Tuesday, December 7, 2010

வேலன்- பிஎஸ்என்எல்-BSNL -என் நண்பன் சூப்பர்.

பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தில் வரும் பிரபலமான வசனம் நண்பேண்டா....அதைப்போல நமக்கு பிஎஸ்என்எல் என்நண்பன் சூப்பர் என வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.பிளாக் -Blog -படிக்க இன்டர்நெட் வேண்டும். அந்த இன்டர்நெட் பயன்படுத்த தொலைபேசி வேண்டும். அந்த தொலைபேசி இணைப்பு bsnl ஆக இருந்தால் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள். எழுத்து சிறியதாக இருந்தால் பதிவிறக்கம் செய்து பெரியதாக்கி பாருங்கள்.
 ஆங்கிலத்தில் -
உங்களிடம் bsnl போன் இருந்தால் உங்களின் டெலிபோன் எக்ஸ்சேன்ஜ் அலுவலகம் சென்று இதற்காக விண்ணப்ப படிவம் வாங்கிகொள்ளுங்கள்.பின்னர் அதை பூர்த்தி செய்து உடன் இரண்டு புகைப்படங்கள். உங்கள் முகவரி சான்று மற்றும் கடைசியாக வந்த தொலைபேசி பில் அனைத்தையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து உடன் செல்போனுக்கான சிம்மை பெற்றிடுங்கள்.இந்த சிம் மூலம் மொபைலிலிருந்து லேண்ட்லைனுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இலவசமாக பேசிகொள்ளலாம்(பேட்டரி சார்ஜ் லோ ஆகிவிட்டால் சார்ஜ் செய்து மீண்டும் தொடரலாம்) மேலும் மாதம் 200 எஸ்எம்எஸ் உண்டு.3 G போன் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.விருப்பமான இரண்டு Bsnl எண்ணை தேர்வு செய்து அதற்கு நிமிடத்திற்கு 30 காசு வீதமும் இரவில் 20 காசு வீதமும் பேசிக்கொள்ளலாம்.அறிமுக சலுகையாக இலவசமாக வழங்கப்படும் சிம்மை 6  மாதங்கள் அல்லது 180 நாள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்பிறகு குறைந்த அளவாக 50 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்கள் மேலே உள்ள படத்தில் உள்ளது.சிம் வாங்கி கொள்ளுங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

30 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்,

    ஊரில் உள்ள நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்

    தொடரட்டும் உங்கள் பணி

    நன்றி

    ReplyDelete
  2. sir, please see this IDEA prepaid scheme and then tell that bsnl is best or worst..

    get an idea sim for rs.30 with Rs.30 talktime...recharge with rate cutter 53..it is valid for one year..then all mobile calls (to any mobile) will 30 paise/minute..50 paise/minute for landline..

    i think this is the best offer ever..

    ReplyDelete
  3. நல்ல தகவல் அண்ணா.. ஆனால் எனக்கு இப்போது பயன் படாது.. ஊருக்கு போனதும் வாங்கிக்கிறேன்..

    ReplyDelete
  4. //then all mobile calls (to any mobile) will 30 paise/minute..50 paise/minute for landline..
    //

    தல,

    லோக்கல் அல்லது எஸ் டி டி அனைத்திற்கும் பொருந்துமா ?
    நன்றி

    ReplyDelete
  5. நன்றி நண்பரே ..
    வாங்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  6. velan, i have samsung Corby pro B5310. when i connect to GPRS thorugh bsnl, i was not able to read tamil.

    also can u please tell me how to connect my mobile to laptop to view net while i have GPRS live.

    mail id ankannan@gmail.com.

    ReplyDelete
  7. 6 மாதங்கள் அல்லது 180 நாள் வரை
    ??????????????

    ReplyDelete
  8. நல்ல பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  9. வேலன் அண்ணா இன்னைக்கு ரொம்ப எதிர்பார்ப்போடு இணையத்தை திறந்தேன். இடுக்கை விஜய் படம் மாதிரி கருத்து சொல்வதற்கு ஏதுவாக இல்லை. நீங்க இந்த மாதிரி தகவல் தருவதை தவிர்த்து நீங்க உங்க பழைய பாணியே பின்பற்றுங்கள். காங்கேயம் பி.நந்தகுமார்

    ReplyDelete
  10. மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  11. சிறப்பான இடுகை..!

    பயனுள்ள தகவல்களை அள்ளி வழங்கும் உங்களுக்கு என் நன்றி ..!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  12. பயனுள்ள தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  13. மாணவன் கூறியது...
    மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்,

    ஊரில் உள்ள நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்

    தொடரட்டும் உங்கள் பணி

    நன்றி
    //
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. sir, please see this IDEA prepaid scheme and then tell that bsnl is best or worst..

    get an idea sim for rs.30 with Rs.30 talktime...recharge with rate cutter 53..it is valid for one year..then all mobile calls (to any mobile) will 30 paise/minute..50 paise/minute for landline..

    i think this is the best offer ever..
    //

    ஐடியா பற்றிய ஐடியா இல்லை நண்பரே..இது முற்றிலும் இலவசமே..6 மாதங்கள் வரை இலவசமாக பயன்படுத்தி பின்னர் வேண்டாம் என்றால் விட்டுவிடலாமே...
    தங்கள்வருகைக்கும்கருத்துக்கும் நன்றி நண்பரே..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. வெறும்பய கூறியது...
    நல்ல தகவல் அண்ணா.. ஆனால் எனக்கு இப்போது பயன் படாது.. ஊருக்கு போனதும் வாங்கிக்கிறேன்..


