Thursday, March 14, 2013

வேலன்:-இணைய இணைப்பை துண்டிக்க

இணைய இணைப்பை துண்டிக்கவும் மீண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இணைப்புகொடுக்கவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாஸ்க்பாரில் கெடிகாரம் பக்கத்தில் இதனுடைய ஐ -கான் அமரந்துகொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் உள்ள Turn off the internet கிளிக் செய்திட உங்கள் இணைய இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் இணைப்பு தேவைப்படுகின்றது என நினைத்தால் அந்த குறிப்பிட்ட நேரத்தினை செட்செய்துகொள்ளவும்.கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் உள்ள Settings கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது இணைய இணைப்பிற்கு நீங்கள் பாஸ்வேர்ட்  கொடுத்து்க்கொள்ளலாம். மீண்டும் நீங்கள் பாஸ்வேரட்கொடுத்தால் தான் இணைய இணைப்பு  பெற முடியும்.
இதன் மூலம் நீங்கள் வெளியில் சென்றுள்ள சமயம் வேறு யாராவது உங்கள் இணைய இணைப்பினை தவறாக பயன்படுததுவதை தடுக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.                           வாழ்க வளமுடன்                                                                                                                            வேலன்.

4 comments: