சில நேரங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை PDF பைல்களாக மாற்றும் தேவை ஏற்படலாம். அந்த சமயங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை எளிதாக பிடிஎப் பைல்களாக மாற்றி மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். 236 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Files உங்கள் புகைப்படங்களை தேர்வு செய்யவும். அடுத்து மேலே உள்ள Unit Measure --ல் உங்கள் புகைப்படத்திற்கான அலகை தேர்வு செய்யவும்.இதனை நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை Output Path -ல் குறிப்பிடவும்.புகைப்படங்கள் உங்களுக்கு தனிதனி பிடிஎப் பைல்களாக வேண்டுமா-அல்லது ஓரே பிடிஎப் பைலாக வேண்டுமா என தேர்வு செய்யுங்கள்.மார்ஜின் பார்டர் முதல்கொண்டு பேப்பர் அளவு வரை நாம் அமைத்துக்கொள்ளலாம்.மேலும் பிடிஎப் பைலில் நமது புகைப்படம் நடுவில் வரவேலன்டுமா அல்லது ஒரத்தில் வரவேண்டுமா என்பதனையும் தேர்வு செய்து இறுதியில் Save PDF கிளிக் செய்யவும. நொடியில் உங்கள் புகைப்படம் ரெடி.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.கீழே நான் இணைத்துள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.
PDF Output
வாழ்க வளமுடன்
வேலன்.
Excellent .......
ReplyDeleteநான்கைந்து படங்களைக் கூட இணைக்குமென்பதும், பார்டர் முதற்கெண்டு நாம் தேர்வு செய்யும் சுதந்திரமும் அருமை. நல்லதொரு மென்பொருள் பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteANGOOR said...
ReplyDeleteExcellent .......//
நன்றி சார்...
வாழக்வளமுடன்
வேலன்.
கணேஷ் said...
ReplyDeleteநான்கைந்து படங்களைக் கூட இணைக்குமென்பதும், பார்டர் முதற்கெண்டு நாம் தேர்வு செய்யும் சுதந்திரமும் அருமை. நல்லதொரு மென்பொருள் பகிர்விற்கு நன்றி.ஃஃ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ்சார்...
வாழக்வளமுடன்
வேலன்...