Monday, October 31, 2011

வேலன்:-ஆறுதலுக்கு நன்றி...

எங்களது தந்தையின் மறைவுக்கு நேரிலும்-தொலைபேசியிலும் - பதிவின் மூலமும் ஆறுதல் சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
க.மூர்த்தி,க.சரவணன்,க.வேலன்.

கொஞ்சம் மனதினை ரிலக்ஸ் செய்துகொள்ள:- 


Saturday, October 22, 2011

வேலன்:-எங்கள் தந்தைக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி....



அப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்
வாழ்ந்த உங்களுக்கு எங்கள் ஊன் ,உடல் ,வாழ்க்கை,
மலராய் சமர்ப்பிக்கிறேன் !
நான் பிறந்தது முதல் தங்கள்
மூச்சுகாற்று-
19.10.2011 -பிரியும்வரை-எங்கள் சுவாசமாய்
வாழ்ந்த தந்தையே !
உங்களுக்கு எங்கள் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கின்றோம்!

ஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு
வாழவேண்டும் என்று முன்னுதாரனமாய்
நல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்கு
எங்கள் கண்ணீரை அஞ்சலியாக்குகின்றோம் .

நீங்கள் எங்களுக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல்,துன்பம் வரும்வேளையிலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் ,மற்றும்
அனேக விசயங்களை எங்கள் தோழனாய்
எங்கள் தோள்மீது
கை போட்டு கற்றுகொடுத்த
தந்தை எனும்
எங்கள்  உயிர் தோழனை நாங்கள் இழந்து தவிக்கிறோம் .

காற்றில் கலந்த எங்கள் உயிர் தோழனே !
உன்னை காற்றில் தேடி அலைகின்றோம் !
என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
இழப்பிற்கு பின் தான் உணர்ந்தோம் !
ஏனென்றால் எங்கள் தோள்கள் மீது பாரம்
ஒரு நாளும்
நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !

ஒளி நட்
த்திரமாய் வெளிச்சம் கொடுத்த உங்களை !
இறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை எங்கள் கைகளால்
அக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,
பூமி உருண்டை
எங்கள் கால்களை விட்டு விலகி சென்றது !
மறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்
பெற்றுகொண்டபோது எங்கள் மனம்
எரிமலையாய் அக்னி
பிழம்பாய்
வெடித்து சிதறியது .எங்களை மன்னிப்பீர்களா தந்தையே !



அடுத்தவேளை உணவுக்கு  வழியில்லாமல் வந்தவருக்கு உதவிட இடம்கொடுத்த உத்தமரே.இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கும் இனப்பிறவிகள் அவர்கள் என்பது உங்களுக்குபுரியாதது ஏன்?
நல்லவர்களை இறைவன் கைவிடுவதில்லை....நீதி இறுதியில் வெல்லும்.உங்கள் ஆன்மா நிம்மதி அடையட்டும்.

வாழ்நாளில் நாங்கள் அறியாமல் தவறு செய்திருந்தால்
எங்களை மன்னிக்கவும் ,
எங்களை விட்டு உடலால் பிரிந்தாலும்
எங்கள் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வோம்.
தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறோம்,,,,,,,,,,




அன்பு மகன்கள்.....
க.மூர்த்தி.
க.சரவணன்.
க.வேலன்.

Tuesday, October 18, 2011

வேலன்:-டாஸ்க்மேனேஜரை எளிதில் பார்க்க -மறையவைக்க

கம்யூட்டர் பணிக்கு அவசியமான தேவை டாஸ்க்மேனேஜர்..அவசர உதவிக்கு அதனை அழைதது பணி முடிக்கலாம். நாமே டாக்ஸ்மேனேஜரை மறைக்கலாம் - மீண்டும்கொண்டுவரலாம்.. 600 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Disable Task Manager கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் Yes கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Ok.கொடுத்துவிடுங்கள். இப்போது நீங்கள் டாக்ஸ்பாரில் சென்று பார்த்தால் உங்களுக்கு டாக்ஸ்மேனேஜர் மறைந்து இருக்கும். கீழே இருக்கும் விண்டோவில் பாருங்கள்.
இதனை மீண்டும் கொண்டுவர மீண்டும இந்த சாப்ட்வேரினை ஓப்பன் செய்து Enable Task Manager கிளிக் செய்தால் உங்களுக்கு டாக்ஸ்மேனேஜர் உபயோகத்திற்கு தெரியவரும்.பயன்படுத்திப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Sunday, October 16, 2011

வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் movavi free video converter

இணையத்தில் எவ்வளவோ வீடியோ கன்வர்டர்கள் கிடைக்கின்றன.சிலவற்றை காசு கொடுத்து வாங்கவேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும. ஆனால் இந்த வீடியோ கன்வ்ர்டர்  இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.movavi.com/adv/freemake-video-converter-review.html?utm_campaign=11142533411&utm_campaignid=11142533411&utm_adgroupid=131356210441&cq_src=google_ads&cq_cmp=11142533411&cq_con=131356210441&cq_term=freemake%20video%20converter&cq_med=&cq_plac=&cq_net=g&cq_pos=&cq_plt=gp&gclid=Cj0KCQjwldKmBhCCARIsAP-0rfzI3gQR4hEDcTkR41q6rL6_OGDWaND1GvkRSDgqYxcJEK9Br2bZkMwaAuRYEALw_wcB செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Video  பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம்.இதன் கீழேயே என்னற்ற பார்மெட்டுக்கள் உள்ளது.
நான் MKV பார்மெட்டினை தேர்வுசெய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வுசெய்துகொள்ளலாம்.
கன்வர்ட் செய்யக்கூடிய பார்மெட்டுக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆடியோ பைல்களுக்கான ஸ்கிரீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதிலிருந்து நாம் You tube தளத்திற்குநேரடியாக பதிவேற்றம்செய்துகொள்ளலாம்.. மேலும் நமது வீடியோவினை flv மற்றும் swf பைல்களாக மாற்றம்செய்துகொள்ளலாம்.மேலும் நாம் பார்க்கும் வீடியோவினை வலது இடமாகவும் - மேலும் கீழாகவும் மாற்றிக்கொள்ளலாம்.வழக்கமாக போட்டோவில்தான் நாம் இவ்வாறு மாற்ற முடியும்.இப்போது வீடியோவிலும் நாம் இதில் எளிதில் மாற்றிக்கொள்ள்லாம்.ஒரு முறை நீங்கள் இதனை பயன்படுத்தியவுடன் இதனை உங்கள் விருப்பமான சாப்ட்வேராக வைத்துக்கொள்வீர்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, October 14, 2011

வேலன்:-அழகிய தீவினை மீட்டுஎடுக்கலாம் வாங்க

ஓரு அழகிய தீவு.அதில் அரசர் ஒருவர் ஆட்சி செய்து வருகின்றார். ஒரு நாள் வில்லன் அவரை தந்திரமாக கொலைசெய்துவிடுகின்றான்..தீவினை அவன் கையப்படுத்திவிடுகின்றான். அந்த அரசருக்கு ஒரே ஒரு பெண்.இளவரசிக்கு நாம் உதவி செய்தவன் மூலம் தீவினை அவருக்கு மீட்டுகொடுக்கவேண்டும்.தீவுக்கு செல்லும் வழியில் நிறைய குளு இருக்கும். குளுவினை நாம் கண்டுபிடித்து ஒவ்வொரு நிலையாக செல்லவேண்டும். நிறைய புதிர்விளையாட்டுக்களும் உள்ளது:.விறுவிறுப்பான இந்த விளையாட்டு சற்று பெரியது.350 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்குகிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.








இளவரசியுடன சேர்ந்து ஒவ்வொரு குளுவாக கண்டுபிடித்து வில்லனை அழித்து தீவினை நாம் இளவரசியுடன் சேர்ந்து மீட்டுவிடுகின்றோமா இல்லையா என்பது விளையாட்டின் முடிவில்.....


விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, October 13, 2011

வேலன்:-டெக்ஸ்டாப் ரீமைண்டர்(Desktop-Reminder)

வண்டி சாவி-பேனா-கால்குலேட்டர்-என வைத்துவிட்டு தேடிக்கொண்டு இருப்பவர்கள் பலபேர்.ஞாபக மறதி அவ்வளவுஅதிகம் அவர்களுக்கு. அவர்கள் எப்படி குழந்தைகள் பிறந்தநாள்-திருமணநாள்-மனைவியின் பிறந்தநாள் போன்றவைகளை நினைவில் வைத்துக்கொள்ளப்போகின்றார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகவே டெக்ஸ்டாப் ரீமைண்டர் என்கின்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.13 எம்.பிகொள்ளளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
Photobucket


இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும்.அதனை கிளிக் செய்ய உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும்.இதனை பயன்படுத்தும் முறைகள் ஸ்கிரீன்ஷாட்டாக மேலே இணைத்துள்ளேன். 
இதன் பலன்களின் ஆங்கில தொகுப்புகீழே:-

Benefits for inexperienced users:
No need to input from/to, start/end time of day for a task,
12 month calendar with calendar weeks,
Task-notification up to few months ahead,
Automatic time formatting and first day of week, regarding Windows culture and region settings,
Easy install/uninstall
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
மேலும் விவரங்களுக்கு:-இங்குகிளிக் செய்யவும்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Tuesday, October 11, 2011

வேலன்:-ஹார்ட்வேர் பற்றி அறிந்துகொள்ள-Hardware Freak

புதியதாக கம்யூட்டர் வாங்கியவர்கள் அதில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்களை கண்டு மிரட்சியடைவார்கள். சிபியு,மதர்போர்ட்,பயாஸ்.ராம்.கிராப்பிக்ஸ்..சவுண்ட்கார்ட்.ஆப்ரடிங் சிஸ்டம்.,மவுஸ்,கீ-போர்ட்,நெட் ஒர்கிங்.பிரிண்டர் என விதவிதமான பெயர்கள் கேட்டு ஆச்சர்யமடைவார்கள். ஒவ்வொன்றின் விவரங்களையும் எளிதில் அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது.916 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் 5 விதமான பகுதிகள் இருக்கும். இதில் உள்ள Start கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் சிபியு,மதர்போர்ட்,பயாஸ் போன்ற் விவரங்கள் கிடைக்கும்.
அடுத்த லெவல்செல்ல உங்களுக்கு ராம் மெமரி,விவரங்களும் அடுத்த லெவலி; உங்கள் கம்யூட்டரில் உள்ள வீடியோ காரட்.சவுண்ட் காரட்மற்றும் ஸ்டோரெஜ் டிவைஸ் போன்ற விவரங்களும் அறிந்துகொள்ளலாம்.
அடுத்த லெவலில் உங்களுக்கு உங்கள் கணிணியில் நீங்கள் நிறுவியுள்ள ஆப்ரடிங் சிஸ்டம்;,ஆப்டிகல் மீடியா.கீபோர்ட் மற்றும் மவுஸ் விவரங்கள்அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புதியவர்களுக்கு மட்டும் அல்லாமல் கம்யூட்டர் பழுதுபார்ப்பவர்களுக்கும்இது பயன்படும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Monday, October 10, 2011

வேலன்:-வார்த்தைக்கு ஏற்றவாறு எக்ஸெல் செல்அளவை அதிகப்படுத்த


வேலன்:-வார்த்தைக்கு ஏற்றவாறு எக்ஸெல் செல்அளவை அதிகப்படுத்த
சிலநேரங்களில் நாம் எக்ஸெல்லில் பணிபுரிகையில் சில வார்த்தைகள் எக்ஸெல் செல்லைவிட அதிகமாக சென்றுவிடும்.சில மாறுதல்கள் நாம் எக்ஸெலில் செய்வதன் மூலம் நாம் செல்லுக்குள் டெக்ஸ்ட் வருமாற அமைத்துவிடலாம். அதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.;முதலில் எந்த வார்த்தையை செல்லில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அதனை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். நான் தமிழ்கம்ப்யூட்டர் என்னும் வார்ததையை தட்டச்சு செய்துள்ளேன்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
இப்போது தட்டச்சு செய்த செல்லை தேர்வு செய்துகொள்ளுங்கள். பின்னர் எக்ஸெல் மேற்புறம் உள்ள Format Cells தேர்வு செய்து அதில் Alignment என்கின்ற டேபினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Text Control என்பதின் கீழே உள்ள Wrap text,Shrink to fit,Merge cells என பிரிவுகளும் அதன் எதிரே மூன்று கட்டங்களும் இருப்பதை கவனியுங்கள்.


இப்போழுது ஒவ்வொரு கட்டத்தின் எதிரேயும் நீங்கள் டிக் மார்க் ஏற்படுத்த அதற்கேற்றவாறு செல்லில் உள்ள உங்கள் டெக்ஸ்ட் மாறுவதை கவனியுங்கள். உங்களுக்கு எந்த மாதிரியான அமைப்பு செல்லில் தேவைப்படுகின்றதோ அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.. இந்த அமைப்பு தேவையில்லையென்றால் மீண்டும் மேற்கண்ட வழிமுறையில் சென்று அதனை நீக்கிக்கொள்ளுங்கள்.இந்த வசதியினை பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Sunday, October 9, 2011

வேலன்:-ஆறுமொழிகளின் மொழிபெயர்ப்பை உடனடியாக அறிந்துகொள்ள

வேலன்:-ஆறுமொழிகளின் மொழிபெயர்ப்பை உடனடியாக அறிந்துகொள்ள
ஓரே சமயத்தில் நீங்கள் ஐந்துமொழிகளில் பொருட்களின் அர்த்தங்கள் அறிய வேண்டுமா? ரொம்ப சுலபம் 350 கே..பி. அள்வுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை இங்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் ஆங்கிலத்திற்கு எதிரில் உள்ள கட்டத்தில நீங்கள் விரும்பும் ஆங்கில சொல்லினை தட்டச்சு செய்யவும்.அதற்கு இணைய மற்ற மொழி சொற்கள் கீழே இடம்பெறுவதை காணுங்கள். நான்கம்யூட்டர் என தட்டச்சு செய்துள்ளேன்..
 சில சொற்கள் சரியான வார்ததைகளில் இல்லாதிருப்பின் அதற்கு இணையான ஆங்கில சொற்கள் உங்களுக்கு பாப்அப்மெனுவாக விரிவடையும்.தேவையான ஆங்கில சொல்லை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள் நான் velan என தட்டச்சு செய்துள்ளேன்.அது சரியான வார்த்தைஇல்லாததால் அந்த வார்த்தைக்கு இணையான சொற்கள் வந்துள்ளதை கவனியுங்கள்.
ஆங்கிலம் தவிர்த்து உங்களுக்கு இதர மொழிகள் தான் தெரியும் என்றால் இதில் உள்ள Source கிளிக் செய்து தேவையான மொழியை முதல் மொழியாக மாற்றிக்கொள்ளலாம்.
இனி நீங்கள் ஜெர்மெனி.ப்ரான்ஸ்.ஸ்பெனிஷ்.இட்டாலியன் ஆகிய மொழிகளில் வல்லவராவது நிச்சயம்.பயன்படுத்திப்பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

Friday, October 7, 2011

வேலன்:-மில்லியனர் விளையாட்டு

சில பதிவுகளுக்கு முன்னர் குரோர்பதி பற்றி பதிவிட்டிருந்தேன். இன்று அதைப்போலவே மில்லியனர் விளையாட்டினை காணலாம்.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதிலும் உங்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.அதற்கு 4 விதமான விடைகள் இருக்கும்.20 வினாடிக்குள் நீங்கள் சரியான பதிலை தேர்வு செய்யவேண்டும்.
 நீங்கள் தேர்வு செய்த விடை சரியானதுதானா உங்களை மீண்டும் கேட்கும்.Yes கொடுங்கள்.
உங்களுக்கான பரிசு தொகை உயர்ந்துகொண்டே செல்லும்.இதிலும் உங்களுக்கு மூன்றுவிதமான சான்ஸ் தருவார்கள்.அதன் மூலமும் சரியான விடையை தேர்வு செய்துகொள்ளலாம்.
விளையாடிப்பாருங்க்ள.பரிசுத்தொகையை வெல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Thursday, October 6, 2011

வேலன்:-நினைத்த எண்ணை கண்டுபிடிக்க.

யார் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என நமக்கு எப்படி தெரியும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் ஒன்றிலிருந்து ஐம்பத்திரண்டுக்குள் நாம் எந்த எண்ணை நினைத்துக்கொண்டு இருந்தாலும் இது கண்டுபிடித்து கொடுத்துவிடும். 300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 வரும் விண்டோவில் நீங்கள் நினைத்த எண் வருகின்றதா என்று பாருங்கள். எண் வந்தால் Yes என்றும் எண்வரவில்லையென்றால் No -கிளிக்செய்யவும்.
 உங்களுக்கு தொடர்நதுவரும் விண்டோவில் எண் வந்தால் யெஸ் என்றும் வரவில்லையென்றால் நோ என்றும் கிளிக் செய்யவும்.
 கடைசியாக நீங்கள் எந்த எண் நினைத்தீர்களோ அந்த எண் உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, October 5, 2011

வேலன்:-கோல்ப் விளையாட்டு

 கிரிக்கெட் விளையாட்டினை பார்த்தோம். இன்று கோல்ப் விளையாட்டினை பார்ககலாம்.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
.இதில் பந்து அருகில கர்சரை வைத்து குழிக்கு நேராக ஏரோ மார்க் வைத்து கிளிக் செய்யவேண்டும். பந்து நகர்ந்துசெல்லும் 
ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் எவ்வளவு ஸ்டோக்கில் பந்தினை குழியில் தள்ளுகின்றீர்களோ அந்த அளவு உங்களுக்கு பாயிண்ட கிடைக்கும்.
மொத்தம் 18 லெவல் உள்ளது. இறுதியில் நீங்கள் எவ்வளவு ஸ்கோர் எடுத்துள்ளீர்கள் என அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Tuesday, October 4, 2011

வேலன்:-ஆற்றை கடக்க உதவுங்களேன்(Solve Game)

மூளைக்கு கொஞ்சம் அல்ல நிறையவே வேலைகொடுக்கும் விளையாட்டு இது.மிகவும் சிறிய விளையாட்டாக 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் மொத்தம் 5 நபர்கள் இருப்பார்கள். அவர்கள் பாலத்திற்கு அந்தப்புரம் இருப்பார்கள்.. அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே ஓரு விளக்குதான் இருக்கும். அந்த விளக்கு மொத்தம் 30 வினாடிகள் தான் எரியும். அதற்குள் இங்குள்ள அனைவரும் கரையின் மறுபக்கம் சென்றுவிடவேண்டும்.பாலத்தினை கடக்க இருவர் செல்லவேண்டும். ஆனால் ஒருவர் உடன்செல்பவரை விட்டுவிட்டு மீண்டும் மறுபக்கம் வந்துவிடவேண்டும்.
ஒவ்வொரு மனிதர்களும் பாலத்தை கடக்கும் நேரம் அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.இருவரை தேர்வு செய்து அடுத்த கரைக்கு கொண்டு சென்று விடவேண்டும்.
 நடுவழியில் 30 வினாடிகள் கடந்துவிட்டால் விளக்கு அணைந்துவிடும்.பாலத்தில் செல்பவர்கள் தண்ணீரில் விழுந்துவிடுவார்கள்.
 மீண்டும் விளையாட ஆரம்பிக்கவேண்டும்.
முதல் இரண்டுரவுண்ட் விளையாட ஆரம்பித்துவிட்டவுடன் நமக்கு டென்ஷன் ஆரம்பித்துவிடும்.விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.