Monday, November 8, 2010

வேலன்- கீ -லாக்-கீபோர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்ய

நாம் பணிபுரியும் அலுவலகம் ஆகட்டும் -நமது வீடாகட்டும். முக்கியமான டாக்குமெண்ட் -படங்கள் -என மும்முறமாக நாம் வேலை செய்யும் சமயம் சில நிமிடங்கள் எழுந்து வெளியே செல்ல நேரலாம்.அதுசமயம் யாராவதோ - குழந்தைகளோ -கீ போர்ட்டிலோ - மவுஸிலோ கிளிக் செய்து மாற்றங்கள் செய்துவிட்டால் நமக்கு சிரமமே. அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு உதவ இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. இந்த சாப்ட்வேர் மூலம் நாம் கீ-போர்ட் மற்றும் மவுஸ் ஆகியவற்றை லாக் செய்துவிட்டு சென்றுவிடலாம். மீண்டும் நாம் வந்து லாக அகற்றினால்தான் கீ -போர்டோ - மவுஸோ வேலை செய்ய ஆரம்பிக்கும்.756 கே.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும் இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் அமர்ந்துகொள்ளும். அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் உள்ள செட்டப் கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள மவுஸ் செட்டிங்ஸ் படி தேவையான தில் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்துகொள்ளலாம்.கீபோர்ட் செட்டிங்ஸ் செய்ய இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்த அதற்கேற்ப கீ -போர்ட் செட்டிங்ஸ்ல் மாற்றம் ஏற்படும். இறுதியில் ஒ.கே. செய்யவும்.உங்கள் விருப்பம் ஏதுவோ அதன்படி உங்கள் கீ -போர்ட் மற்றும் மவுஸ் செயல்படும்.சுலபமான உபயோகம் - சின்ன சாப்ட்வேர்.பயன்படுத்திப் பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

14 comments:

  1. பகிர்வுக்கு நன்றி சார்!

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள மென்பொருள் வேலன் சார்,
    756 கே.பி குறைந்த அளவுள்ள மென்பொருள் அருமை

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    வாழ்க வளமுடன்

    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  3. மிக்க உதவியானதுதான் மாப்ள. நன்றி.

    ReplyDelete
  4. கீ போர்டு மற்றும் மவுஸ் லாக் செய்யும் வித்தை(விந்தை)ஆச்சரியம். மேலும் nhm அனுப்பியமைக்கு மிகவும் நன்றி அண்ணா.தொடரட்டும் தங்களின் சாதனைப்பணி.

    ReplyDelete
  5. நண்பரே நாம் windows xp உபயோகித்து அதில் நமக்கென தனியாக பயனர் கணக்கு(user account)இருந்தால் windows key உடன் சேர்த்து "L"அழுத்தினால் தானாக லாக் ஆகி விடும்.பின் நாம் நமது கடவு சொல்(pass word)லை தட்டச்சினால் தான் கணிணியை இயக்க முடியும்.இதில் சிறப்பு என்னவென்றால் இதற்காக நாம் எந்த மென்பொருளையும் கணிணியில் நிறுவ வேண்டியதில்லை.விண்டோஸ் XP இயங்குதள பாவனையாளர்கள் முயன்று பார்க்கலாமே.

    ReplyDelete
  6. எஸ்.கே கூறியது...
    பகிர்வுக்கு நன்றி சார்

    நன்றி எஸ்.கே.சார்..தங்கள்வருகைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. மாணவன் கூறியது...
    மிகவும் பயனுள்ள மென்பொருள் வேலன் சார்,
    756 கே.பி குறைந்த அளவுள்ள மென்பொருள் அருமை

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    வாழ்க வளமுடன்

    என்றும் நட்புடன்
    மாணவன்


    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுட்ன்.
    வேலன்.

    ReplyDelete
  8. Chitra கூறியது...
    Thank you, Sir.

    நன்றி சகோதரி...
    வாழ்கவளமுட்ன்.
    வேலன்.

    ReplyDelete
  9. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மிக்க உதவியானதுதான் மாப்ள. நன்றி.
    ஃஃ

    நன்றி மாம்ஸ்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. dharumaidasan கூறியது...
    again thank u sirஃஃ
    நன்றி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. பி.நந்தகுமார் கூறியது...
    கீ போர்டு மற்றும் மவுஸ் லாக் செய்யும் வித்தை(விந்தை)ஆச்சரியம். மேலும் nhm அனுப்பியமைக்கு மிகவும் நன்றி அண்ணா.தொடரட்டும் தங்களின் சாதனைப்பணிஃ

    நன்றி நந்தகுமார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. Siva கூறியது...
    நண்பரே நாம் windows xp உபயோகித்து அதில் நமக்கென தனியாக பயனர் கணக்கு(user account)இருந்தால் windows key உடன் சேர்த்து "L"அழுத்தினால் தானாக லாக் ஆகி விடும்.பின் நாம் நமது கடவு சொல்(pass word)லை தட்டச்சினால் தான் கணிணியை இயக்க முடியும்.இதில் சிறப்பு என்னவென்றால் இதற்காக நாம் எந்த மென்பொருளையும் கணிணியில் நிறுவ வேண்டியதில்லை.விண்டோஸ் XP இயங்குதள பாவனையாளர்கள் முயன்று பார்க்கலாமேஃ

    தனியாக பயனாளர் கணக்கு இல்லையென்றால் என்னசெய்வது? தங்கள் தகவலுக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete