Sunday, February 12, 2012

வேலன்:-விரும்பியவாறு ஸ்கிரீன்ஷாட் எடுக்க

பதிவுலக நண்பர்களுக்கு. மாணவர்களுக்கு ஸ்கிரீன்ஷாட் இன்றியமையாத தேவையாகும். முழு ஸ்கிரீனோ - அல்லது தேவையான அளவிலோ நாம் ஸ்கிரீன்ஷாட் மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யலாம். வேண்டிய பார்மாட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம். 300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முழுதிரையோ அல்லது தேவையான அளவு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள். தேவையான அளவினை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு சிகப்பு நிற கட்டம் வரும். அதில் கர்சரை வைத்து ஒரங்களை நகர்த்துவது மூலம் உங்களுக்கு தேவையான அளவினை நிர்ணயித்துக்கொள்ளலாம்.JPG.PNG.BMP என் எந்த பார்மெட்டில் புகைப்படம் வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்துகொள்ளலாம். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.AREA மூலம் நான் தேர்வு செய்த புகைப்படம் கீழே:-

நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

6 comments:

  1. மிகமிகப் பயன்படக் கூடிய ஒரு மென்பொருள்! நன்றி வேலன்!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு அண்ணா
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  3. கணேஷ் said...
    மிகமிகப் பயன்படக் கூடிய ஒரு மென்பொருள்! நன்றி வேலன்!ஃஃ

    வாங்க கணேஷ் சார்..நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  4. sakthi said...
    நல்லா இருக்கு அண்ணா
    நட்புடன் ,
    கோவை சக்திஃஃ

    நன்றி சக்தி சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. இந்த பதிவு தேவயாக உள்ளது

    நன்றி!

    screen video எடுப்பது எப்படி-

    ReplyDelete
  6. அண்ணா அங்கு அந்த மென்பொருள் இல்லை , நீங்கள் கொடுக்கும் சிறந்த மென்பொருள் The file link that you requested is not valid. என்று வருகிறது....

    ReplyDelete