    நன்றி நண்பரே...அப்ப நீங்க ஊரில் இல்லையா...தங்கள் வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. யூர்கன் க்ருகியர் கூறியது...
    //then all mobile calls (to any mobile) will 30 paise/minute..50 paise/minute for landline..
    //

    தல,

    லோக்கல் அல்லது எஸ் டி டி அனைத்திற்கும் பொருந்துமா ?
    நன்றி
    ஃஃ

    உங்களுக்கு போன் செய்துதான் நான் அதை சோதித்துபார்க்கவேண்டும் சார்...
    தங்கள் வருகைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. யூர்கன் க்ருகியர் கூறியது...
    நன்றி நண்பரே ..
    வாங்க முயற்சிக்கிறேன்

    ம்...முதலில் வாங்கி போடுங்கள்.வருகைக்கு நன்றி. வாழ்கவளமுடன். வேலன்.

    ReplyDelete
  18. manasu கூறியது...
    velan, i have samsung Corby pro B5310. when i connect to GPRS thorugh bsnl, i was not able to read tamil.

    also can u please tell me how to connect my mobile to laptop to view net while i have GPRS live.

    mail id ankannan@gmail.com.
    ஃஃ
    உங்கள் மொபைல் சர்வீஸ் சென்டரில் கொடுங்கள். அதற்கான வழியை ஏற்படுத்தி தருவார்கள் சார். தங்கள வருகைக்கும்கருத்து்க்கும் நன்றி....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. தியாகராஜன் கூறியது...
    6 மாதங்கள் அல்லது 180 நாள் வரை
    ??????????????ஃஃ

    உங்களுக்கு தெரியாதா...? 6 மாதத்திற்கும் 180 நாட்களுக்கும வித்தியாசம் வரும்என்று ?
    வருகைககும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. தேடல் கூறியது...
    நல்ல பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்...


    நன்றி நண்பரே.்..தங்கள்வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன.

    ReplyDelete
  21. பி.நந்தகுமார் கூறியது...
    வேலன் அண்ணா இன்னைக்கு ரொம்ப எதிர்பார்ப்போடு இணையத்தை திறந்தேன். இடுக்கை விஜய் படம் மாதிரி கருத்து சொல்வதற்கு ஏதுவாக இல்லை. நீங்க இந்த மாதிரி தகவல் தருவதை தவிர்த்து நீங்க உங்க பழைய பாணியே பின்பற்றுங்கள். காங்கேயம் பி.நந்தகுமார்
    ஃஃ

    ஒரே மாதிரியான பதிவாக போட்டால் அப்புறம் யுர்கன்கருக்கியர்.PVS.manasu.தியாகராஜன்மற்றும் தேடல் போன்ற நண்பர்கள் தொகுதிபக்கமே வரமாட்டார்கள் நண்பரே்....
    தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  22. சே.குமார் கூறியது...
    மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.


    நன்றி குமார் சார்...தங்கள்வருகைக்கும் கருத்துககும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  23. தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை கூறியது...
    நன்றி!


    நன்றி தமிரே...வாழ்க வளமுடன்.
    வேலன.

    ReplyDelete
  24. தங்கம்பழனி கூறியது...
    சிறப்பான இடுகை..!

    பயனுள்ள தகவல்களை அள்ளி வழங்கும் உங்களுக்கு என் நன்றி ..!

    வாழ்த்துக்கள்!!
    ஃஃ

    நன்றி தங்கம் பழனி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  25. சாருஸ்ரீராஜ் கூறியது...
    பயனுள்ள தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    ஃஃ

    நன்றி சகோதரி..தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  26. இந்த ஒரு மாதமாக இணைய இணைப்பு தொடர்ச்சியாகக் கிடைக்காமல் அறுந்து விடுவதாக நான் செய்த புகாருக்கு அளவே இல்லை.இதுவரை என்னவென்று ஒரு பய விசாரிக்கவில்லை.

    இந்தலட்சணத்தில் மேலும் மேலும் இவர்களிடம்...???

    சும்மா கொடுத்தாலும் இதன் மூலம் எதாவது மோசடி செய்து காசு பார்ப்பதுடன்,ந்ம்மையும் தனியாரை நோக்கி ஒட வைக்கும் உத்தியைச் செய்த் கொண்டெ இருப்பார்கள்

    ReplyDelete
  27. No need for telephone
    bill also. Last date fixed in Tamil nadu circle is 15 12 10.

    ReplyDelete
  28. வானவன் யோகி கூறியது...
    இந்த ஒரு மாதமாக இணைய இணைப்பு தொடர்ச்சியாகக் கிடைக்காமல் அறுந்து விடுவதாக நான் செய்த புகாருக்கு அளவே இல்லை.இதுவரை என்னவென்று ஒரு பய விசாரிக்கவில்லை.

    இந்தலட்சணத்தில் மேலும் மேலும் இவர்களிடம்...???

    சும்மா கொடுத்தாலும் இதன் மூலம் எதாவது மோசடி செய்து காசு பார்ப்பதுடன்,ந்ம்மையும் தனியாரை நோக்கி ஒட வைக்கும் உத்தியைச் செய்த் கொண்டெ இருப்பார்கள்
    //
    உங்களுக்கு ஏற்பட்ட ப்ரச்சனை திருச்சி நண்பர் ஞானசேகரனுக்கும் ஏற்பட்டது. பார்க்கவேண்டியவங்களை பார்த்தவுடன் இப்போது அருமையாக வேலைசெய்கின்றதாம்...நீங்களும் பார்க்கவேண்டியவங்களை பாருங்கள்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  29. rvj கூறியது...
    No need for telephone
    bill also. Last date fixed in Tamil nadu circle is 15 12 10.


    தங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே...எங்கள் பகுதியில் இம்மாதம் 31-12-2010 வரை அறிவித்துள்ளார்கள்..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete