Saturday, November 27, 2010

வேலன்-வேர்ட்டில் கிளிப் போர்டினை பயன்படுத்த


கம்யூட்டரில் பணிபுரிகையில் தகவல் -படங்கள் - குறிப்புகளை ஒரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற காப்பி - பேஸ்ட் செய்வோம். மற்ற இடங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த வசதி -வேர்ட்டில் பலமுறை பயன்படுத்தலாம். வேர்டில் 24 முறை காப்பி செய்ததில் வேண்டியதை தேர்வு செய்துபின் பேஸ்ட் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
இதில் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு Pasteஎன்பதின் கீழே Clipboad என்கின்ற சின்ன அம்புகுறி இருக்கும். அதை கிளிக செய்யுங்கள். 
வரும் விண்டோவில் பார்த்தீர்களேயானல் உங்களுக்கு நீங்கள் இதுவரை காப்பி செய்தவை வரிசையாக இருக்கும். தேவையானதை தேர்வு செய்துகிளிக் செய்தால் உங்கள் கர்சர் எங்கு உள்ளதோ அங்கு பேஸ்ட் ஆகும்
இதில் உள்ள 24 முறை காப்பி செய்ததகவல்களை மாறி மாறி பேஸ்ட் செய்யலாம்.ஒரே தகவலை பல நபர்களுக்கு அனுப்ப இந்த கிளிக் போர்ட்வசதி உங்களுக்கு பயன்படும்.இந்த கிளிப் போர்டினை தேவையானால் வைத்துக்கொள்ளவும் தேவையான இடங்களுக்கு நகர்த்தியும் வைத்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


பின்குறிப்பு- போட்டோஷாப்பில மிக முக்கியமான 3D படம் பற்றிய பதிவை திங்கள்கிழமை காலை பதிவிடுகின்றேன்.அதற்கு உங்களுக்கு 3 D  கண்ணாடி அவசியம் வேண்டும். ஏற்கனவே இதை ஆனந்தவிகடன் புத்தகத்துடனும் ஜெயா டிவியிலும் கொடுத்தார்கள்.பழைய கண்ணாடி இருந்தால் சரி. இல்லாதவர்கள் இங்கு கிளிக் செய்து அந்த பதிவினை பார்த்து புதியதாக செய்துகொள்ளுங்கள்.பதிவின் லிங்க் கொடுததமைக்கு கொக்கரக்கோ நண்பர் பிரேம் அவரகளுக்கு நன்றி.

20 comments:

  1. கணினியில் புதியவர்களுக்கான மிகவும் பயனுள்ள குறிப்பு

    பகிவுக்கு மிக்க நன்றி சார்

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. உங்கள் போட்டோஷாப் பாடங்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன..ஆனால் தேடி எடுக்குமுன் மண்டை காய்கிறது..ஒரே லேபிளின் கீழ் தர இயலுமா?

    -- செங்கோவி

    ReplyDelete
  3. முஹம்மது நியாஜ்November 27, 2010 at 8:47 PM

    திரு வேலன் அவர்களுகளுக்கு
    இப்போதல்லாம் தினம் ஒரு பாடம் அசத்திருங்க சார் அசத்துங்க... அசத்துங்க...
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  4. தினம் தினம் புதிய விசயங்கள்....
    எல்லாம் புதுமையாய்...
    வாழ்த்துக்கள் வேலன் சார்.

    ReplyDelete
  5. if you give pdf of the post as link it will reduce your page views and rankings. is it ok for you?

    ReplyDelete
  6. வேலன் சார் இந்த YouTube Downloader நேற்றைய தொகுப்பு அதனை install செய்தால் 20% முதல் 50% வரைக்குள் registration code கேட்கிறது. மேலும் மேற்கொண்டு download செய்ய முடியவில்லை. அதற்கு வழி கூறவும்..

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல் சார்!

    ReplyDelete
  8. மாணவன் கூறியது...
    கணினியில் புதியவர்களுக்கான மிகவும் பயனுள்ள குறிப்பு

    பகிவுக்கு மிக்க நன்றி சார்

    தொடரட்டும் உங்கள் பணி
    ஃஃ

    நன்றி சிம்பு சார்..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. செங்கோவி கூறியது...
    உங்கள் போட்டோஷாப் பாடங்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன..ஆனால் தேடி எடுக்குமுன் மண்டை காய்கிறது..ஒரே லேபிளின் கீழ் தர இயலுமா?

    -- செங்கோவி


    உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும் செங்கோவிசார்...
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. முஹம்மது நியாஜ் கூறியது...
    திரு வேலன் அவர்களுகளுக்கு
    இப்போதல்லாம் தினம் ஒரு பாடம் அசத்திருங்க சார் அசத்துங்க... அசத்துங்க...
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்


    நன்றி முஹம்மது நியாஜ் சார்..எல்லாம உங்கள் ஆசிர்வாதம்தான்..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. ஆ.ஞானசேகரன் கூறியது...
    அசத்தல்

    நன்றி ஞர்னசேகரன்சார்...
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. சே.குமார் கூறியது...
    தினம் தினம் புதிய விசயங்கள்....
    எல்லாம் புதுமையாய்...
    வாழ்த்துக்கள் வேலன் சார்.


    நன்றி குமார் சார்...
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan)/மென்பொருள் பிரபு (Menporul Prabhu) கூறியது...
    if you give pdf of the post as link it will reduce your page views and rankings. is it ok for you?

    உண்மைதான் சிரடி சார்...தங்கள்வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி...
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. மகாதேவன்-V.K கூறியது...
    நல்ல தகவல்ஃ

    நன்றி மகாதேவன் சார்..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. Nithin கூறியது...
    வேலன் சார் இந்த YouTube Downloader நேற்றைய தொகுப்பு அதனை install செய்தால் 20% முதல் 50% வரைக்குள் registration code கேட்கிறது. மேலும் மேற்கொண்டு download செய்ய முடியவில்லை. அதற்கு வழி கூறவும்..//

    MX663666127321-பயன்படுத்திப்பார்க்கவும்.தங்கள் வருகைக்கும்கருததுகு்கும் நன்றி...
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. எஸ்.கே கூறியது...
    பயனுள்ள தகவல் சார்!


    நன்றி எஸ்கேசார்....
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. /உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும் செங்கோவி../


    தங்கள் பதிலிற்கு நன்றி...மிக்க மகிழ்ச்சி! -- செங்கோவி

    ReplyDelete
  18. கண்ணாடி தயார்.திங்களுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete