Saturday, November 6, 2010

வேலன்-இஎக்ஸி(.exe) பைலை இ-மெயிலில் சுலபமாக அனுப்ப

நண்பர் நம்மிடம் ஏதாவது ஒரு சாப்ட்வேர் -பைல் என ஏதாவது கேட்பார். சின்ன அளவில்தான் இருக்கும். அதை இ -மெயிலில் அனுப்பிவிடலாம் என்று இ-மெயிலில் அட்டாச்மென்ட் செய்து அவருக்கு அனுப்பும் சமயம் நமக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
சரி..என்ன செய்வது.ஒரு சின்ன தில்லாலங்காடி வேலை செய்தால் பைலை அனுப்பி விடலாம்.பைலின் எக்ஸ்டென்ஷனை மாற்றினால் ஒ.கே.சரி பைலின் எக்ஸ்டென்ஷன்கள் எவ்வாறு அறிந்து கொள்வது.?அதை எவ்வாறு மாற்றுவது? இரண்டு வழிகளில் பைலின் எக்ஸ்டென்ஷன்களை அறியலாம். ஒன்று ஸ்டார்ட் - ரன்-கமெண்ட் -என சென்று மாற்றவேண்டும்.கணிணி வல்லுநர்கள் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நாம் ரொம்ப சுலபமான வழியில் அதை மாற்றிவிடலாம் அதை தெரிந்து கொள்ள இதற்கு முன் பைல்எக்ஸ்டென்ஷன்களை அறிந்துகொள்ள என நான் பதிவிட்ட அந்த தளம் சென்று படித்துக்கொள்ளவும்.இப்போது நீங்கள் பைல் எக்ஸ்டென்ஷன்கள் மாற்றியபின் கீழ்கண்டவாறு உங்களுக்கு விண்டோதோன்றும். 
இதில் ரைட் கிளிக் செய்து Properties-பிராபர்டீஸ் தேர்வு செய்யவும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில முதல் கட்டத்தில் உள்ள(.exe)- .இஎக்ஸி பைலை (.txt) .டெக்ஸ்ட் என மாற்றிவிடுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உங்களுக்கு கீழ்கண்டவாறு எச்சரிக்கை செய்தி வரும் .ஓ.கே. தாருங்கள்.
 இப்போது உங்கள் பைலானது கீழ்கண்டவாறு மாறிவிடும். 
இனி இதை இ-மெயிலில் அட்டாச்மென்ட் செய்து அனுப்பிவிடலாம்.உங்களிடம் இருந்து பெறும் நண்பர் இதைப்போலவே உல்டாவாக செய்தால் பைல் பழையபடி மாற்றிவிடும். சுலபமாக  பயன்படுத்தலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

11 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  2. பிரமாதம் மாப்ஸ். கில்லாடி மாப்ஸ், டாப், டக்கர், தூள் மாப்ஸ்.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி! மிக்க நன்றி!

    ReplyDelete
  4. winrar/winzipல் .exe கோப்பை கம்ப்ரஸ் செய்தும் அனுப்பலாம் அல்லவா?

    ReplyDelete
  5. மாணவன் கூறியது...
    மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    நன்றி
    நட்புடன்
    மாணவன்
    ஃஃ

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. பிரமாதம் மாப்ஸ். கில்லாடி மாப்ஸ், டாப், டக்கர், தூள் மாப்ஸ்ஃஃ


    தாங்ஸ் மாம்ஸ்...
    வாழ்க மாம்ஸ்..
    வளமுடன் மாம்ஸ்.
    வேலன் மாம்ஸ்.

    ReplyDelete
  7. எஸ்.கே கூறியது...
    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி! மிக்க நன்றி!

    எஸ்.கே கூறியது...
    winrar/winzipல் .exe கோப்பை கம்ப்ரஸ் செய்தும் அனுப்பலாம் அல்லவா?

    பல வழிகளில ்இதுவும் ஒன்று...நன்றி எஸ்.கே.சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. How to rename START button. i need my name "RAJA"

    ReplyDelete
  9. நல்ல தகவல் ரொம்ப நாளாக எதிர்பார்தேன் நன்றி திரு.வேலன் சார்...

    ReplyDelete
  10. பெயரில்லா கூறியது...
    How to rename START button. i need my name "RAJA"


    விரைவில் பதிவிடுகின்றேன் நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. சரவணன்.D கூறியது...
    நல்ல தகவல் ரொம்ப நாளாக எதிர்பார்தேன் நன்றி திரு.வேலன் சார்...


    நன்றி சரவணன்சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete