Wednesday, February 1, 2012

வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்.

திருக்கழுக்குன்றத்தில் நண்பகலில் மலைமீது இரண்டு கழுகுகள் தினமும் வந்து உணவருந்தி செல்லும்.அதன் காரணமாகவே ஊருக்கு திருக்கழுக்குன்றம் என பெயர் வந்தது. புகைப்படம் மூலமே இதுவரை கண்டு களித்தவர்கள் இந்த வீடியோ மூலம் கழுகுகள் வந்து உணவருந்தும் காட்சியை கண்டு ரசிக்கலாம்.வீடியோ கேமரா அவ்வளவாக வராத காலத்திலேயே இந்த வீடியோவினை எடுத்து வைத்துள்ளார்கள்.இந்த வீடியோவினை காலத்தால் அழியாத இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் வரும் சந்ததியினரும் இதன் அருமையை அறிந்துகொள்ளலாம்.சில பதிவுகள் நமக்கு பூரண மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். இந்த வீடியோவினை பதிவிடுவதில் நான் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் அடைகின்றேன்.





வீடியோவினை கண்டு களித்தவர்களுக்கும் வீடியோ உதவிய calicocentric நண்பரருக்கும் மனமார்ந்த நன்றி .


வாழ்க வளமுடன்
வேலன்.

8 comments:

  1. my grandparents native place is thirukalukkundram but i have never seen the eagles eating .thanks for posting.

    ReplyDelete
  2. சிந்திப்பவன்February 2, 2012 at 11:46 AM

    நன்றி வேலன் சார்!
    இரண்டு நிமிடங்கள் ஓடும இந்த வீடியோ பதிவில் ஐந்து வினாடிகள் கழுகுகள் காட்சிதருகின்றன.மீதி நேரம் எல்லாம் பிரசாதம் விற்கப்படும் காட்சிகளே!!எனவே இதற்கு பொருத்தமான தலைப்பு "திருக்கழுக்குன்றம்-பக்தர்கள் பிரசாதம் வாங்கும் அரிய வீடியோ காட்சிகள்"

    ReplyDelete
  3. அன்புள்ள அண்ணா ,
    அருமையான தகவல் .நல்ல காட்சிகள்.
    நன்றி ,
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  4. nalla pathivu... but, Gurukkal super aa business panranga... ithellam oru polappa....

    ReplyDelete
  5. ஸோமநாதன் said...
    my grandparents native place is thirukalukkundram but i have never seen the eagles eating .thanks for posting//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. சிந்திப்பவன் said...
    நன்றி வேலன் சார்!
    இரண்டு நிமிடங்கள் ஓடும இந்த வீடியோ பதிவில் ஐந்து வினாடிகள் கழுகுகள் காட்சிதருகின்றன.மீதி நேரம் எல்லாம் பிரசாதம் விற்கப்படும் காட்சிகளே!!எனவே இதற்கு பொருத்தமான தலைப்பு "திருக்கழுக்குன்றம்-பக்தர்கள் பிரசாதம் வாங்கும் அரிய வீடியோ காட்சிகள்"ஃஃ

    இந்த வீடியோ ஆங்கிலேயர் ஒருவரால் எடுக்கப்பட்டிருக்கும் என எண்ணுகின்றேன். அவர் பார்வையில் பிரசாதம் வாங்கும்காட்சி அதிசயமாக இருந்திருக்கலாம்.அதனால் அதனை அதிகநேரம் படம்பிடித்திருக்கின்றார்..இதில் கழுகுகள் உணவருந்தும் அரிய காட்சியைதான் காணவேண்டுமேதவிர மற்றதை பொருட்படுத்தவேண்டாமே...தங்கள் வருகைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. sakthi said...
    அன்புள்ள அண்ணா ,
    அருமையான தகவல் .நல்ல காட்சிகள்.
    நன்றி ,
    நட்புடன் ,
    கோவை சக்திஃஃ

    நன்றி சக்தி சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  8. RAJESH KANNAN said...
    nalla pathivu... but, Gurukkal super aa business panranga... ithellam oru polappa....ஃஃ

    கழுகுகள் வந்து உணவருந்தினால்தான் அவருக்கு வருமானம்...கழுகுகள் வராதசமயம் யோசித்துப்பாருங்கள்..
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete