Tuesday, August 16, 2011

வேலன்-உடனடியாக இ- மெயில் அனுப்ப

வழக்கமாக நாம் மெயில் அனுப்புகையில் எந்த வகை மெயில் அனுப்புகின்றோமோ அந்த மெயிலின் இணைய பக்கம் சென்று மெயில் ஓப்பன் செய்து மெயில் அனுப்புவோம். ஆனால் நீங்கள் எந்த மெயில அனுப்புவதாக இருந்தாலும் இந்த சாப்ட்வேர் மூலம் எளிதில் அனுப்பிவிடலாம். 40 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஓப்பன் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில நீங்கள் அனுப்புகின்றவரின இ-மெயில முகவரி,சப்ஜெக்ட்,மெசேஜ்,அட்டச்மெண்ட் என மெயில் அனுப்ப கூடிய அனைத்து விவரங்களையும் இதிலும் இணைக்கலாம். அடுத்து நீங்கள் கீழே உள்ள அம்புகுறியை கிளிக் செய்ய உங்களுடைய இமெயில் அக்கவுண்ட் கேட்கும். நீங்கள் கொடுத்து ஒ.கே. கொடுத்ததும் உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அவ்வளவுதான். நொடியில் உங்களுக்கு இமெயில் சென்றுவிடும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

7 comments:

  1. அன்பரே!
    என் வலை வந்தீர் !
    கருத்துரைத் தந்தீர்!
    வணக்கம் வாழ்த்து நன்றி!

    கணினி பற்றிய ஆய்வுகள்
    தருவதை அறிந்தேன் என்னைப்
    போன்ற, இத்துறையில் அதிக
    அனுபவமற்றவர்களுக்கு மிகவும்
    பயன் தரும் ஒன்று
    தொடர்ந்து வருவேன், தாங்களும்
    வருக.

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. NIZAMUDEEN said...
    New & usefull information.
    Thank you.
    ஃஃ

    நன்றி நிஜாமுதீன்சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  3. புலவர் சா இராமாநுசம் said...
    அன்பரே!
    என் வலை வந்தீர் !
    கருத்துரைத் தந்தீர்!
    வணக்கம் வாழ்த்து நன்றி!

    கணினி பற்றிய ஆய்வுகள்
    தருவதை அறிந்தேன் என்னைப்
    போன்ற, இத்துறையில் அதிக
    அனுபவமற்றவர்களுக்கு மிகவும்
    பயன் தரும் ஒன்று
    தொடர்ந்து வருவேன், தாங்களும்
    வருக.

    புலவர் சா இராமாநுசம்
    //

    நன்றி இராமநுசம் சார்...தங்கள் ்வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  4. Priya said...
    நல்ல தகவல்!
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com
    ஃஃ

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. வணக்கம் நான் இன்றுதான் முதன்முறையாக உங்கள்
    தளத்திற்கு வந்துள்ளேன் .அருமையான பயனுள்ள நல்ல தகவல்களை வழங்கிவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிகவும் பெருமைகொள்கின்றேன்.மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

    ReplyDelete
  6. அய்யா வொர்க் ஆகவில்லை . இப்படி வருகிறதுTHE APPLICATION FAILED TO INITIALIZE PROPERLY(0XCOOOO135)CLICK ON OK TO TERMINATE THA APPLICATION

    ReplyDelete