Thursday, February 21, 2013

வேலன்:-கீபோர்ட் டிரேசர்.

நாம் கீபோர்ட்டில் எந்த கீ யை அழுத்தினாலும் எந்த அப்ளிகேஷனை திறந்து என்ன தட்டச்சு செய்தாலும் அது அப்படியே நாம் குறிப்பிடும் இடத்தில் பதிவு ஆகிவிடும். நாம் இல்லாதபோது நமது கம்யூட்டரில் யார் என்ன பணி செய்தாலும் நமக் குதெரிந்துவிடும. 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். 

இதில் உள்ள பற்சற்கரம் போன்ற ஐகானை கிளிக் செய்து ரீகார்ட் செய்யும் டாக்குமெண்ட் எந்த இடத்தில் சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். இதில் உள்ள சிகப்பு நிற ரிக்காரட் பட்டனை கிளிக் செய்து ரேக்கார்டினை ஆரம்பிக்கவும்.தேவையில்லாதபோது இதில் உள்ள ஸ்டாப் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இப்போது நீங்கள் சேமித்த வைத்திருந்த இடத்தில் சென்று பார்த்தீர்களே யானால் உங்களுக்கான கீபோர்டின் டிரேசர் காப்பி இருக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒரு சாப்ட்வேரில் எவ்வளவுக்எவ்வளவு வசதிகள் உள்ளதோ அந்த அளவு ஆபத்தும் அதில் அடங்கிஉள்ளது. ப்ரவ்சிங் சென்டர்களில் சில விஷமிகள் இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தி உங்கள் அந்தரங்க தகவல்களை பாஸ்வேர்டகளை அறிந்துகொள்ளும் ஆபத்தும் உள்ளது.எனவே வெளியிடங்களுக்கு செல்கையில் எச்சரிக்கை தேவை...
பயன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

1 comment:

  1. சார், உங்களது தளத்திலுள்ள விடயங்கள் யாவுமே அருமையான பதிவுகள்.. வாழ்த்துக்கள் உங்களது தளத்தின் வெற்றிக்கு..உனக்ளது தளத்தை முகநூலில் பின்தொடர்வது எப்படி? facebook subscribe பண்ண முடியுமா?? நன்றிகள்.

    ReplyDelete