Thursday, April 26, 2012

வேலன்:-கம்யூட்டர் துவங்குகையில் உள்ளதை அறிந்துகொள்ள உதவும் சாப்ட்வேர்.

அதிகபடியான சுமை கொடுத்து ஒருவரை மலைஏறச்சொன்னால் மிகவும் சிரமப்பட்டு மலையேறுவார். ஆனால் அவருக்கே கொஞ்சமாக சுமைகொடுத்து ஏற சொன்னால் விறுவிறு என்று ஏறிவிடுவார்.அதுபோல நமது கம்யூட்டர் ஆன்ஆகும் சமயம் அதிகப்படியான ப்ரேகிராம்களை ஸ்டார்ட்அப்பில் வைத்தால் நமது கம்யூட்டர் ஆன்ஆகவே சற்று நேரம் எடுக்கும். அதனை தவிர்த்து அவசியமானவையை மட்டும் நாம் ஸ்டார்அப்பில் கொண்டுவரலாம்.நீங்கள் கம்யூட்டரில் நன்கு பழகியவராக இருந்தால் -Start -Run -msconfig--தட்டச்சு செய்து கீழ்கண்ட விண்டோவில் ஸ்டாப்அப் ப்ரோகிராம்களை கண்ட்ரோல் செய்யலாம்.   
 ஆனால் புதியவர்களுக்கு இந்த பணியினை குறைக்க ஒரு சின்ன சாப்ட்வேர் வந்துள்ளது. கே.பி. அளவில் உள்ள அதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை ரன் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உங்கள் கம்யூட்டரில் நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்களை ஸ்டார்ட்அப்பில் வைத்துள்ளீர்களோ அந்த அப்ளிகேஷன்கள் விவரம் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் எது தேவையோ அதை மட்டும்வைத்துக்கொண்டு தேவையில்லாததை நீங்கள் எளிதில நீக்கிவிடலாம். மேலும் அந்த அப்ளிகேஷன் எந்த நிறுவனத்தை சார்ந்தது - அதன்கொள்ளளவு என்ன -என மொத்த விவரமும் அதில் அறிந்துகொள்ளலாம்.
தேவையில்லாததை எளிதில நீக்கி ஒருமுறை கம்யூட்டரை நீங்கள் ரீ-ஸ்டார்ட் செய்தால் உங்கள் கம்யூட்டர் விரைந்து ஓப்பன் :ஆகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

6 comments:

  1. ரொம்ப உபயோகமானது அண்ணா

    அன்பு தம்பி ,
    கோவை சக்தி

    ReplyDelete
  2. DEAR MR.VELAN
    THANK U FOR YOUR USEFUL MESSAGE.
    RAVI,ERODE.

    ReplyDelete
  3. நண்பர் வேலன் அவர்களே உங்களின் தளத்தில் இருக்கும் ஆக்கங்களை எனது வெற்றிப் பாதை என்ற தளத்திலும் வெளி இடுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். naladakkam.blogspot.com

    ReplyDelete
  4. sakthi said...
    ரொம்ப உபயோகமானது அண்ணா

    அன்பு தம்பி ,
    கோவை சக்திஃஃ

    நன்றி சக்தி சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. Ravi chandran said...
    DEAR MR.VELAN
    THANK U FOR YOUR USEFUL MESSAGE.
    RAVI,ERODE.ஃஃ

    நன்றி ரவிசந்திரன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. வெற்றிப் பாதை said...
    நண்பர் வேலன் அவர்களே உங்களின் தளத்தில் இருக்கும் ஆக்கங்களை எனது வெற்றிப் பாதை என்ற தளத்திலும் வெளி இடுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். naladakkam.blogspot.com

    நன்றி நண்பரே...கம்யூட்டர் - சாப்ட்வேர் பற்றி மேலும் பலர் அறிந்துகொள்வதில் மகிழ்ச்சியே....
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete