Wednesday, August 17, 2011

வேலன்-புகைப்படங்களின் அளவினை மொத்தமாக குறைக்க

சமீபத்தில் நண்பர் ஒருவர் நிறைய புகைப்படங்களை எடுத்துவந்திருந்தார்.அந்த புகைப்படங்களை நண்பர்களுக்கு இ-மெயிலில் அனுப்பவேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு புகைப்படங்களும் 15 எம்.பி.க்கு குறையாமல் இருந்தது. அனைத்தையும் அளவு குறைத்து அனுப்புவதென்றால் நேரம் அதிகமாவதுடன் சலிப்பும் ஏற்படும். அப்போதுதான இந்த சின்ன சாப்ட்வேரை உபயோகிக்க சொன்னேன். இன்று உங்களுக்கும் அறிமுகப்படுத்துகின்றேன்.2 எம்.பிக்கும் குறைவான இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.அப்போழுது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள +Add பட்டனை கிளிக் செய்துதேவையான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படம் தேர்வு செய்தவுடன் அதன் பிரிவியு பார்க்க அந்த புகைப்படத்தை தேர்வு செய்ய அதன் ப்ரிவியு கீழே தெரியும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போழுது புகைப்படம் எந்த பார்மெட்டுக்கு வரவேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள். அதைப்போலவே புகைப்பட டைட்டிலுக்கு எந்த பெயர் வைக்க வேண்டுமோ அந்த பெயரை தட்டச்சு செய்யுங்கள். புகைப்படத்திலும் வாட்டர்மார்க் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போழுது புகைப்படம் எந்த அளவில் வேண்டுமோ அந்த அளவினை தேர்வு செய்துகொள்ளுங்கள். மேலும் தம்ப்நெயில் வேண்டுமானாலும் அதனையும்தேர்வு செய்துகொள்ளலாம்.தம்ப்நெயில்படத்திற்கும் வாட்டர்மார்க் அமைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தவுடன் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இறுதியில் நீங்கள் எங்கு சேமித்து வைத்துள்ளீர்களோ அங்கு சென்று பார்த்தீர்களேயானால் அங்கு அளவு குறைக்கப்பட்ட உங்கள் புகைப்படங்கள் இருக்கும்.போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ள நண்பர்களுக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்அளிக்கும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

18 comments:

  1. நல்ல பயனுள்ள தகவல் நண்பரே

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு வேலன் சார்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. திரு வேலன் அவர்களுக்கு
    மிக்க நன்றி வேலன் அவர்களே, சமீபத்தில் இதை தான் தேடிகொண்டு இருந்தேன். கிடைத்துவிட்டது
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் நன்றி சகோ

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  6. Caesium ( http://caesium.sourceforge.net/) பாருங்களேன். ஒரிஜினல் படங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், ஆயிரம் படங்களானாலும் ஒரு நொடியில் மாற்றித் தரும் அருமையான மென்பொருள். மின்னஞ்சலில் ஒரு சில படங்களைத் தனித்தனியே அனுப்ப, shrinkpic ( http://www.onthegosoft.com/shrink_pic.htm ) மற்றுமொரு நல்ல மென்பொருள். இரண்டுமே முற்றிலும் இலவசம். அதிலும் இந்த shrinkpic windows துவங்கும்போதே அதுவும் துவங்கி, படங்களை இணைக்கும்போது, மின்னஞ்சல் என்று இல்லை, வேர்ட் பொன்ற எந்த அப்ளிகேஷனில் படங்கள் இணைத்தாலும் தானாகவே படங்களின் அளவைச் சுருக்கி அனுப்பி விடும். படங்களின் அளவு என்றால், 2 எம்பி என்பது 115 கேபி என்று மாறுமே தவிர, நீள அகலங்கள் மாறாது. எனவே பார்ப்பவர்களுக்கு எந்த வித்யாசமும் தெரியாது. பயன்படுத்திப் பாருங்கள்.

    ReplyDelete
  7. பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்!

    ReplyDelete
  8. பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமை

    ReplyDelete
  9. M.R said...
    நல்ல பயனுள்ள தகவல் நண்பரே

    பகிர்வுக்கு நன்றி//

    நன்றி ராஜேஷ் சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  10. சே.குமார் said...
    பயனுள்ள பகிர்வு வேலன் சார்.
    வாழ்த்துக்கள்.ஃஃ

    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. mdniyaz said...
    திரு வேலன் அவர்களுக்கு
    மிக்க நன்றி வேலன் அவர்களே, சமீபத்தில் இதை தான் தேடிகொண்டு இருந்தேன். கிடைத்துவிட்டது
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்
    ஃஃ

    நீங்கள் தேடுவது எனக்கு தெரிந்துவிட்டது. அதனால்தான்அதனை பதிவிட்டேன் சார்...இன்னும் ஏதாவது தேடிக்கொண்டிருந்தால்சொல்லுங்கள்.நானும் தேடிபார்க்கின்றேன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. மாய உலகம் said...
    பயனுள்ள தகவல் நன்றி சகோ
    ஃஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. mohan gandhi said...
    பயனுள்ள தகவல் நன்றி
    ஃஃ

    நன்றி மோகன் காந்தி சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  14. thiruthiru said...
    Caesium ( http://caesium.sourceforge.net/) பாருங்களேன். ஒரிஜினல் படங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், ஆயிரம் படங்களானாலும் ஒரு நொடியில் மாற்றித் தரும் அருமையான மென்பொருள். மின்னஞ்சலில் ஒரு சில படங்களைத் தனித்தனியே அனுப்ப, shrinkpic ( http://www.onthegosoft.com/shrink_pic.htm ) மற்றுமொரு நல்ல மென்பொருள். இரண்டுமே முற்றிலும் இலவசம். அதிலும் இந்த shrinkpic windows துவங்கும்போதே அதுவும் துவங்கி, படங்களை இணைக்கும்போது, மின்னஞ்சல் என்று இல்லை, வேர்ட் பொன்ற எந்த அப்ளிகேஷனில் படங்கள் இணைத்தாலும் தானாகவே படங்களின் அளவைச் சுருக்கி அனுப்பி விடும். படங்களின் அளவு என்றால், 2 எம்பி என்பது 115 கேபி என்று மாறுமே தவிர, நீள அகலங்கள் மாறாது. எனவே பார்ப்பவர்களுக்கு எந்த வித்யாசமும் தெரியாது. பயன்படுத்திப் பாருங்கள்.
    ஃஃ
    புதிய இரண்டு முகவரிகள் தந்ததற்கு நன்றி நண்பரே..இரண்டு சாப்ட்வேரினை பற்றி விரைவில் பதிவிடுகின்றேன்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  15. மாணவன் said...
    பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்!
    ஃஃ

    நன்றி சிம்பு சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன“்

    ReplyDelete
  16. Priya said...
    பயன்னுள்ள தகவல்!.
    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com
    ஃஃ

    நன்றி சகோதரி...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. palane said...
    பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமைஃஃ

    நன்றி பழனி சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  18. சார் மொபைல் போன் எண் எங்கு உள்ளது என்று பார்பதற்கு சாப்ட்வேர் உள்ளதா அப்படி இருந்தால் எங்களுக்கு தரவும் நன்றி

    ReplyDelete