Monday, November 15, 2010

வேலன்-போட்டோஷாப் -போட்டோ இன்ஸ்டுமென்ட்

போட்டோஷாப்பில் தான் எவ்வளவு வசதிகள்.அந்த வசதிகளை தனியே பிரித்து எடுத்து விதவிதமான சாப்ட்வேர்கள் நிறையஉள்ளது.அந்த வகையில் இந்த போட்டோ இன்ஸ்டுமென்ட் அருமையாக உள்ளது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
இதில கீழே உள்ள 7 டூல்கள் Glamour Skin.Glamour Skin,Brightness-Contrast,Glamour Skin.Colorize.Clone,Object removel.Skin Cleaner,Liquify உள்ளன.  உங்களுக்காக வீடியோவாக அவை பிளே ஆகும். 
தேவையான டூலை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக்செய்தால் அந்த டூலுக்கான வீடியோ பிளே ஆக ஆரம்பிக்கும்.இதில் உள்ள ஒரு டூலின உபயோகத்தினை இப்போது பார்க்கலாம்.திருமணம் - பிறந்த நாள் -போன்ற விஷேஷங்களின் போது நாம் புகைப்படம் எடுக்கும் சமயம் கரட்டாக யாராவது தலை நுழைத்துவிடுவார்க்ள். கை படத்தில் வந்துவிடும். அந்த மாதிரியான நேரத்தில் அருமையாக அதனை இந்த டூல் மூலம் நீக்கி விடலாம். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
கடற்கரையில் மகனை புகைப்படம் எடுக்கும் போது பாட்டி நுழைந்துவிட்டார். அவரை படத்திலிருந்து எடுக்க இந்த சாப்ட்வேரை உபயோகித்தேன்.
இதில் தேவையில்லாத பகுதியை நீக்கியபின் வந்துள்ள படம் கீழே-
எளிமையான விளக்கம் அவர்களே வீடியோவில் கொடுத்துள்ளதால் நான் விரிவாக விளக்கவில்லை.இதனைப்போலவே இதில் உள்ள பிற டூல்களையும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்க்ள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- கடந்த 8-11-2010 முதல் 14-11-2010 வரை மதுரை.ரமேஸ்வரம்.திருச்செந்துர் .கன்னியாகுமரி.குற்றாலம்.பாபநாசம்.பிள்ளையார்பட்டி.
தஞ்சாவூர்.கும்பகோணம்.திருக்கடையூர்,பூம்பூகார்.
சிதம்பரம் என தென்னிந்தியாவில் உள்ள
 அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்ததால் 
பதிவிட முடியவில்லை.இரவு தங்கும் ஊர்களிலும் பதிவிட வாய்ப்புகிடைக்கவில்லை.மன்னிக்கவும்.தவிர இந்த
ஒரு வாரமாக பதிவிற்கு வந்து அனைத்து வாசகர்களு்ககும் 
நன்றி.டூரில் அவரவர் ஊரினை சுற்றிகாண்பித்ததுடன் அன்பால்
 பாசத்தால் திக்குமுக்காட செய்த சக பதிவர்களான 
திரு.ஞானசேகரன்(திருச்சி).
 திரு.மச்சவல்லவன்(பூம்புகார்).
திரு.விஜி(சிதம்பரம்) ஆகியவர்களுக்கு ந்ன்றி. 
வழக்கப்படி அதிரடி பதிவுகளை ஆரம்பித்துவிடலாம்.

28 comments:

  1. அசத்தலாக மீண்டும் போட்டோஷாப் பாடம் ஆரம்பித்துவிட்டது
    அருமை சார்...

    ”கடந்த 8-11-2010 முதல் 14-11-2010 வரை மதுரை.ரமேஸ்வரம்.திருச்செந்துர் .கன்னியாகுமரி.குற்றாலம்.பாபநாசம்.பிள்ளையார்பட்டி.
    தஞ்சாவூர்.கும்பகோணம்.திருக்கடையூர்,பூம்பூகார்.
    சிதம்பரம் என தென்னிந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்ததால்
    பதிவிட முடியவில்லை”

    நான் ஏதோ வேளைப்பளுவோ என நினைத்திருந்தேன் சார்
    உங்கள் பயணங்கள் இனிதாக நிறைவுபெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்... இதே மகிழ்ச்சியுடன்
    மீண்டும் வழக்கப்படி அதிரடி பதிவுகளை ஆரம்பியுங்கள்

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. ரொம்ப அருமையாக உள்ளது சார்!

    ReplyDelete
  3. நன்றி சார் மிக அருமை! ! !...

    ReplyDelete
  4. மிக அருமையான மென்பொருளை தேடிப்பிடித்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி சார் .

    ReplyDelete
  5. நன்றிசார்,
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வேலன் அண்ணா தினமும் உங்கள் இணையத்தை திறந்து ஏமாற்றம் அடைந்தேன். சுற்றுலா சென்றதால் இடுக்கை இட முடியவில்லை என்பதை உணர்ந்தேன். உங்கள் உதவியால் நான் தற்போது போட்டோ ஷாப்பில் சிறு சிறு தகவல்களை கற்றுக்கொண்டேன். அன்புடன் காங்கேயம் பி.நந்தகுமார்

    ReplyDelete
  7. ஹாய் நண்பா,

    வெகு நாலைக்கப்பறம் ஒரு நல்ல அசத்தலான போஸ்ட். நன்றாக இருக்கிறது.
    அது சரி ஓஹோ... தெற்கு பயணமா? அடபரவாயில்லையே.. சரி எப்படி இருந்தது உங்கள் பயணம்? நன்றாக அனுபவித்தீர்களா? மழை ஒன்றும் குறுக்கிடாமல் இருந்ததா?

    ReplyDelete
  8. உங்களின் இடுகைகள் இல்லாததால் ரொம்பவும் கவலையாக இருந்தது இன்று உங்களின் இடுகை கண்டு மகிழ்ச்சி நல்ல சிறந்த இடுகை ஆனால் யாரும் பயன்படுத்த முடியாது உள்ளது இலவசமாக பயன் படுத்த முடியாதா என்ன வழி தந்து உதவுங்கள் jala.jasminala@gmail.com

    ReplyDelete
  9. உங்களின் மினஞ்சல் தந்து உதவவும்

    ReplyDelete
  10. இத்தோடா.....மாப்ள....நம்ம ஊரு பக்கமெல்லாம் சுத்திட்டு வந்திருக்கீங்க?
    சரிதான், இன்னும் ஆரு மாசத்துக்கு ஓட்டலாம்தானே !? :)))))))))))))

    ReplyDelete
  11. உங்களின் இடுகைகள் இல்லாததால் ரொம்பவும் கவலையாக இருந்தது இன்று உங்களின் இடுகை கண்டு மகிழ்ச்சி நல்ல சிறந்த இடுகை ஆனால் யாரும் பயன்படுத்த முடியாது உள்ளது இலவசமாக பயன் படுத்த முடியாதா என்ன வழி தந்து உதவுங்கள் sankar75@ymail.com

    ReplyDelete
  12. மாணவன் கூறியது...
    அசத்தலாக மீண்டும் போட்டோஷாப் பாடம் ஆரம்பித்துவிட்டது
    அருமை சார்...

    ”கடந்த 8-11-2010 முதல் 14-11-2010 வரை மதுரை.ரமேஸ்வரம்.திருச்செந்துர் .கன்னியாகுமரி.குற்றாலம்.பாபநாசம்.பிள்ளையார்பட்டி.
    தஞ்சாவூர்.கும்பகோணம்.திருக்கடையூர்,பூம்பூகார்.
    சிதம்பரம் என தென்னிந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்ததால்
    பதிவிட முடியவில்லை”

    நான் ஏதோ வேளைப்பளுவோ என நினைத்திருந்தேன் சார்
    உங்கள் பயணங்கள் இனிதாக நிறைவுபெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்... இதே மகிழ்ச்சியுடன்
    மீண்டும் வழக்கப்படி அதிரடி பதிவுகளை ஆரம்பியுங்கள்

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்//
    நன்றி சார்

    வாழ்க வளமுடன்
    வேலன்

    ReplyDelete
  13. எஸ்.கே கூறியது...
    ரொம்ப அருமையாக உள்ளது சார்!
    //

    நன்றி எஸ்.கே.சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. எஸ்.முத்துவேல் கூறியது...
    நன்றி சார் மிக அருமை! ! !ஃ

    நன்றி முத்துவேல் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. பெயரில்லா கூறியது...
    மிக அருமையான மென்பொருளை தேடிப்பிடித்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி சார் .


