Friday, April 5, 2013

வேலன்:-கார்ட்ரேக்கவரி.Card Recovery

தவறுதலாக அழிந்துவிட்ட பைல்களை மீட்டுஎடுக்க் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  https://www.cardrecovery.com/செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் உள்ள Next கிளிக் செய்திட உங்களுக்கு அடுத்த விண்டோ ஓப்பன் :ஆகும். இதில் எதிலிருந்து தகவல்கள் எடுக்க விரும்புகின்றோமோ அதனை தேர்வு செய்யவும். உதாரணத்திற்கு பென்டிரைவ்,ஹார்ட்டிரைவ்.மெமரி கார்ட் என எதுதேவையோ அதனுடைய டிரைவ் லெட்டரை  தேர்ந்தெடுக்கவும். இதில் போட்டோ -வீடியோ -ஆடியோ எதுவேண்டுமோ அதனை கிளிக் செய்திடவும்.

 எங்கு சேமிக்கவிரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்திடுங்கள்.நீங்கள் சேமிக்கவிரும்பும் இடம் அதிககொள்ளளவு காலி இடமாக இருத்தல்வேண்டும்.அடுத்து இதில் உள்ள Next கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இறுதியாக நீங்கள் டெலிட்செய்திட்ட அனைத்துபைல்களும் உங்களுக்கு ப்ரிவியுவில் தெரியவரும்.
தேவையானதை தேர்வு செய்து ஓ.கே.தரவும். உங்களுக்கான இடத்தில் பைல்கள் சேமிக்கும்.பின்னர் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஞர்பகமறதிகாரணமாக அடிக்கடி பைல்களை டெலிட்செய்பவர்கள் இந்த சாப்ட்வேரினைபயன்படுத்திக்கொள்ளலாம்.பயனப்டுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன் 
வேலன்.

4 comments:

  1. Thank u velan sir this very tiny but powerful apps

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் அண்ணா நன்றி

    ReplyDelete