Monday, June 27, 2011

வேலன்-கர்சரில் கெடிகாரம் கொண்டுவர

சிலர் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடுவார்கள்.நேரம் அவர்களுக்கு அவ்வளவு முக்கியம்.ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு அவசியம். டாக்ஸ்பாரில் கடிகாரம் இருந்தாலும் டெக்ஸ்டாப்பில் இருந்து பார்வையை திருப்பவேண்டும் அல்லவா,?அவர்களுக்காகவே கர்சர் முனையிலேயே கடிகாரம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அவர்களுக்காகவே இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுககு அதற்கான ஐ-கான் டாக்ஸபாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கெடிகாரம் நிறத்தையும் நேரத்தின் அளவினையும் நாம் முடிவு செய்யலாம். அதைப்போலவே செகண்ட் டையும் கர்சருக்கு வலது -இடது புறத்தையும் முடிவு செய்யலாம்.எழுததுரு போல்ட் ஆக தேவையென்றாலும் அதனையும் நாம் அமைத்து்ககொள்ளலாம். இனி நீங்கள் எந்த அப்ளிகேஷன் திறந்தாலும் கர்சர் கூடவே உங்களுக்கு நேரம் வந்துகொண்டே இருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
கர்சரிலேயே கடிகாரம் வைத்துக்கொண்டு நாமும் பிஸியாக ஆகிவிடலாம்  இல்லையா? நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


7 comments:

  1. மிகவும் அழகாக உள்ளது! நன்றி வேலன்!

    ReplyDelete
  2. அருமை........அருமை.... நல்ல பதிவு.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. ஈகரை தமிழ் களஞ்சியம் said...
    மிகவும் அழகாக உள்ளது! நன்றி வேலன்!
    //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  4. S.ரவிசங்கர் said...
    அருமை........அருமை.... நல்ல பதிவு.

    வாழ்க வளமுடன்
    ஃஃ

    நன்றி ரவிசங்கர் சார்...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. சே.குமார் said...
    அருமை.

    நனறி குமார் சார்..
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. மிகவும் உபயோகமான தகவலை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி வேலன்!

    ReplyDelete