    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுட்ன..
    வேலன்.

    ReplyDelete
  16. மச்சவல்லவன் கூறியது...
    நன்றிசார்,
    வாழ்த்துக்கள்ஃஃ

    நன்றி மச்சவல்லவன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. பி.நந்தகுமார் கூறியது...
    வேலன் அண்ணா தினமும் உங்கள் இணையத்தை திறந்து ஏமாற்றம் அடைந்தேன். சுற்றுலா சென்றதால் இடுக்கை இட முடியவில்லை என்பதை உணர்ந்தேன். உங்கள் உதவியால் நான் தற்போது போட்டோ ஷாப்பில் சிறு சிறு தகவல்களை கற்றுக்கொண்டேன். அன்புடன் காங்கேயம் பி.நந்தகுமார்


    நன்றி நந்தகுமார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. Sumathi. கூறியது...
    ஹாய் நண்பா,

    வெகு நாலைக்கப்பறம் ஒரு நல்ல அசத்தலான போஸ்ட். நன்றாக இருக்கிறது.
    அது சரி ஓஹோ... தெற்கு பயணமா? அடபரவாயில்லையே.. சரி எப்படி இருந்தது உங்கள் பயணம்? நன்றாக அனுபவித்தீர்களா? மழை ஒன்றும் குறுக்கிடாமல் இருந்ததா?

    வாங்க சகோதரி..ரொம்ப நாளைக்கு பிறகு கருததுக்கு வந்துள்ளீர்கள். தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி..பயணம் இனிமையாக இருந்தது.
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. பெயரில்லா கூறியது...
    உங்களின் இடுகைகள் இல்லாததால் ரொம்பவும் கவலையாக இருந்தது இன்று உங்களின் இடுகை கண்டு மகிழ்ச்சி நல்ல சிறந்த இடுகை ஆனால் யாரும் பயன்படுத்த முடியாது உள்ளது இலவசமாக பயன் படுத்த முடியாதா என்ன வழி தந்து உதவுங்கள் jala.jasminala@gmail.com


    அதிலேயே லிங்க்கொடுத்துள்ளேன் நண்பரே..சரிபார்க்கவும்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. jasmin கூறியது...
    உங்களின் மினஞ்சல் தந்து உதவவும்


    உங்கள் மின்அஞசல் குறிப்பிடவும்.நான் தொடர்பு கொள்கின்றேன்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. jasmin கூறியது...
    உங்களின் மினஞ்சல் தந்து உதவவும்


    உங்கள் மின்அஞசல் குறிப்பிடவும்.நான் தொடர்பு கொள்கின்றேன்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  22. கக்கு - மாணிக்கம் கூறியது...
    இத்தோடா.....மாப்ள....நம்ம ஊரு பக்கமெல்லாம் சுத்திட்டு வந்திருக்கீங்க?
    சரிதான், இன்னும் ஆரு மாசத்துக்கு ஓட்டலாம்தானே !? :)))))))))))))


    அட உங்க ஊரு கூட அங்கதான் இருக்கா..? சொல்லவே இல்லே....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  23. sankar கூறியது...
    உங்களின் இடுகைகள் இல்லாததால் ரொம்பவும் கவலையாக இருந்தது இன்று உங்களின் இடுகை கண்டு மகிழ்ச்சி நல்ல சிறந்த இடுகை ஆனால் யாரும் பயன்படுத்த முடியாது உள்ளது இலவசமாக பயன் படுத்த முடியாதா என்ன வழி தந்து உதவுங்கள் sankar75@ymail.com
    அதிலேயே லிங்க்கொடுத்துள்ளேன் நண்பர் சங்கர் அவர்களே..சரிபார்க்கவும்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்

    ReplyDelete
  24. மிகவும் பயனுள்ள மென்பொருள்.. பகிர்வுக்கு நன்றி அண்ணா..

    ReplyDelete
  25. மிகவும் சுலபமாகவும் அதே சமயம் பயன்களும் நிறையவே உள்ளது பகிர்ந்ததற்க்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  26. அருமை
    உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
  27. velan sir .. itha register pandrathu eppdi ithu full version venum sir pls

    ReplyDelete
  28. வெல‌ன் அண்ணா இந்த மென்பொருள இன்ஸ்டால் எப்ப‌டி ப‌ண்ணனும் photova save ப‌ண்ண முடியல‌

    ReplyDelete