Monday, February 11, 2013

வேலன்:-பாண்ட்களை சுலபமாக சேர்க்க -நீக்க

போட்டோஷாப்.டிடிபி.வேர்ட்,எக்ஸெல் என பாண்ட்களை எங்கு எங்கு உபயோகிக்கின்றோமோ அந்த இடங்களில் இந்த பாண்ட் லோடர் மிகவும் பயன்படும். விதவிதமான பாண்ட்களை விரும்புகின்றவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துவிடுவார்கள். மொத்தமாக பாண்ட்கள் சேர்ந்து அவசரத்திற்கு ஒரு டிசைன் கிரியேட்டிவ் செய்யவேண்டுமானால் நாம் அனைத்து பான்ட்களையும் ப்ரிவியு பார்க்கவேண்டும். ஆனால் அதனை தவிர்த்து தேவையானபோது மட்டும் பாண்ட்டை அப்லோடு செய்து பயன்படுத்திவிட்டு கையோடு அதனை அன்இன்ஸ்டால் செய்துவிடலாம்.இதனை நமக்கு ஹார்டிஸகில் தேவையில்லாத பைல்கள் சேர்வதை தடுக்கலாம். 200 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள செலக்ட்பாண்ட் கிளிக் செய்து உங்களுக்கான பாண்ட்டை தேர்வு செய்யுங்கள். அடுத்து இதில் உள்ள லோடு பாண்ட் கிளிக் செய்யுங்கள்.உங்களது பாண்ட்ஆனது சி டிரைவில் சென்று அமர்ந்துகொள்ளும். உங்கள் பணியை செய்துமுடியுங்கள். அடுத்து உங்கள் அனைத்து வேலைகளும் முடிந்தபின் இந்த சாப்ட்வேரினை மீண்டும் கிளிக்  செய்து உங்களுக்கான பாண்டை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள அன்லோடு பாண்ட்ஸ் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவீல் பாருங்கள்.

உங்களது பாண்ட் சிடிரைவிலிருந்து நீக்கியபின் உங்களுக்கு கீழ்கண்ட தகவல் வரும்.


நீங்கள் இன்ஸ்டால் செய்த பாண்ட்; ஆனது இப்போது காணாமல் போய்இருக்கும். இந்த வசதி உள்ளதால்  நாம் அதிகபடியான பாண்ட்களை பயன்படுத்த முடியும்.சுலபமாக இன்ஸ்டால் செய்யலாம். வேலை முடிந்ததும் அன்இன்ஸ்டால் செய்யலாம்.பயன்படுத்திப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

10 comments:

  1. அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே

    எனது தளம்
    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு... நன்றி...

    ReplyDelete
  3. இனிய நண்பரே! எழுத்துக்களை உரிய முறையில் உபயோகிக்கும் முறையினைப் போலவே ஒலிப்பதிவுகளை பல்வேறு பார்மேட்டுக்களில் உள்ளத்தினை நமது கணனியோ அல்லது கைபேசியோ தக்க முறையில் மாற்றி அமைத்துக் கேட்கத் தக்க வகையில் ஏதுனும் மென்பொருள் உள்ளதா? அறிய ஆவலாயுள்ளேன். இருப்பின் அறிமுகப் படுத்தவும்!! மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் !! எதிர்பார்ப்புடன் கே எம் தர்மா..

    ReplyDelete
  4. si va said...
    அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே

    எனது தளம்
    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    நன்றி சிவா சார்..தகவலுக்கு நன்றி..வாழ்க வளமுடன். வேலன்.

    ReplyDelete
  5. திண்டுக்கல் தனபாலன் said...
    பயனுள்ள பகிர்வு... நன்றி...ஃஃ நன்றி தனபாலன் சார்.. வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  6. அ.குரு said...
    Good Tips velan sirஃஃ நன்றி குரு சார்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  7. krishnamoorthy dharmalingam said...
    இனிய நண்பரே! எழுத்துக்களை உரிய முறையில் உபயோகிக்கும் முறையினைப் போலவே ஒலிப்பதிவுகளை பல்வேறு பார்மேட்டுக்களில் உள்ளத்தினை நமது கணனியோ அல்லது கைபேசியோ தக்க முறையில் மாற்றி அமைத்துக் கேட்கத் தக்க வகையில் ஏதுனும் மென்பொருள் உள்ளதா? அறிய ஆவலாயுள்ளேன். இருப்பின் அறிமுகப் படுத்தவும்!! மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் !! எதிர்பார்ப்புடன் கே எம் தர்மா..

    இதுபற்றி நிறைய பதிவிட்டுள்ளேன் சார்..எனது முந்தைய பதிவினை பார்த்தேலே உங்கள் தேவைகள் அனைத்துன் நிறைவேறிவிடும். உங்களு்காக சில லிங்குகளை இணைத்துள்ளுன்.பயன்படுத்திப்பாருங்கள். http://velang.blogspot.com/2010/06/blog-post_07.html http://velang.blogspot.com/2012/07/blog-post_31.html கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  8. குட் போஸ்ட் தேங்க்ஸ் வேலன் சார்

    ReplyDelete
  9. stalin wesley said...
    குட் போஸ்ட் தேங்க்ஸ் வேலன் சார்

    நன்றி ஸ்டாலின் வெஸ்லி..தங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete