போட்டோஷாப்பில் முக்கியமான பாடமாக இதனை குறிப்பிடலாம். முப்பரிமாண படம் நிறைய பார்த்திருப்பீர்கள். ஆனால் அதை எவ்வாறு செய்வார்கள் என உங்களுக்கு தெரியுமா? இன்றைய பதிவில் அதனை பார்க்கலாம்.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.அன்பே ஆருயிரே படத்தில் சூர்யா அவர்களும் சந்தானம் அவர்களும் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றை பார்த்திருப்பீர்கள். அதில் சூர்யா தெரிகிறது என்று சொல்லுவார். சந்தானம் தெரியவில்லை என்று சொல்லுவார். அதுபோல் சந்தானம் இப்போது தெரிகின்றது என்று சொல்லுவார். சூர்யா தெரியவில்லை என்று சொலலுவார். அதைப்போல் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இந்த படத்தை நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட 3 டி கண்ணாடியை போட்டுபார்க்கும் சமயம் ஒரு கண்ணை மூடி பார்க்கும் சமயம் நான் தெரிவேன். மறுகண்ணால் பார்க்கும் சமயம் நான் தெரியமாட்டேன். அதை எவ்வாறு செய்வது என்று பாரக்கலாம். முதலில ஒரே அளவிலான இரண்டுபடத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.நான் தேர்வு செய்துள்ள படம் கீழே-
இந்த சாப்ட்வேரை திறந்துகொள்ளுங்கள். வரும் விணடோவில் முதலில் உள்ள படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
வலதுபுறம் வரும் படத்தையும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
தேவையான செட்டிங்ஸ் தேர்வு செய்ததும் சிகப்பு -நீலம் கட்டத்தை கிளிக் செய்யவும் .கீழே உள்ள விண்டோ தெரியும்.
தேவையான இடத்தில் சேவ்செய்துகொள்ளுங்கள். நேரடியாக பிரிண்ட்டும் எடுத்தும் கொள்ளலாம்.மற்றும் ஒரு உதாரணம் பாருங்கள்.கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை.
பின்புறத்தில் இவைகள் வருமாறு நான் எடுத்த புகைப்படம் கீழே-
இப்போது இரண்டு படங்களையும் மிக்ஸ் செய்ததும வந்துள்ள 3 டி படம் கீழே-
பார்ப்பதற்கு மங்கலாக தெரியும் படமானது நீங்கள் 3 டி கண்ணாடி போட்டுகொண்டு நீலகலர் கண்வழியாக பார்க்கும் சமயம் உங்களுக்கு விவேகானந்தர் பாறையும் திருவள்ளுவர் சிலைமட்டும் தெரியும். இதே படத்தை நீங்கள் சிகப்புகலர் வழியாக பார்க்கும் சமயம் என்னுடம் படம் தெரியும். நீங்களும் இவ்வாறு உங்களது புகைப்படத்தில் செய்து பாருங்கள்.
பதிவினை பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
அருமை சார்,
ReplyDeleteதெளிவான விளக்கங்களுடன் போட்டோஷாப் - 3 டி பாடத்தை பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்க வளமுடன்
அருமை.
ReplyDeleteதெளிவான விளக்கம்.
nandru ,migha nandru.
ReplyDeleteமற்றுமொரு பயன்மிகு பதிவு..!
ReplyDeleteநன்றி! வாழ்த்துக்கள்..!
3 டி படம் சாப்ட்வேர் தந்தமைக்கு வேலன் அண்ணாவிற்கு நன்றி! யுடியுப்பில் இருந்து பார்மெட் சாப்ட்வேர் தந்தீர்கள் நன்றி! நம்மிடம் ஏற்கனவே உள்ள வீடியோவை 3gp கைபேசிக்கு மாற்ற ஏதாவது நல்ல சாப்ட்வேர் இருந்தால் அடுத்த பாடத்தில் வழங்குங்கள். வாழ்க வளமுடன் வேலன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். நன்றியுடன் காங்கேயம்பி.நந்தகுமார்
ReplyDeleteபயனுள்ள தகவல்! நன்றி!
ReplyDeleteமிக எழிமையாக இருக்கிறது.3D படம் உருவாக்குவது கடினமாய் இருக்கும் என நினைத்தேன்.தெளிவான விளக்கங்களுடன் அருமையான பதிவு.நன்றி.
ReplyDeleteதெளிவான விளக்கங்களுடன் போட்டோஷாப் - 3 டி பாடத்தை பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர் ...உங்கள் பதிவை டவிண்லோட் செய்யும் போது pdf கோப்பாக வருகிறது ..என்ன செய்யலாம்.
ReplyDeleteவேலன் சார்,
ReplyDeleteஅருமை,பயனுள்ள தகவல்.
நன்றி
வாழ்க வளமுடன்,
S.ரவிசங்கர், திருச்சி
சார்,
ReplyDeleteநான் adobi cs2 என்னிடம் உள்ளது .
விண்டோஸ் 7 ல் மெக்சி டூல் மற்றும் புதிய ப்ருச்களை எப்படி போடோசாபில் இணைப்பது எப்படி.
மாணவன் கூறியது...
ReplyDeleteஅருமை சார்,
தெளிவான விளக்கங்களுடன் போட்டோஷாப் - 3 டி பாடத்தை பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்க வளமுடன்
ஃஃ
நன்றி சிம்பு சார்..போட்டோவை முப்பரிமாணத்தில் மாற்றி பார்த்தீர்களா.?
தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் கூறியது...
ReplyDeleteஅருமை.
தெளிவான விளக்கம்.
ஃ
நன்றி குமார் சார்..
வாழ்கவ ளமுடன்.
வேலன்.
dharumaidasan கூறியது...
ReplyDeletenandru ,migha nandru.ஃ
வாங்க சார்...தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
தங்கம்பழனி கூறியது...
ReplyDeleteமற்றுமொரு பயன்மிகு பதிவு..!
நன்றி! வாழ்த்துக்கள்..!
நன்றி பழனி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.நந்தகுமார் கூறியது...
ReplyDelete3 டி படம் சாப்ட்வேர் தந்தமைக்கு வேலன் அண்ணாவிற்கு நன்றி! யுடியுப்பில் இருந்து பார்மெட் சாப்ட்வேர் தந்தீர்கள் நன்றி! நம்மிடம் ஏற்கனவே உள்ள வீடியோவை 3gp கைபேசிக்கு மாற்ற ஏதாவது நல்ல சாப்ட்வேர் இருந்தால் அடுத்த பாடத்தில் வழங்குங்கள். வாழ்க வளமுடன் வேலன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். நன்றியுடன் காங்கேயம்பி.நந்தகுமார்.
ஏற்கனவே இதைப்பற்றி பதிவிட்டுள்ளேன் நந்தகுமார் சார்..எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும்.தங்கள வருகைக்கும் கருத்துகு்ம் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
எஸ்.கே கூறியது...
ReplyDeleteபயனுள்ள தகவல்! நன்றி!
ஃ
நன்றி எஸ்.கே. சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
புலிகுட்டி கூறியது...
ReplyDeleteமிக எழிமையாக இருக்கிறது.3D படம் உருவாக்குவது கடினமாய் இருக்கும் என நினைத்தேன்.தெளிவான விளக்கங்களுடன் அருமையான பதிவு.நன்றி.
ஃஃ
படம் செய்துபார்த்தீங்களா? நன்றாக வந்ததா? தங்கள வருகைக்கும கருத்துக்கும் நன்றி புலிக்குட்டி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
thevarajah கூறியது...
ReplyDeleteதெளிவான விளக்கங்களுடன் போட்டோஷாப் - 3 டி பாடத்தை பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர் ...உங்கள் பதிவை டவிண்லோட் செய்யும் போது pdf கோப்பாக வருகிறது ..என்ன செய்யலாம்.
ஃ
பிடிஎப்பாகதான் நான் டவுண்லோடு செய்யும் வசதி தந்துள்ளேன்.தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
பெயரில்லா கூறியது...
ReplyDeleteவேலன் சார்,
அருமை,பயனுள்ள தகவல்.
நன்றி
வாழ்க வளமுடன்,
S.ரவிசங்கர், திருச்சி
ஃ
நன்றி ரவிசங்கர் சார்..தங்கள ்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாழ்க வளமுடன்.
வேலன்.
jahan கூறியது...
ReplyDeleteசார்,
நான் adobi cs2 என்னிடம் உள்ளது .
விண்டோஸ் 7 ல் மெக்சி டூல் மற்றும் புதிய ப்ருச்களை எப்படி போடோசாபில் இணைப்பது எப்படி.
ஃ
என்னிடம் விண்டோஸ் 7 இல்லை.முயற்சித்துபபார்த்து தங்களுக்கு தகவல் சொல்லுகின்றேன்.தங்கள் வருகைக்கும் கருததுகு்ம் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
//பார்ப்பதற்கு மங்கலாக தெரியும் படமானது நீங்கள் 3 டி கண்ணாடி போட்டுகொண்டு நீலகலர் கண்வழியாக பார்க்கும் சமயம் உங்களுக்கு விவேகானந்தர் பாறையும் திருவள்ளுவர் சிலைமட்டும் தெரியும்.//
ReplyDeleteகண்ணாடி அனுப்பி வைக்கவும்
மிக்க நன்றி பாராட்டுகள்