Thursday, November 22, 2012

வேலன்:-சிடிமற்றும் டிவிடி டோர் கார்ட்


சிலர் சிடி டிரைவினை சாப்ட் ஆக கையாள்வார்கள்.சிலர் எடுத்தேன் கவிழ்தேன் என்று கரடுமுரடாக கையாள்வார்கள் .இதனால் சில சமயம் சிடி டிரைவில சிக்கிகொண்டு வெளியில் வராமல் தகராறு செய்யும்.சிறிய பின்கொண்டு டிரைவில் உள்ள துளையில் அழுத்தி சிடியை வெளியில் கொண்டுவருவார்கள்.குழந்தைள் வீட்டில் சொலலவே வேண்டாம். எனது நண்பர் ஒருவர் வீட்டில் உள்ள குழந்தை தீபாவளி சமயத்தில் சிடிட்ரேயில் அதிரசத்தை போட்டு உள்ளே தள்ளிவிட்டது...டிரைவ் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். இந்த சிக்கல்களை தீர்க்க சிறிய் சாப்ட்வேர் வந்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு  கிளிக் செய்யவும்.




இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில் கெடிகாரத்திற்கு அடுத்து இதனுடைய ஐகான் வந்து அமர்ந்துகொள்ளும். இதில் உள்ள Lock Device கிளிக்செய்ய உங்களுடைய சிடிடிரைவ் ஆனது லாக் ஆகிவிடும். மீண்டும் நீங்கள் டிரைவினை Unlock செய்தால்தான் டிரைவ் ஆனது திறக்கும். அதேப்போல ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ் இருந்தால் குறிப்பிட்ட டிரைவினை நாம் லாக் செய்திட முடியும். அதேப்போல நாம் இதில் உள்ள Close Device,Open Device  கிளிக் செய்து நாம் டிரைவினை திறக்க முடியும்.இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



 தேவையான ஆப்ஷனை கிளிக் செய்து ஓ.கே.தரவும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

6 comments:

  1. சிக்கல் ஆவதுண்டு...

    தீர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. கையாலே கழட்டி எடுத்துருக்கிறேன் !புதிய வரவு வராவேட்போம்!

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன் said...
    சிக்கல் ஆவதுண்டு...

    தீர்வுக்கு நன்றி...//

    நன்றி தனபாலன் சார்...பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்.அவசரத்திற்கு உதவும்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  4. Srini Vasan said...
    கையாலே கழட்டி எடுத்துருக்கிறேன் !புதிய வரவு வராவேட்போம்!ஃஃ

    சாப்ட்வேர்களால் முடியாதபட்சத்தில் உங்கள் பாணியைகடைபிடிக்கவும். தங்கள் வருகைக்கும் கருத்துதக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. மதிபிற்குறிய வேலன் சேர் அவர்கற்கு நான் பதிவு செய்த டிவிடியை வேறொருவர் கொப்பி செய்து வியாபாரம் செய்துவிட்டார் ஆகவே நாம் ஒரு டிவிடி ரெகார்ட் செய்தால் அது டிவிடி பிலேயரில் மட்டுமே ப்லை ஆகவேண்டும் மீண்டும் அதனை கொப்பி செய்ய இயலாதபடி ரேகொர்ட் பண்ண முடியுமா அதற்கு என்ன சொப்ட்வேர் பயன்படுத்த வேண்டும் தயவு செய்து உதவிசெய்யுங்கள் உங்கள் பதிலை எதிர்பார்கின்றேன்
    அன்புடன்
    குமரன்
    சவூதி

    ReplyDelete
  6. மதிபிற்குறிய வேலன் சேர் அவர்கற்கு நான் பதிவு செய்த டிவிடியை வேறொருவர் கொப்பி செய்து வியாபாரம் செய்துவிட்டார் ஆகவே நாம் ஒரு டிவிடி ரெகார்ட் செய்தால் அது டிவிடி பிலேயரில் மட்டுமே ப்லை ஆகவேண்டும் மீண்டும் அதனை கொப்பி செய்ய இயலாதபடி ரேகொர்ட் பண்ண முடியுமா அதற்கு என்ன சொப்ட்வேர் பயன்படுத்த வேண்டும் தயவு செய்து உதவிசெய்யுங்கள் உங்கள் பதிலை எதிர்பார்கின்றேன்
    அன்புடன்
    குமரன்
    சவூதி
    my mail ID kk38274@gmail.com

    ReplyDelete