Sunday, January 30, 2011

வேலன்-எனது பார்வையில் முதல் இடம்.

சில மாதங்களாக எனது மனதிற்குள் பெரும் குழப்பம்.எனது பதிவு மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா? அதனால் மற்றவர்கள் உண்மையிலேயே பயனடைகின்றார்களா ? தொழில்நுட்பம் என்னும் சிறிய வட்டத்தித்திற்குள் நம்பதிவுகளை போடுவதா, ? மருததுவம் - கல்வி -போட்டோஷாப் -தொழில்நுட்பம் என எல்லாதரப்பு மக்களும் பயனடையும் பதிவுகளை பதிவிடுவதா?

தொழில்நுட்பத்தில் பல ஜாம்பவான்கள் இருக்கையில் என்னாலும் முதல் இடம் பிடிக்க முடியும் என இந்த மாதம் ஆரம்பத்தில் முதல் இடம் பிடித்துவிட்டேன்.அதற்கான ஸ்கிரீன்ஷாட் கீழே-
ஜீலை மாதம் என்னுடைய பிளாக் 5 வது இடத்தில் இருந்தது. 

ஆகஸ்ட் மாதம் திரு.பிரபு அவர்கள் வெளியிட்ட பாராட்டு கீழே-
எந்த பதவியில் இருந்தாலும் முதல் இடத்தில் இருக்கும் போதே விலகிவிடுவதுதான் சிறந்தது. நிரந்தர முதல்வர் போல் இந்த இடம் நிரந்தரமாக பிடிக்கும் ஆவல் எனக்கு இல்லை.இந்த இடம் தக்கவைத்துக்கொள்ள நான் தொழில்நுட்ப பதிவுமட்டும்தான் போடவேண்டும். மருத்துவம் - கல்வி--தொழில்நுட்பம் - அரசு சார்ந்த பதிவுகள் -போட்டோஷாப் -அனிமேஷன் - என பலவிஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியாது.(இதன் காரணமாக நான் வெளியிட்ட முந்தைய தொழில்நுட்பம் இல்லா பதிவுகள் சுமார் 25 பதிவுகளை நான் நிறுத்தி வைத்துள்ளேன் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்).பல தரப்பட்ட வாசகர்களும் எனது பதிவிற்கு வருகின்றார்கள்.அவர்கள் வெறும் தொழில்நுட்பத்திற்காக மட்டும் வருவதில்லை. என்னிடம் பல புதிய விஷயங்களை எதிர்பார்க்கின்றார்கள்.நண்பர்களுக்குள் போட்டி -பொறாமை வரக்கூடாது .புதியவர்கள் இந்த இடத்தை தாராளமாக பிடித்துக்கொள்ளட்டும்.எனக்கு தெரிந்த விஷயங்களை -தொழில்நுட்பங்களை -தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலிலேயே எனது சொந்த செலவில் பதிவிட்டுவருகின்றேன்.போகும் போது என்ன கொண்டுபோகபோகின்றோம் - ஒன்றுமில்லை.....இணைய உலகத்தில் வேலன் என்கின்ற பெயர் அனைவரின் மனதில் இருந்தால் அதுவே எனக்கு போதும்.அதனால் இனி வரும் பதிவுகளில் 90 சதவீதம் தொழில்நுட்பத்துடனும் 10 சதவீதம் இதர தகவல்களுடன் பதிவிடவுள்ளேன்

இந்த பதிவினால் யார்மனதாவது புண்பட்டிருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும்.எனது இந்த முடிவுக்கு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.எனது பதிவுலக பயணம் தொடர அது உதவும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



49 comments:

  1. மாப்ள...இன்னா நீங்கோ டகால்டி வேல காம்சிகினுகீரீங்கோ? நீங்கோ இன்னாத்த போட்டாலும் அத்து ஹிட்டு தான் மாப்ஸ். இன்னா வேணாலும் எய்திகினுங்கோ நம்க்கு இன்னா ?? அல்லாரும் வந்து பட்சிகினுதான் போய்கினுகீராங்கோ.ஆக்காங்!! அய்ய.....மற்ந்து பூட்ச்சி....அது இன்னாரா ரான்க்கு? அலெக்சா வா.... அத்து இன்னா எழவோ ...நம்க்கு அது பத்தி ஒன்னும் தெர்ராது. அத்தெல்லாம் உங்கள மேரிக்கி படா படா ஆளுங்கோ தான் மேர்சலாயிகினு கீறீங்கோ. நாம இன்னா பில்லாகா பசங்கோ.இன்னாத்துக்கு அது பத்தி ஒர்ரி. சரி மாப்ஸ் முன்னாலக்கி வந்ததுக்கா ஒரு பார்டி வையுங்கோ கண்ணு. இன்னா சரியா??

    ReplyDelete
  2. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  3. //போகும் போது என்ன கொண்டுபோகபோகின்றோம் - ஒன்றுமில்லை.....இணைய உலகத்தில் வேலன் என்கின்ற பெயர் அனைவரின் மனதில் இருந்தால் அதுவே எனக்கு போதும்.///

    நிச்சயமாக உங்களால் பயனடைந்தோர் இணைய உலகில் பலர் உள்ளனர் “வேலன்” என்ற பெயர் என்றுமே அனைவர் மனதிலும் நீங்கா இடம்பெற்றிருக்கும் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள் நாங்கள் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. //அதனால் இனி வரும் பதிவுகளில் 90 சதவீதம் தொழில்நுட்பத்துடனும் 10 சதவீதம் இதர தகவல்களுடன் பதிவிடவுள்ளேன்//

    உங்கள் விருப்பபடியே பதிவிடுங்கள் பலதரப்பட்ட நண்பர்களும் பயன்பட வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் போற்றுதலுக்குறியது, எனவே தொடர்ந்து எங்கள் ஆதரவும் ஊக்கமும் உங்களுக்கு உண்டு

    ReplyDelete
  5. உங்கள் மாம்ஸ் கக்கு-மாணிக்கம் ஐயாவோட கமெண்ட் சூப்பர் சென்னை செந்தமிழில் அசத்துகிறார்.இதை பார்க்கும்போது “அதே கண்கள்” நண்பர் டவுசர் பாண்டியின் ஞாபகம் வருகிறது.நன்பரை பார்த்தால் நலம் விசாரித்ததாக சொல்லவும்

    ReplyDelete
  6. //எனது பதிவுலக பயணம் தொடர அது உதவும்.வாழ்க வளமுடன்.
    வேலன்.//

    பதிவுலகில் பலரும் பயன்பெறுகின்ற பயனுள்ள சிறப்பான பணியை செய்து வரும் உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. அனைத்து தளங்களிலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இப்போதே அனைவர்க்கும் தெரிந்தவராகி விட்டீர்கள்.இனிமேல் அலெக்ஸா ரேங்கைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் பணியை தொடருங்கள்.எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.

    ReplyDelete
  9. எதிர்காலத்தில் தரவரிசைக்கு திரும்பிவருவதற்கு தயங்கவேண்டாம்.

    ReplyDelete
  10. வாவ்! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. "எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய் பொருள் கான்பது அறிவு."

    அதுபோல

    வேறு எந்த பதிவை படித்தாலும் எங்களுக்கு உங்கள் பதிவே உயர்வு.

    நீங்கள் நீங்களாகவே இருங்கள் வேலன். வானவில்லுக்கு போதும் எழு நிறம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  13. நல்ல முடிவுதான் வேலன் சார்.
    முதல் இடம் நமக்கே வேண்டும் என்பதைவிட பலரின் மனதில் இடம் பிடித்தாலே போதும் என்பதே சிறப்பானது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. என் பெயர் வெங்கடேஷ்

    வேலன் நண்பரே நீங்கள் எல்லாவிதமான (ஜனரஞ்சகமான)பதிவுகளை போடவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்.தினமும் தங்கள் வலைப்பக்கம் வந்து இன்று என்ன புதுமையான பதிவு போட்டிருக்கிறீர்கள் என்று பார்க்காமல் போனால் அன்று என்னவோ போல் இருக்கும் என்றென்றும் உங்களின் ரசிகன்.

    ReplyDelete
  15. //இனி வரும் பதிவுகளில் 90 சதவீதம் தொழில்நுட்பத்துடனும் 10 சதவீதம் இதர தகவல்களுடன் பதிவிடவுள்ளேன்//

    நல்லது வாழ்த்துகள் சார்...

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  16. பதிவுலகில் பலரும் பயன்பெறுகின்ற பயனுள்ள சிறப்பான பணியை செய்து வரும் உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....

    ReplyDelete
  17. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. முஹம்மது நியாஜ்January 31, 2011 at 10:18 PM

    இந்த வேலன் அவர்களின் சுய நலமில்லாத அனைத்து பணிகளுக்கு அந்த பழனி மலை வேலன் துனைபுரியட்டும்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்

    ReplyDelete
  19. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பது போல் தொடரட்டும் உஙகள் சேவை

    ReplyDelete
  20. வேலன் ஸார்

    வணக்கம். உங்களது இந்த பதிவு பார்த்ததும் எனக்குள் ஆயிரம் சிந்தனைகள்.தொழில்நுட்பத்திற்காக இந்த வலைப்பூவும் உங்கள் சீரிய சிந்தனைகளை வெளியிட தனியாக ஒரு வலைப்பூவும் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.அலெக்ஸா ரேங்க் என்பது உங்களது பதிவுகளின் தரத்தை அளவிட உதவும் அளவுகோல் அல்ல.அதை பற்றி கவலைப்படாமல் உங்களது பதிவுகளை தொடர்ந்து உங்கள் எண்ணம் போல் வெளியிடவும்.உங்களை எங்களிடம் அறிமுகப்படுத்தியதும் அதிக வாசகர்கள் கொண்டவராக மாற்றியதும் தொழில்நுட்ப பதிவுகளே.எனவே கால ஓட்டத்தில் தொழில்நுட்ப பதிவுகள் போட மறக்க வேண்டாம்.சட்டம் பற்றிய பதிவுகள் போட விருப்பம் இருந்தால் போடவும்.ஏனெனில் சட்ட விழிப்புணர்வுகள் பற்றிய பதிவுகள் அதிக அளவில் இணைய வலைப் பூக்களில் அழகு தமிழில் காணப்படவில்லை.நன்றி

    ReplyDelete
  21. வேலன் சார்,
    வணக்கம்,
    எங்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்த பின் "அலெக்ஸா ரேங்க்"
    எதற்கு.எங்கள் ஆதரவு என்றும் தொடரும்.

    வாழ்த்துக்கள்,

    வாழ்க வளமுடன்,

    அன்புடன்,
    S.ரவிசங்கர்,திருச்சி

    ReplyDelete
  22. உங்கள் எண்ணம்போல் செய்யவும்,அதை தனி சிறப்புடன் செய்வீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. அய்யா! வரும் பிப்ரவரி 09 அன்று திருமாகறல் சிவன் கோவிலில் கோடி ஏற்றம் மற்றும் மாசி மகம் திருவிழா பத்து நாட்கள் நடைபெற உள்ளது. தங்கள் அவசியம் கலந்து கொள்ளவும்.

    ReplyDelete
  24. 500 வது பதிவுக்கு வாழ்த்துகள் சார்.
    அலெக்சா தரவரிசையை கணக்கில் கொள்ளவேண்டும் என்பது முக்கியமில்லை.
    அது விளம்பரங்கள் வைத்து சம்பாதிப்பவர்களுக்கு தான். நமக்கெல்லாம் அலெக்சா ரேங்க்
    ஒன்றும் போனஸ் இல்லை. ஆனால் 90 சதம் தொழில்நுட்பம் மற்றும் 10 சதம் பிறவற்றை எழுதுவதே
    சிறந்ததாக நினைக்கிறேன். மேலும் சாய்தாசன் அவர்கள் பதிவுகளில் 90 சதம் எழுதினாலே அவற்றை தொழில்நுட்ப
    பதிவுகளாக அங்கீகரிக்க வேண்டும்.

    ஏன் என்றால் தொழில்நுட்பம் மட்டுமே எழுதவேண்டும் என்று சட்டமும் இல்லை. எதாவது ஒரு பதிவு வாழ்த்த வேண்டியிருக்கும்.
    நம்மை தூண்டிய நிகழ்ச்சி, அனுபவம் இப்படி பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். அதனால் 90 சதம் தொழில்நுட்பம் எழுதுபவர்களையும்
    தொழில்நுட்ப வலைப்பூ என்று தான் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு வந்தேமாதரம் போன்றவர்கள்.
    சாய்தாசன் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  25. வேலன் சார் ஆஸ்கார் அவார்டு கிடைக்காதானால கமல் ஒரு நல்ல நடிகர் இல்லை என்பது அர்த்தம் இல்லை.குறிப்பு சினிமாத்துறையில் (நான் யாருடைய ரசிகனும் இல்லை) நடிப்பில் சிவாஜிக்கு அடுத்த படி நம்ம கமல் தான்.இது உலகறிந்த உண்மை.அது போல் அலெக்சா ரேங்க் ஒரு பொருட்டே இல்லை .மென்மேலும் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.பலதரப்பட்ட பதிவுகளை பதிவிடுபவர்தான் என்னை பொறுத்த வரை உண்மையான சிறந்த பதிவர்.தொழில்நுட்ப பதிவு என்பது மிகசிறந்தது,ஆனால் அது ஒரு தனது சொந்த சிந்தையில் தோன்றிய பதிவு கிடையாது.இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.இது எனது சொந்த கருத்து.இதை நீங்கள் முழுதும் ஏற்று கொள்ளவேண்டியது இல்லை.உங்கள் இறுதி முடிவே நல்லது.வாழ்க தமிழ்.

    ReplyDelete
  26. வா...ழ்...த்...து...க்...க...ள்.
    முதலிடம் பெற்றதற்கு. பழனி முருகன் துணையும்,அருளும் கிடைக்கட்டும்.
    அரவரசன்

    ReplyDelete
  27. கக்கு - மாணிக்கம் said...
    மாப்ள...இன்னா நீங்கோ டகால்டி வேல காம்சிகினுகீரீங்கோ? நீங்கோ இன்னாத்த போட்டாலும் அத்து ஹிட்டு தான் மாப்ஸ். இன்னா வேணாலும் எய்திகினுங்கோ நம்க்கு இன்னா ?? அல்லாரும் வந்து பட்சிகினுதான் போய்கினுகீராங்கோ.ஆக்காங்!! அய்ய.....மற்ந்து பூட்ச்சி....அது இன்னாரா ரான்க்கு? அலெக்சா வா.... அத்து இன்னா எழவோ ...நம்க்கு அது பத்தி ஒன்னும் தெர்ராது. அத்தெல்லாம் உங்கள மேரிக்கி படா படா ஆளுங்கோ தான் மேர்சலாயிகினு கீறீங்கோ. நாம இன்னா பில்லாகா பசங்கோ.இன்னாத்துக்கு அது பத்தி ஒர்ரி. சரி மாப்ஸ் முன்னாலக்கி வந்ததுக்கா ஒரு பார்டி வையுங்கோ கண்ணு. இன்னா சரியா?ஃஃ

    ரொம்ப ரொம்ப டாங்க்ஸ்பா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  28. மாணவன் said...
    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்//

    மாணவன் said...
    //போகும் போது என்ன கொண்டுபோகபோகின்றோம் - ஒன்றுமில்லை.....இணைய உலகத்தில் வேலன் என்கின்ற பெயர் அனைவரின் மனதில் இருந்தால் அதுவே எனக்கு போதும்.///

    நிச்சயமாக உங்களால் பயனடைந்தோர் இணைய உலகில் பலர் உள்ளனர் “வேலன்” என்ற பெயர் என்றுமே அனைவர் மனதிலும் நீங்கா இடம்பெற்றிருக்கும் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள் நாங்கள் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்...

    வாழ்க வளமுடன்//

    //அதனால் இனி வரும் பதிவுகளில் 90 சதவீதம் தொழில்நுட்பத்துடனும் 10 சதவீதம் இதர தகவல்களுடன் பதிவிடவுள்ளேன்//

    உங்கள் விருப்பபடியே பதிவிடுங்கள் பலதரப்பட்ட நண்பர்களும் பயன்பட வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் போற்றுதலுக்குறியது, எனவே தொடர்ந்து எங்கள் ஆதரவும் ஊக்கமும் உங்களுக்கு உண்டு//
    உங்கள் மாம்ஸ் கக்கு-மாணிக்கம் ஐயாவோட கமெண்ட் சூப்பர் சென்னை செந்தமிழில் அசத்துகிறார்.இதை பார்க்கும்போது “அதே கண்கள்” நண்பர் டவுசர் பாண்டியின் ஞாபகம் வருகிறது.நன்பரை பார்த்தால் நலம் விசாரித்ததாக சொல்லவும்//
    //எனது பதிவுலக பயணம் தொடர அது உதவும்.வாழ்க வளமுடன்.
    வேலன்.//

    பதிவுலகில் பலரும் பயன்பெறுகின்ற பயனுள்ள சிறப்பான பணியை செய்து வரும் உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....

    வாழ்க வளமுடன்//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்..தங்களின் ஆதரவுக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  29. Rajasurian said...
    அனைத்து தளங்களிலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள.

    நன்றி ராஜசூர்யன் சார்...
    வாழ்த்துக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்

    ReplyDelete
  30. சேலம் தேவா said...
    இப்போதே அனைவர்க்கும் தெரிந்தவராகி விட்டீர்கள்.இனிமேல் அலெக்ஸா ரேங்கைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் பணியை தொடருங்கள்.எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.ஃஃ

    நன்றி தேவா சார்...உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  31. ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) said...
    எதிர்காலத்தில் தரவரிசைக்கு திரும்பிவருவதற்கு தயங்கவேண்டாம்ஃஃ

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சார்...தொடர்ந்து உங்கள ஆதரவை வேண்டி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  32. Chitra said...
    வாவ்! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்ஃஃ

    நன்றி சகோதரி..வாழ்ததுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  33. Speed Master said...
    வாழ்த்துக்கள்ஃஃ

    நன்றி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  34. ♠புதுவை சிவா♠ said...
    "எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய் பொருள் கான்பது அறிவு."

    அதுபோல

    வேறு எந்த பதிவை படித்தாலும் எங்களுக்கு உங்கள் பதிவே உயர்வு.

    நீங்கள் நீங்களாகவே இருங்கள் வேலன். வானவில்லுக்கு போதும் எழு நிறம்.

    வாழ்க வளமுடன்ஃ

    நன்றி சிவா சார்..அருமையாக கருத்தினை வெளியிட்டுள்ளீர்கள.தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  35. சே.குமார் said...
    நல்ல முடிவுதான் வேலன் சார்.
    முதல் இடம் நமக்கே வேண்டும் என்பதைவிட பலரின் மனதில் இடம் பிடித்தாலே போதும் என்பதே சிறப்பானது.
    வாழ்த்துக்கள்ஃ

    நன்றி குமார் சார்..உங்கள் ஆதரவுக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  36. Anonymous said...
    என் பெயர் வெங்கடேஷ்

    வேலன் நண்பரே நீங்கள் எல்லாவிதமான (ஜனரஞ்சகமான)பதிவுகளை போடவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்.தினமும் தங்கள் வலைப்பக்கம் வந்து இன்று என்ன புதுமையான பதிவு போட்டிருக்கிறீர்கள் என்று பார்க்காமல் போனால் அன்று என்னவோ போல் இருக்கும் என்றென்றும் உங்களின் ரசிகன்ஃ

    நன்றி வெங்கடேஷ் சார்..தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  37. ஆ.ஞானசேகரன் said...
    //இனி வரும் பதிவுகளில் 90 சதவீதம் தொழில்நுட்பத்துடனும் 10 சதவீதம் இதர தகவல்களுடன் பதிவிடவுள்ளேன்//

    நல்லது வாழ்த்துகள் சார்...

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்ஃஃ

    நன்றி ஞர்னசேகரன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  38. Anonymous said...
    பதிவுலகில் பலரும் பயன்பெறுகின்ற பயனுள்ள சிறப்பான பணியை செய்து வரும் உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பல.ஃஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  39. katrukolpavan said...
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்ஃ

    நன்றி நண்பரே்..தங்கள் வருகைக்கும வாழ்ததுககும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  40. முஹம்மது நியாஜ் said...
    இந்த வேலன் அவர்களின் சுய நலமில்லாத அனைத்து பணிகளுக்கு அந்த பழனி மலை வேலன் துனைபுரியட்டும்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்ஃ

    நன்றி முஹம்மது நியாஜ் சார்...தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  41. தங்கராசு நாகேந்திரன் said...
    "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பது போல் தொடரட்டும் உஙகள் சேவைஃ

    நன்றி தங்கராசு நாகேந்திரன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  42. kumariyum kaniniyum said...
    வேலன் ஸார்

    வணக்கம். உங்களது இந்த பதிவு பார்த்ததும் எனக்குள் ஆயிரம் சிந்தனைகள்.தொழில்நுட்பத்திற்காக இந்த வலைப்பூவும் உங்கள் சீரிய சிந்தனைகளை வெளியிட தனியாக ஒரு வலைப்பூவும் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.அலெக்ஸா ரேங்க் என்பது உங்களது பதிவுகளின் தரத்தை அளவிட உதவும் அளவுகோல் அல்ல.அதை பற்றி கவலைப்படாமல் உங்களது பதிவுகளை தொடர்ந்து உங்கள் எண்ணம் போல் வெளியிடவும்.உங்களை எங்களிடம் அறிமுகப்படுத்தியதும் அதிக வாசகர்கள் கொண்டவராக மாற்றியதும் தொழில்நுட்ப பதிவுகளே.எனவே கால ஓட்டத்தில் தொழில்நுட்ப பதிவுகள் போட மறக்க வேண்டாம்.சட்டம் பற்றிய பதிவுகள் போட விருப்பம் இருந்தால் போடவும்.ஏனெனில் சட்ட விழிப்புணர்வுகள் பற்றிய பதிவுகள் அதிக அளவில் இணைய வலைப் பூக்களில் அழகு தமிழில் காணப்படவில்லை.நன்றிஃஃ

    நன்றி நண்பரே..தங்கள் வருகைககும் நீண்ட கருத்துககும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  43. S.ரவிசங்கர் said...
    வேலன் சார்,
    வணக்கம்,
    எங்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்த பின் "அலெக்ஸா ரேங்க்"
    எதற்கு.எங்கள் ஆதரவு என்றும் தொடரும்.

    வாழ்த்துக்கள்,

    வாழ்க வளமுடன்,

    அன்புடன்,
    S.ரவிசங்கர்,திருச்சிஃ

    நன்றி ரவிசங்கர் சார்.தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  44. மச்சவல்லவன் said...
    உங்கள் எண்ணம்போல் செய்யவும்,அதை தனி சிறப்புடன் செய்வீர்கள்.வாழ்த்துக்கள்ஃ

    நன்றி மச்சவல்லவன் சார்...
    தங்கள் வருகைக்கும் கருத்துககு்ம் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  45. krish2rudh said...
    அய்யா! வரும் பிப்ரவரி 09 அன்று திருமாகறல் சிவன் கோவிலில் கோடி ஏற்றம் மற்றும் மாசி மகம் திருவிழா பத்து நாட்கள் நடைபெற உள்ளது. தங்கள் அவசியம் கலந்து கொள்ளவும்ஃஃ

    தகவலுக்கு நன்றி நண்பரே..நேரம் இருப்பின் கலந்துகொள்கின்றேன்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  46. பொன்மலர் said...
    500 வது பதிவுக்கு வாழ்த்துகள் சார்.
    அலெக்சா தரவரிசையை கணக்கில் கொள்ளவேண்டும் என்பது முக்கியமில்லை.
    அது விளம்பரங்கள் வைத்து சம்பாதிப்பவர்களுக்கு தான். நமக்கெல்லாம் அலெக்சா ரேங்க்
    ஒன்றும் போனஸ் இல்லை. ஆனால் 90 சதம் தொழில்நுட்பம் மற்றும் 10 சதம் பிறவற்றை எழுதுவதே
    சிறந்ததாக நினைக்கிறேன். மேலும் சாய்தாசன் அவர்கள் பதிவுகளில் 90 சதம் எழுதினாலே அவற்றை தொழில்நுட்ப
    பதிவுகளாக அங்கீகரிக்க வேண்டும்.

    ஏன் என்றால் தொழில்நுட்பம் மட்டுமே எழுதவேண்டும் என்று சட்டமும் இல்லை. எதாவது ஒரு பதிவு வாழ்த்த வேண்டியிருக்கும்.
    நம்மை தூண்டிய நிகழ்ச்சி, அனுபவம் இப்படி பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். அதனால் 90 சதம் தொழில்நுட்பம் எழுதுபவர்களையும்
    தொழில்நுட்ப வலைப்பூ என்று தான் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு வந்தேமாதரம் போன்றவர்கள்.
    சாய்தாசன் இதை கருத்தில் கொள்ள வேண்டும்ஃஃ

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  47. PalaniWorld said...
    வேலன் சார் ஆஸ்கார் அவார்டு கிடைக்காதானால கமல் ஒரு நல்ல நடிகர் இல்லை என்பது அர்த்தம் இல்லை.குறிப்பு சினிமாத்துறையில் (நான் யாருடைய ரசிகனும் இல்லை) நடிப்பில் சிவாஜிக்கு அடுத்த படி நம்ம கமல் தான்.இது உலகறிந்த உண்மை.அது போல் அலெக்சா ரேங்க் ஒரு பொருட்டே இல்லை .மென்மேலும் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.பலதரப்பட்ட பதிவுகளை பதிவிடுபவர்தான் என்னை பொறுத்த வரை உண்மையான சிறந்த பதிவர்.தொழில்நுட்ப பதிவு என்பது மிகசிறந்தது,ஆனால் அது ஒரு தனது சொந்த சிந்தையில் தோன்றிய பதிவு கிடையாது.இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.இது எனது சொந்த கருத்து.இதை நீங்கள் முழுதும் ஏற்று கொள்ளவேண்டியது இல்லை.உங்கள் இறுதி முடிவே நல்லது.வாழ்க தமிழ்ஃஃ

    தங்களின் நீண்ட கருத்துக்கும வாழ்த்துககும் நன்றி சார்..வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  48. NAGA said...
    வா...ழ்...த்...து...க்...க...ள்.
    முதலிடம் பெற்றதற்கு. பழனி முருகன் துணையும்,அருளும் கிடைக்கட்டும்.
    அரவரசன்ஃஃ

    நன்றி அரவரசன் சார்...
    வாழ்ததுக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  49. வணக்கம் வேலன் சாh;.

    தங்களின் 500வது பதிப்பிற்கு வாழ்த்துக்கள்
    தங்கள் இணைய சேவைப்பணி தமிழ் உலகத்திற்கு தொடர வாழ்த்துக்கள்
    500வது பதிப்பிற்கு பின் தங்களின் REVIEW நியாயமானதே
    ரேங்க்கை பற்றி எண்ணாமல் தங்களின் இயல்பிலேயே வலைப்பதிவிட்டால் தங்களுக்கு உயா;ந்த அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமுமில்லை.
    வாழ்த்துக்கள்.
    நன்றி
    பாலா

    ReplyDelete