Friday, July 22, 2011

வேலன்-கடித முகவரிகளை சுலபமாக பிரிண்ட் செய்ய

பக்கம் பக்கமாக கடிதம் தட்டச்சு செய்து எழுதுவோம்...ஆனால் முகவரி மட்டும் கையில் எழுதுவோம். வேர்டில் அதற்கான செட்டிங்ஸ் இருந்தாலும் நமக்கு பொறுமை இருப்பதில்லை. அந்த குறையை போக்க இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 1 எம்.பி.க்கும் குறைவான அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் From அட்ரஸ்பாரில் நமது பெயரும் To வில் அனுப்புவரது பெயர்களும் தட்டச்சு செய்துவிடவும். முழு முகவரி தட்டச்சு செய்து முடித்ததும் சேவ் கொடுக்கவும்.உங்களுக்கு To என்பதின் கீழே உள்ள Name பாக்ஸின் கடைசியில் உள்ள சின்ன கட்டத்தை கிளிக் செய்ய உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள்கொடுத்த பொறுநரது முகவரி இருக்கும்.தேவையான முகவரியை செலக்ட் செய்தால் முதல் பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்ளும்.
 From  கடட்தத்தில உங்களது முகவரியும் To கட்டத்தில் பெறுநருடைய முகவரியையும் தட்டச்சு செய்து சேவ் கொடுங்கள். இதனைப்போல நீங்கள் எவ்வளவு முகவரி தட்டச்சு செய்கின்றீர்களோ அனைத்தையும் தட்டச்சு செய்து சேவ் செய்துகொள்ளுங்கள். 
யாருக்கு கடிதம் அனுப்ப போகின்றீர்களோ அப்போது இந்த அப்ளிகேஷனை திறந்துகொண்டு பெறுநருடைய கட்டத்தில் உள்ள சிறிய கட்டத்தினை கிளிக் செய்கையில் நீங்கள் உள்ளீடு செய்த அனைத்து முகவரிகளும் தெரியும். தேவையானதை செலக்ட் செய்து பின்னர் நேரடியாக பிரிண்ட் கொடுத்துக்கொள்ளலாம்.பிரிண்டரின் அளவினையும் செட் செய்துகொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



8 comments:

  1. முகவரிகள் பிரிண்டிங் முறையை அழகாக சொல்லியுள்ளீர்கள்.. நன்றி

    ReplyDelete
  2. மாய உலகம் said...
    முதல் வாசகன்
    //

    நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  3. dharumaidasan said...
    THANK U VERY MUCH SIRஃஃ

    நன்றி தருமைதாசன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  4. சே.குமார் said...
    Arumaiyana pakirvu... pakirvukku nanri.
    ஃஃ

    நன்றி குமார் சார்....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. THANK YOU FOR ADRESS PRINT IT IS VERY USEFUL TO ME

    ReplyDelete