கடினம். 36 வகை பார்மெட்களில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டறிய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 40 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  
 இதில் உள்ள விண்டோ மூலம் தேவையான பார்மெட் அப்ளிகேஷனை திறந்துகொள்ளவும்.அதனை Add செய்துகொள்ளவும்.
 வரும் விண்டோவில் Count கிளிக்செய்தால் உங்களுக்கு அந்த அப்ளிகேஷனில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தெரியவரும்.அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிகை சுஜாதா அவர்கள் ஒரு காட்சியில் அவரின் தம்பி பிச்சை எடுத்துவந்த காசு கீழே கொட்டி விடும். அப்போது அவர் அவனிடம் எடுக்கவா? எண்ணவா? என கேட்பார். அதைப்போல இந்த சாப்ட்வேர் இன்ஸ்டால்செய்ததும் தேவையான அப்ளிகேஷனில் வைத்து ரைட் கிளிக் செய்யும் போது Add to any count - Add to Anycount and Count என இரண்டு ஆப்ஷனுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.தேவையானதை கிளிக் செய்யவும்.
 இதில் Add Anycount and  Count கிளிக் செய்ய உங்களுக்கு நேரடியாக விண்டோ ஓப்பன் ஆகி அதில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தெரியவரும்.
வேர்ட்டில் கூட நாம் வேர்டை திறந்து உள்ளே சென்றுதான் வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிய முடியும். ஆனால் இதில நாம் சுலபமான வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளலாம். படிக்கும் மாணவர்களுக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

8 comments:

  1. வழக்கம்போலவே அருமை வேலன் சார்
    பயனுள்ள மென்பொருள் பலருக்கும் இது பயன்படும் சார்
    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. வழக்கம் போல் கலக்கல் வேலன் சார்.

    ReplyDelete
  3. மாணவன் கூறியது...
    வழக்கம்போலவே அருமை வேலன் சார்
    பயனுள்ள மென்பொருள் பலருக்கும் இது பயன்படும் சார்
    பகிர்ந்தமைக்கு நன்றி
    //

    நன்றி சிம்பு சார்....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன.

    ReplyDelete
  4. Chitra கூறியது...
    :-)
    //

    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. சே.குமார் கூறியது...
    வழக்கம் போல் கலக்கல் வேலன் சார்ஃ


    நன்றி குமார் சார்....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வுக்கு நன்றி சார்

    ReplyDelete
  7. அய்ய .....மாப்ள...... இதெல்லாம் எனக்கு வேனாமையா...
    குச்சிமுட்டாய், குருவி ரொட்டி,.....கடலை உருண்ட, ......பொற,....
    அப்பறம்..........வாயப்பலம்....

    ReplyDelete
  8. அன்புள்ள வேலன் அவர்களுக்கு,
    உங்களைத்ட தொடர்பு கொள்ள ஈ-மெயில் விவரம் உங்கள் வலைப்பூவில் கொடுத்தால் நல்லது.

    என் வலைப்பூவில் உள்ள பதிவுகளை PDF கோப்புகளாக் சேர்த்து வைக்க விரும்புகிறேன். அதைச் செய்வது எப்படி என்று விளக்குங்களேன். நன்றி.-- பி.எஸ்.ஆர்

    ReplyDelete